மருத்துவக் கட்டுரை ரூபெல்லா ( RUBELLA )

This entry is part 5 of 10 in the series 14 அக்டோபர் 2018

டாக்டர் ஜி. ஜான்சன்

ரூபெல்லா என்பதை ஜெர்மன் தட்டம்மை ( German Measles ) என்று அழைக்கலாம். இதற்கு மூன்று நாள் தட்டம்மை என்றும் பெயர் உள்ளது. இது சிறு பிள்ளைகளுக்கு வரும் வைரஸ் நோய். இது தட்டம்மையை ஓத்திருந்தாலும் இது வேறு வகையான வைரஸ் கிருமியால் உண்டாகிறது. அதோடு இது தட்டம்மையைப் போல் அவ்வளவு வீரியம் மிக்கதோ ஆபத்தானதோ கிடையாது.
ரூபெல்லா ஆர்.என்.ஏ. வைரஸ் வகையால் ஏற்டுகிறது. இந்த வைரஸ் காற்று வழியாக நோயுற்றவரிடமிருந்து அடுத்தவருக்குப் பரவும் தன்மையுடையது. 14 வயதுக்குள் உள்ள பிள்ளைகளுக்கு இது ஏற்படும். இதன் அடைக் காலம் 14 முதல் 21நாட்கள். அதன் பின்பு பலவீனம்,காய்ச்சல், கண்வலி, தலையின் பின்பக்கம், காதுகளின் பின்பக்கம், கழுத்து ஆகிய பகுதிகளில் தோலுக்கு அடியில் சிறு நெறிக்கட்டிகளாக தோன்றும்.. 7 நாட்கள் கழித்து முகத்திலும் நெஞ்சிலும், முதுகிலும் சிவந்த புள்ளிகள் தோன்றும். அவை 3 நாட்களுக்குப்பின்பு மறைந்துவிடும்..அவை தோன்றுமுன் 2 வாரங்களும் தோன்றியபின்பு 2 வாரங்களும் நோயாளி தோற்றும் தன்மை கொண்டவராக இருப்பார்.அப்போது அவர் இருமும்போதும், தும்மும்போதும் வைரஸ் தோற்று உண்டாகலாம். கருவுற்ற பெண்களுக்கு இது உண்டானால் சிசு பாதிப்புக்கு உள்ளாகும். கருவுற்ற 3 மாதங்களில் தாய்க்கு ரூபெல்லா உண்டானால் பிறக்கும் குழந்தைக்கு உண்டாகும் பின்விளைவுகள் வருமாறு:
* வளர்ச்சி குன்றுதல் ( Growth Retardation )
* கண்ணில் புரை ( Cataract )
* காது கேளாமை ( Deafness )
* பிறவி இருதயக் குறை[பாடு ( Congenital Heart defects )
* இதர உறுப்புகளில் குறைபாடு ( Defects in other organs )
* குன்றிய அறிவு வளர்ச்சி ( Intellectual disabilities )

பரிசோதனைகள்
நோயாளியை மருத்துவர் பார்த்து பரிசோதிக்கும்போதே இது ரூபெல்லா என்று கூறிவிடலாம். இருப்பினும் தேவைப்பட்டால் இரத்தப் பரிசோதனையில் IgG என்பதின் அளவு 2 வாரங்களில் உயர்ந்தால் நோய் நிச்சயிக்கப்படலாம்.

சிகிச்சை முறை.
அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை தரப்படும்.

பின்விளைவுகள்

அதிகமான பின் விளைவுகள் கிடையாது. சிலருக்கு எலும்பு வலி, மூளை அழற்சி, ” த்ரோம்போசைட் ” வெள்ளை இரத்த அணுக்கள் குறைவு ஆகியவை உண்டாகலாம்.

தடுப்பு முறைகள்

MMR என்னும் முத்தடுப்பு ஊசி போடுதல் மூலம் இந்த நோயைத் தடுக்கலாம்.இதை குழநதைகளுக்கு 12 முதல் 15 மாதங்களிலும் மீண்டும் 4 முதல் 6 வயதுக்குள் போடலாம்.
கருவுற்ற பெண்கள் இந்த தடுப்பு ஊசியப் போட்டுக்கொள்ளக் கூடாது.

( முடிந்தது )

Series Navigationஉங்களது ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு, ப்ரீபெய்டு கார்டு போன்றவை தொலைந்து விட்டால்டாக்டர் அப்துல் கலாம் 87
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *