நல்லதோர் வீணை செய்தே….

This entry is part 8 of 8 in the series 9 செப்டம்பர் 2018

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

”நான் செய்யாதவரை எந்த வீணையும் நல்லவீணையில்லை.
எனவே நலங்கெடப் புழுதியில் எறிவது குறித்த கேள்விக்கே இடமில்லை”.
என்று அடித்துச்சொல்லியபடி,

இசையில் அரைகுறை கேள்விஞானமோ
காலேஅரைக்கால் வாய்ப்பாட்டுப் பயிற்சியோ
அல்லது வாத்தியப் பயிற்சியோ
இல்லாத அகங்கார இளவரசியொருத்தி

தனக்குக் கிரீடமும் அரியணையும் கிடைப்பதற்கான
குறுக்குவழியாக மட்டுமே கொண்டுள்ள மாமன்னரின்
வணக்கத்திற்குரிய அத்தனை வீணைகளையும் ஆங்காரமாய்ப்
போட்டுடைக்கத் தொடங்கியிருப்பதைப் பார்த்து

மேலேயிருந்து கையறுநிலையில் மன்னர் விம்மியழ

விண்மீன்களும் கண்கலங்கின.
வேதனையில் புண்ணாகிக் கொதித்துவீசத் தொடங்கியது காற்று…..

இங்கோ
மகன் தந்தைக்காற்றும் உதவி யவனுக்குகந்தவர்களை
நிந்திப்பது என்று எழுதாத திருவள்ளுவரை அடுத்து
வறுத்தெடுக்கத் தொடங்குவதே
அவளுடைய அஜெண்டாவென அறிவித்தால் _

அதற்கும் ஆயிரம் லைக்குகளை
அள்ளியிறைக்க பரபரத்துநீள்கின்றன

குறைகுடங்களின் அரைவேக்காட்டுக் கைகள்.

Series Navigationஎன் நாக்கு முனையில் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
author

ரிஷி

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *