எல்லாம் பெருத்துப் போச்சு !

This entry is part 9 of 9 in the series 1 ஜூலை 2018

 

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

 

++++++++++++++++++

 

எல்லாம் பெருத்துப் போச்சு !

எங்கும் பெருத்துப் போச்சு !

சுகிக்க முடிய வில்லை  என்னால் !

உன் விழிக்குள் நோக்கி னால்

என் மீது காதல் தெரியுது.

நெஞ்சின் ஆழத்தில் தோண்டத் தோண்ட  

நிரம்பத் தகவல் புரியுது !

செரிக்க முடிய வில்லை என்னால் !

உன் அங்கம் முழுவதும் மின்னுது

காந்தக் கவர்ச்சி !

என்னால்  தாங்க முடிய வில்லை

கவர்ச்சி மிகுந்து போச்சு !

 

கால  வெள்ளத்தின் ஆற்றோட்டம்

மேலே தூக்குது நம்மை,

மீண்டும், மீண்டும்

பிறக்கும் பிறவி களாய் !

எங்கு நீ இருந்தால் என்ன ?

எனக்கு விருப்போ, வெறுப்போ

எதுவும் இல்லை !

எல்லாம் பெருத்துப் போச்சு !

எங்கும் பெருத்துப் போச்சு !

என்னால்

அனுபவிக்க முடிய வில்லை  !

 

உன் அங்கம் முழுவதும் மின்னுது

காந்தக் கவர்ச்சி !

இன்புற முடிய வில்லை என்னால் !

உலகப் பெருவிழா

ஒரு பிறந்த நாள் தித்திப்பு !

ஒரு துண்டு மட்டும்

உனக்காக எடுத்துக் கொள் !

அதிகம் வேண்டாம் !

 

விண்மீன் வெள்ளிக் கதிரொளியில்

என்னைப் படகில் அனுப்பு !

சுதந்திரமாய் இருப்பேன்

நானங்கு !

எங்கும் நான் நிறைந்துள்ளதாய்

எடுத்துக் காட்டு !

ஆனால் மாலைத் தேநீர் அருந்த

வீட்டுக் கென்னை

அனுப்பி விடு !

 

இப்போது பெருத்துப் போச்சு !

இங்கே மிகுந்துள்ளது

பல பேருக்கு !

சுகிக்க முடிய வில்லை என்னால் !

கொடுக்கக் கொடுக்க

குறைவ தில்லை அறிவு !  

நிறையு துனக்கு !

அதிகமாய்க் கற்கக் கற்க  

அறிவு பெருக வில்லை 

​ ​

எனக்கு !

இப்போது தீங்கு பேரளவு

பெருகிப் போச்சு !

உலகம் செரிக்க முடியாத

சீரழிவு

நிறைந்து போச்சு !

 

++++++++++++++++++ 

Series Navigationகழுத்தில் வீக்கம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *