முகலாயர்களும் கிறிஸ்த்தவமும் 1

This entry is part 1 of 8 in the series 9 செப்டம்பர் 2018

பி எஸ் நரேந்திரன் பதினைந்தாம் நூற்றாண்டில் கோவா வெள்ளைக்கார கடற்கொள்ளையர்களின் (Pirates) தளமாக இருந்தது. அவர்களின் அட்டூழியம் கட்டுமீறிப் போவதனைக் கண்ட தக்காண சுல்தான்கள் அவர்களை அங்கிருந்து விரட்டினார்கள். அதற்குச் சில காலம் கழிந்து போர்ச்சுக்கீசியர்கள் அவர்களின் தளபதியான அல்பகர்க் (Albuquerque) தலமையில் கோவாவின் மீது படையெடுத்து அங்கிருந்த தக்காணத்து சுல்தானின் படைகளை விரட்டியடித்தார்கள். கோவா போர்ச்சுக்கீசியர்களின் காலனியாதிக்க நாடாக மாறியது. தனது நாட்டில் கால்காசுக்கும் பெறாத உபயோகமற்ற சோம்பேறிகள் கோவாவாசிளின் இரத்தத்தை உறிஞ்சி வாழ ஆரம்பித்தார்கள். […]

எழுத்தாளர் பெருமாள் முருகனுடன் நியூ ஜெர்ஸியில் ஒரு வாசகர் சந்திப்பு:

This entry is part 2 of 8 in the series 9 செப்டம்பர் 2018

(Details of this in English is given below after Tamil version too.) எழுத்தாளர் பெருமாள் முருகன் தொழில் ரீதியாக ஒரு தமிழ்ப் பேராசிரியர். நவீன தமிழ் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சியும் புலமையும் கொண்டவர். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எனத் தொடர்ந்து தடம் பதித்து இயங்கி வருபவர். திறனாய்வாளர். கொங்கு நாட்டுச் சொல்லகராதியைத் தொகுத்து வெளியிட்டவர். அமெரிக்கா வந்திருக்கிற அவருடன் ஒரு வாசக சந்திப்பு நியூ ஜெர்ஸியில் நடக்க விருக்கிறது. […]

வேறென்ன வேண்டும்?

This entry is part 3 of 8 in the series 9 செப்டம்பர் 2018

பிச்சினிக்காடு இளங்கோ இறைவா நீ வயிற்றுக்குச்சோறிடும் உழவனாய் இருப்பதறிந்து மதிக்கிறேன் இறைவா உன்னை கழிவுகள் அகற்றும் துப்பரவுத்தொழிலாளியாய்க் கண்டு துதிக்கிறேன் இறைவா உன்னை வியர்வையை விதைக்கும் தோழனாய்க் கண்டு தொழுகிறேன் இறைவா நீ நீதிமன்றத்தில் நடுவராய் இருந்து வழங்கிய நீதிக்கு வணங்குகிறேன் வாங்கிக்கொண்டு நீதியை விற்றதுகண்டு வெதும்புகிறேன் நடுவராய் இருந்து நடுநிலைப்பேணினால் நல்லது ஒருபக்கம் தலைசாயும் உனக்காகத் தலைவணங்குவது நியாயமா? கர்ப்பகிரகத்திலேயே கண்டுகொள்ளாமல் இருக்கும் உன்னை கண்டுகொள்வது எப்படி? உன்னைத்தொழுவதாய் உன்பெயரைச்சொல்லி உன்முன்னே உன்னைமறப்பவனை உன்னைமறைப்பவனை விளையாட […]

மருத்துவக் கட்டுரை நோய்க் கிருமித் தொற்றுகள்

This entry is part 4 of 8 in the series 9 செப்டம்பர் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் நம் உலகில் நுண்ணுயிரிகள் நிறைந்துள்ளன. நம் கண்களுக்குத் தெரியாத இவைகளில் பெரும்பான்மை மனிதனுக்கு தொல்லை தராதவை. இவற்றில் பல உயிருக்கு தேவையானவையும் கூட. இவற்றில் சில மனித உடலின் வெளியிலும் உள்ளேயும் வாழ்கின்றன. இவ்வாறு மனித உடலினுள் வாழும் சில வகையான கிருமிகள் உடலின் சில செயல்பாடுகளுக்கு உதவுகின்றன. ஆனால் இவற்றில் சில நோய்களை உண்டுபண்ணி உயிருக்கு உலை வைக்கவும் செய்யும் ஆபத்தானவை. இத்தகைய வைரஸ், பேக்டீரியா, புரோட்டோசோவா, புழுக்கள் போன்றவையே தொற்று […]

