நீ என்னைப் புறக்கணித்தால் !

This entry is part 5 of 9 in the series 16 செப்டம்பர் 2018

 

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

என்றாவது நீ என்னை விலக்கிச்

சென்றால்,

துயரில் கிடப்பேன் பரிதவித்து !

என்னை விட்டுப் போகாதே

என்றென்றும் !

உன் மீது காதல் எனக்கு அறிந்திடு.

நீ பிரிவதை அறிந்தால்,

புள்ளினம் வாடும்

என்னைப் போல் தனித்து !

ஒரே ஒருத்தி யான,

உன்னை நான் இழந்து விட்டேன் 

என்று அறிந்தால்,

துயர்க் கடலுள் மாயும்  !

மரத்து இலைகள் கேட்பின் சலசலத்து

முணுமுணுக்கும் !

என்னை அழவைத்து நீ

சென்றதை,

தென்றல் மூலம் அவை அறிந்தால்,

துயரில் அலறும் கதறி !

தெரியும் எனக்கு நீ

பிரிந்து செல்லாய் என்று !

நினைவில் உள்ளதா

செப்பினாய் அப்படி ஒருநாள் ?

நான் அதனால்

புறாவைக் கூண்டில்  போட

மறப்பேனோ ?

பறந்து போகக்  கூட்டைத்

திறப்பேனோ ?

 

+++++++++++++

Series Navigationதொடுவானம் 240. புதிய ஆலோசனைச் சங்கம்வால்மீன் நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி இரண்டும் வால்மீன்கள் நீண்ட காலம் இயங்கி வரக் காரணம் ஆகலாம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *