பீட்டில்ஸ் இசைப் பாடல்கள் பளபளப்பு உடைப் பாவை

This entry is part 9 of 9 in the series 22 ஜூலை 2018

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

பளபளப்பு உடைப் பாவை !

பாலிதீன் அணிப் பாவையை

அவசியம் நீ

பார்க்க வேண்டும் !

கவர்ச்சி மேனி உடையவள்,

ஆயினும்

ஆடவன் போல் தெரிபவள் !

நடையைப் பார்க்க வேண்டும்

அவசியம் நீ !

பாலிதீன் உடை அணிந்த

பளபளப்பு மங்கையை

அவசியம் நீ

பார்க்க வேண்டும் !

குதி உயர் நீள்பூட் அணிந்தவள்

மதி மயக்கும்,

கம்பீரக் காட்சி ஒன்றைப் பார் !

கொல்லும் பார்வை,

நறுமணம் பூசிய கோதை !

சிற்றிடை, ஜிகுஜிகு உடை, செருநடையில்

சுற்றி அவள் வந்தால்

அதுதான்,

பரபரப்பு உலகுச் செய்தி !

கடுங் கவர்ச்சி மங்கை அவளே !

அவளே !

Series Navigationபூதக்கோள் வியாழனைச் சுற்றிவரும் புதிய 12 வெளிப்புறத் துணைக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *