பிறந்துள்ளது கறுப்புக் குழந்தை !

This entry is part 5 of 7 in the series 21 அக்டோபர் 2018

 

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

++++++++++++++++

 

கண்மணி ! என் செய்வேன் ?

பிறந்துள்ளது, கறுப்புக் குழந்தை !

பேதலிக்கும் என் நெஞ்சம் !

காதலியே என் செய்வேன் ?

கறுப்புக் குழந்தை பிறந்துள்ளது !

மனக்கவலை எனக்கு !

கனிவோடு சிசுவை அணைத்து

கறுத்த உடை அணிவாள் !

திரும்பி வாராது சிறுவன் போயினும்

கறுத்த ஆடையே அணிவாள்.

கண்மணி சொல் ! என் செய்வேன் ?

கவலைப் படும் என் மனம்.

அவள் மீது ஆசை எனக்கு !

கறுத்த பிள்ளை மீது விருப்பு

அவளுக்கு !

எத்தனை நாள் இருக்கும்

இந்த ஆசை ?

தவறை அவள்  உணர்வாளா ?

கறுப்பு சிசு பிறந்துள்ளது,

கவலைப் படும் என் மனம் ?

 

+++++++++++++++++++++

Series Navigation2022 ஆண்டுக்குள் 100,000 மெகாவாட் சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் நிறுவ இந்திய மத்திய அரசு திட்டமிடுகிறதுமருத்துவக் கட்டுரை – ஹெர்ப்பீஸ் வைரஸ் ( Herpes Virus )
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *