உதவி செய்ய வா !

This entry is part 5 of 10 in the series 4 நவம்பர் 2018

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா


வாரீர் உதவ எனக்கு

யாராவது !

எவனோ ஒருத்தன் இல்லை

எனக்குதவி செய்யும்

ஒருவன் !

இன்றைவிட இன்னும்

இளைஞனாய் இருந்த போது ,

எந்த முறையிலும்

எவன் உதவியும் நாடிய தில்லை !

அந்த நாட்கள் போயின !

இப்போது,

சுய மதிப்பில்லை எனக்கு !

என்னிதயம்

மாறிப் போனதாய்

இப்போ தெனக்குத் தெரியுது !

வீட்டுக் கதவை

திறந்து வைத்தேன் !

முடிந்தால் எனக்குதவ வாரீர் !

ஒடிந்து போச்சு மனது !

என்னைச் சுற்றி வருகிறாய் !

என் பாதங்கள் தரையில் படிய

எனக்குதவ வாராய் !

தயை புரிந்து

எனக்குதவ மாட்டாயா ?

என் வாழ்க்கை மாறிப் போனது

பல்வேறு முறைகளில்.

என் சுதந்திரம் தேய்ந்து போனது,

நாளொரு பொழுதும்

தாழ்கிறேன் சுய மதிப்பிழந்து !

நீ உதவ வேண்டு மென,

இப்போது நான் உணர்கிறேன் !

இயன்றால் எனக்கு உதவி செய் !

இடிந்து போயுள்ளேன் !

என்னைச் சுற்றி வரும் நீதான்

எனக்குதவ வேண்டும் !

இத்தரையில் நான் காலூன்ற

எனக்குதவ மாட்டாயா ?

Series Navigationதொடுவானம் 227. ஹைட்ரோஃபோபியாகடல் அலையடிப்புகளில் தொடர்ந்தெழும் ஆற்றல் மூலம் மின்சக்தி ஆக்கும் பொறியியல் நுணுக்கம் விருத்தி அடைகிறது
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *