நரேந்திரன் குறிப்புகள் (திருமாலிருஞ்சோலை, எகிப்து, Vitalik Buterin)

This entry is part 1 of 10 in the series 14 அக்டோபர் 2018

ராஜாஜியின் திருமாலிருஞ்சோலை சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாயிருந்த சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் “திருமாலிருஞ்சோலை” என்கிற பெயரில் ஒரு தலையணை சைஸ் புத்தகம் எழுதியிருக்கிறார். பலரும் அறியாத அற்புதமான வரலாற்றுத் தகவல்களுடன் தலபுராணத்தையும் கூறுகிற புத்தகம். அதிலிருந்து எடுக்கப்பட்டது இந்தப் படம். எகிப்தின் பேரரசர் ஒருத்தர் நாமம் தரித்துக் கையில் சடாரி வைத்திருந்த வைஷ்ணவர் என்கிறார் ராஜாஜி. அதற்கான ஆதாரமாக பைபிளையும் ஆதாரமாகக் கொடுக்கிறார். இன்னொரு படத்திலிருக்கிற வைஷ்ணவர் எகிப்தின் பிரமிடுகளைக் கட்டியவர் எனக்கூறி அதற்கும் புத்தக ஆதாரம் […]

சுண்டல்

This entry is part 2 of 10 in the series 14 அக்டோபர் 2018

தேவையான பொருட்கள் 1 மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் (ருசிக்கேற்ப) 2 தேக்கரண்டி கடுகு 6 கறிவேப்பிலை இலைகள் 3 காய்ந்த மிளகாய் உடைக்கப்பட்டது (விதைகளை எடுத்துவிடவும்) 1/4 தேக்கரண்டி பெருங்காயம் 2 கோப்பை காபூலி சென்னா, அல்லது வெள்ளைகொண்டைக்கடலை, ஊறவைத்து, சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தது. (கருப்பு கொண்டைக்கடலையும் உபயோகப்படுத்தலாம்) 1/4 கோப்பை துருவிய தேங்காய் தூள் உப்பு தேவையான அளவு எலுமிச்சை துண்டுகள் இரண்டு செய்முறை எண்ணெயை ஒரு வாணலியில் நடுத்தரமான […]

4. தெய்யோப் பத்து

This entry is part 3 of 10 in the series 14 அக்டோபர் 2018

இப்பகுதில் உள்ள பத்துப் பாடல்களிலும் ‘தெய்யோ’ என்னும் அசைச்சொல் இறுதியில் வருவதால் இப்பகுதி தெய்யோப் பத்து என வழங்கப்படுகிறது. துன்பத்தில் உழன்று மீண்டவனை ‘நீ எப்படித் தாங்கினையோ தெய்ய’ என்பது போலப் பொருள் கொள்ளலாம். தெய்யோ என்பது பொருளில்லாத அசைச்சொல்லாகும் ==================== தெய்யோப் பத்து—1 யாங்கு வல்லுநையோ ஓங்கல் வெற்ப! இரும்பல் கூந்தல் திருந்திழை அரிவை திதலை மாமை தேயப் பசலை பாயப் பிரிவு தெய்யோ? [யாங்கு=எவ்வாறு; வல்லுநையோ=வல்லவன் ஆயினையோ?; ஓங்கல்=மலை; வெற்ப=மலைநாட்டுத் தலைவன்; இழை=அணிகலன்; திதலை= […]

உங்களது ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு, ப்ரீபெய்டு கார்டு போன்றவை தொலைந்து விட்டால்

This entry is part 4 of 10 in the series 14 அக்டோபர் 2018

முதுவை ஹிதாயத் இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் பொது நலன் கருதி நாளிதழ் ஒன்றில் விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது பாஸ்வேர்டு, பின், ஓடிபி, சிவிவி, யூபிஐ-பின் போன்ற தகவல்களை மற்றவர்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் உங்களது ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு, ப்ரீபெய்டு கார்டு போன்றவை தொலைந்து விட்டால் அல்லது திருடு போனால் அவற்றை உடனடியாக முடக்கி விடவும். மேலும் விபரங்களுக்கு […]

மருத்துவக் கட்டுரை ரூபெல்லா ( RUBELLA )

This entry is part 5 of 10 in the series 14 அக்டோபர் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் ரூபெல்லா என்பதை ஜெர்மன் தட்டம்மை ( German Measles ) என்று அழைக்கலாம். இதற்கு மூன்று நாள் தட்டம்மை என்றும் பெயர் உள்ளது. இது சிறு பிள்ளைகளுக்கு வரும் வைரஸ் நோய். இது தட்டம்மையை ஓத்திருந்தாலும் இது வேறு வகையான வைரஸ் கிருமியால் உண்டாகிறது. அதோடு இது தட்டம்மையைப் போல் அவ்வளவு வீரியம் மிக்கதோ ஆபத்தானதோ கிடையாது. ரூபெல்லா ஆர்.என்.ஏ. வைரஸ் வகையால் ஏற்டுகிறது. இந்த வைரஸ் காற்று வழியாக நோயுற்றவரிடமிருந்து அடுத்தவருக்குப் […]

டாக்டர் அப்துல் கலாம் 87

This entry is part 6 of 10 in the series 14 அக்டோபர் 2018

தேவாலயம் திருக்கோயில் மசூதிகளிலெல்லாம் அமைதிப்புறாவாய் அமர்ந்தவர் மரக்கலம் வாழ்க்கையில் விண்கலம் கண்டவர் மீன்பிடி ஊரில் மின்னலைப் பிடித்தவர் இரை கேட்கும் வயதில் இறக்கைகள் கேட்டவர் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பூங்குன்றனாரைப் பூவுலகிற்குச் சொன்னவர் கோடிக் குழந்தைகளைக் கூர் தீட்டியவர் நூறு கோடி மக்கள் இதயவீடு தந்தும் காலடியில் வாழ்ந்தவர் வறியோருக்காக வாரித் தந்தவர் பகை, சோம்பலுக்கு அர்த்தம் அறியாதவர் விண்ணின் உச்சியை விண்கலத்தால் தேடியவர் வல்லரசு வரிசையில் இந்தியாவை இணைத்தவர் இளையர்களுக்குள் கிடக்கும் இமயத்தைச் […]

அறுவடை

This entry is part 7 of 10 in the series 14 அக்டோபர் 2018

பிச்சினிக்காடு இளங்கோ 28.9.2018) அனைத்துப்பையிலும் அதுதான் இருக்கிறது அதற்காகத்தான் உயிர்வளி நுழைந்து திரும்புகிறது அதுவே முதன்மையெனில் அதுமட்டும் எப்படி சாத்தியம்? விழுந்து விழிதிறக்காமல் சிரித்துச்செழிக்காமல் ஆயுதம் இருந்தும் ஆவதென்ன? விளைச்சலுக்கு விழுக்காடு குறைவுதான் அதற்காக என்பதிலே இருக்கிறது……. பொருள்படப் பொழுதை இழப்பதை விடுத்து சாக்குப்பையோடு அழைவதில் பொருளில்லை எனினும் அதற்கான அலைச்சலில் பெருவிழுக்காடு சுவாசித்துக்கொண்டிருக்கிறது சுவாசம் விலங்கிற்கும் தாவரங்களுக்கும் பொதுவானது அதுவா இலக்கு? அதுவா பயணம்? எச்சத்தால் பேசப்படும் ஒரு பேச்சுக்காகவே ஐம்புலன்களளும் சுவாசமும்.

தொடுவானம் 224. கமிஷன்

This entry is part 8 of 10 in the series 14 அக்டோபர் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் 224. கமிஷன் தொலைபேசி மூலம் செயலர் அதிஷ்டம் பிச்சைப்பிள்ளையுடன் தொடர்பு கொண்டேன். அவரைச் சந்திக்க நேரம் கேட்டேன். அவர் சனிக்கிழமை மாலை மயிலாடுதுறை வரச் சொன்னார். சனிக்கிழமை காலை பத்து மணிக்கு மேகநாதன் வாடகை ஊர்தி கொண்டுவந்தார். நாங்கள் புறப்பட்டோம். புதுக்கோடடை வழியாக தஞ்சாவூர் சென்றோம். தஞ்சை பெரிய கோவிலின் எதிர்புறத்து கடைத்தெருவில் ஒரு உணவகத்தில் மதிய உணவை முடித்துக்கொண்டோம். அது சுடச்சுட சுவையான கோழி பிரியாணி. அவர்தான் பணம் கட்டினார். கும்பகோணம் […]

ரஷ்ய சோயுஸ் ராக்கெட் ஏவியதும் பழுதாகி, குறிப்பயணம் தோல்வி யுற்று விண்சிமிழ் திரும்பி இயக்குநர் இருவர் பாதுகாப்பாய் பூமிக்கு மீண்டார்

This entry is part [part not set] of 10 in the series 14 அக்டோபர் 2018

Russian Soyuz Rocket சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++++++   விண்வெளி மீள்கப்பல்  யாவும் ஓய்வெடுக்க நாசா முடிவு செய்தது ! அகில நாட்டு நிலையத்து விமானிகட்கு உணவு, குடிநீர், சாதனங்கள் ஏந்திச் செல்ல ஏவு கணை விண்சிமிழ்கள் தேவை நாசா வுக்கு ! இப்போது அப்பணியைத் தப்பாது செய்து வரப் புறப்பட் டுள்ளது மனிதரற்ற ஜப்பான் பளு தூக்கி ! நிலையத் தோடு இணைக்கப் பளு தூக்கியைப்  பற்றி  இழுப்பது கனடாவின் […]

சூரியன் பின் தொடர்வேன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 9 of 10 in the series 14 அக்டோபர் 2018

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++ ஒருநாள் தெரியும் உன் கண்ணுக்கு ஓடிப் போனேன் நானென்று ! ஆனால் நாளை மழை தூவலாம் ! நானும் சூரியன் பின் போகலாம் ! ஒருநாள் அறிவாய் நீ உனக்கு ஏற்றவன் நானென்று ! ஆனால் நாளை மழை தூவலாம் ! நானும் சூரியன் பின் போகலாம் ! நேரம் வந்து விட்டது, ஆருயிர்க் காதலி ! பிரிய வேண்டும் நானும் ! இறுதியாய் காதலி ஒருத்தியை நான் […]