தொடுவானம் 239. தோல்வியும் தீர்மானமும்

This entry is part 5 of 8 in the series 9 செப்டம்பர் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் 239. தோல்வியும் தீர்மானமும் மினி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இரண்டு குருவானவர்களில் மறைதிரு பிச்சானந்தமும் மறைத்திரு ஐ.பி. சத்தியசீலனும் வென்றுவிட்டனர். குருவல்லாதவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அதிஷ்டம் பிச்சைப்பிள்ளை, அருமைநாயகம், எட்வர்ட் தங்கம், ஆகிய மூவரும் வென்றனர். என்னுடைய பெயர் நான்காவதாக வந்தது! இந்தத் தோல்வியை நான் ஏற்றுக்கொண்டேன். நான் லுத்தரன் முன்னேற்ற இயக்கத்துக்குப் புதியவன். வென்றவர்கள் மூவரும் இயக்கத்தின் துவக்க காலத்திலிருந்து செயல்படும் தலைவர்கள் எனலாம்.அந்த வகையில் எனக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளதே […]

பூமிக்கு அருகில் ஒன்றை ஒன்று ஒருநாளில் சுற்றி வரும் அபூர்வ இரட்டை முரண்கோள் கண்டுபிடிப்பு

This entry is part 6 of 8 in the series 9 செப்டம்பர் 2018

Rare Binary Asteroid Discovered Near Earth An Artist’s Depiction of Rare Asteroid 2017 YE-5, Discovered is Actually Two Separate Pieces of Rock, Each 3000 feet across, Circling Each Other, Every 20 -24 ?Hours. Credit: NASA/JPL-Caltech சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++   https://www.space.com/41154-rare-binary-asteroid-discovery-near-earth.html https://www.space.com/40943-nasa-asteroid-defense-plan.html ++++++++++++++++++++++ பூமிக்கு அருகில் அபூர்வமாக ஒன்றை ஒன்றைச் சுற்றும் இரட்டை முரண்கோள் […]

என் நாக்கு முனையில் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 7 of 8 in the series 9 செப்டம்பர் 2018

மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ என்ன சொல்ல வேண்டும் என்றெண்ணி உன்னோடு பேச விழையும் போது சில சமயம் எனக்கு ஓரிரு நாட்கள் கூட ஆகும் ! ஆனால் சொற்கள் வெளி வராமல் நின்றுவிடும் நுனி நாக்கில் ! நீல நிறம் வானில் மங்கும் போது, வேலை இருப்ப தில்லை எனக்கு ! உனக்குச் சொல்ல புதிதாய் ஒன்றை நினைத்துப் பார்ப்பேன் ! ஆனால் சொற்கள் வெளி வராமலே […]

நல்லதோர் வீணை செய்தே….

This entry is part 8 of 8 in the series 9 செப்டம்பர் 2018

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ”நான் செய்யாதவரை எந்த வீணையும் நல்லவீணையில்லை. எனவே நலங்கெடப் புழுதியில் எறிவது குறித்த கேள்விக்கே இடமில்லை”. என்று அடித்துச்சொல்லியபடி, இசையில் அரைகுறை கேள்விஞானமோ காலேஅரைக்கால் வாய்ப்பாட்டுப் பயிற்சியோ அல்லது வாத்தியப் பயிற்சியோ இல்லாத அகங்கார இளவரசியொருத்தி தனக்குக் கிரீடமும் அரியணையும் கிடைப்பதற்கான குறுக்குவழியாக மட்டுமே கொண்டுள்ள மாமன்னரின் வணக்கத்திற்குரிய அத்தனை வீணைகளையும் ஆங்காரமாய்ப் போட்டுடைக்கத் தொடங்கியிருப்பதைப் பார்த்து மேலேயிருந்து கையறுநிலையில் மன்னர் விம்மியழ விண்மீன்களும் கண்கலங்கின. வேதனையில் புண்ணாகிக் கொதித்துவீசத் தொடங்கியது காற்று….. […]