2019 பிப்ரவரி 22 தேதி ஜப்பான் கழுகு என அழைக்கப்படும் ஹயபூஸா -2 “ரியூகு” முரண்கோளில் இறங்கியுள்ளது

This entry is part 1 of 9 in the series 24 பெப்ருவரி 2019
Image result for Japan Hayabusa -2 landed on Ryugu

Japan Eagle Hayabusu -2 Lands on Asteriod Ryugu

[February 22,  2019]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

+++++++++++++++

  1. https://youtu.be/qeMwAdquDYM
  2. https://youtu.be/8H4aZX_8hMA
  3. https://youtu.be/mgfc0jliVjA

++++++++++++++++++

நிலவினில் முதற்தடம் வைத்து
நீத்தார் பெருமை யாய்
நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் !
செவ்வாய்க் கோள் ஆய்ந்திடத்
தவ்விய தளவுளவி களை 
நாசாவும்
ஈசாவும் கொண்டு இறக்கின !
வால்மீன் வயிற்றில் அடித்து
தூசிகளை ஆராய்ந்தார்
நாசா விஞ்ஞானிகள் !
விண்வெளியில் வால்மீன் ஒன்றை
விரட்டிச் சென்று வால் வீசிய
தூசியைப் பிடித்து வந்தார்
காசினிக்கு !
வக்கிரக் கோள் மாதிரி எடுத்து
வையத்தில் இறக்கிடும்
இப்போது ஜப்பானின்
ஹயபூசா முதல் விண்ணுளவி
அயான் எஞ்சனை இயக்கி
ஆறு பில்லியன் மைல் கடந்து
சீராய் மாதிரி கொணரும் !
ஹயபூசா -2 இன்று ரியூகுவில் இறங்கும் !
பூர்வ உயிர் மூலவிகள்
வேர் காணப் புறப்படும்
ஆர்வத் தளவுளவி.
2025 ஆண்டில்
அமெரிக்க விண்வெளித்  தீரர்
வக்கிரக் கோளில்
வைப்பர் தம் கொடி !

++++++++++++++++

  1. https://youtu.be/qeMwAdquDYM
  2. https://youtu.be/8H4aZX_8hMA
  3. https://youtu.be/mgfc0jliVjA


Image result for Japan Hayabusa -2 landed on Ryugu

+++++++++++++++++ஜப்பான் கழுகு ஹயபூசா -2 விண்கப்பல் புதிய முரண்கோளில் இறங்கியுள்ளது.
2018 ஆண்டு முதலாய் ஜப்பான் கழுகு என்னும் ஹயபுசா -2 தளவுளவி ரியூகு முரண்கோளை விரட்டிப் பிடிக்க முயன்று, 2019 பிப்ரவரி 22 இல் வெற்றிகரமாய் தகுந்த இடத்தில் இறங்கி யுள்ளது.  அதன் குறிக்கோள் முரண்கோள் ரியூகுவின் தள மாதிரி மண்ணை எடுத்துச் சேகரித்து, புவிக்கு மீளும் சுய இயக்குத் திட்டம்.  சின்னஞ் சிறு மண் மாதிரிகளைச் சேமிக்க தளவுளவி யில் பல்வேறு சுடும் கருவிகள் [Firing Projectiles] அமைக்கப் பட்டுள்ளன.   முரண்கோள் ரியூகு [ C-Type] [கார்பன் மூலக்கூறுகள்] கொண்டது.  அவை 4.5 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு சூரிய மண்டலம் எப்படி இருந்திருக் கலாம் என்று விளக்கம் அளிக்கும்.  அவற்றில் உயிரின மூலவிகள் தோன்றத் தேவையான  பூர்வ ஆர்கானிக் புரோட்டீன்கள் செழிக்கும் அமினோ ஆசிடுகள் [Amino acids] என்று எதிர்பார்க்கப் படுகிறது.  சூரிய மண்டலத்தில் உள்ள முரண்கோளில் மூன்றில் இருபங்கு [68%] கார்பன் மூலக்கூறுகள் கொண்டவை யாக  [C-TYPE]  கருதப் படுகின்றன.  ஜப்பான் சுய இயக்குத் தளவுளவி ஹயபூசா -2 போல் நாசா விஞ்ஞானிகளும்  ஆசிரிஸ் – ரெக்ஸ் விண்ணுளவி  [Osiriis-Rex Spacecraft]  தற்போது “பென்னு” என்னும் C-TYPE முரண்கோளை  [BENNU ASTEROID] ஆராய்ந்து வருகிறது.  1500 அடி அகலம் உடைய “பென்னு ” முரண்கோள் ரியூகுவை விடச் சிறியது.  அதன் மாதிரி மண்ணை 2023 இல் தான் நாசா புவிக்கு மீட்டுக் கொண்டுவரும்.  ஜப்பான் புவிக்குக் கொண்டுவரும் ரியூகு மாதிரி மண் 2020 இல் கிடைக்கும் என்று திட்டமிடப் பட்டுள்ளது.

Image result for Japan Hayabusa -2 landed on Ryugu
Image result for Japan Hayabusa -2 landed on Ryugu

ஜப்பான் விண்வெளித் தேடலில் முன்னோடி முயற்சிகள்சூரிய மண்டல மூலாதாரத் தோற்றத்தை ஆய்வு செய்யும் விண்வெளித் தேடல் பயணங்களில், சூரியனைச் சுற்றும் முரண்கோள்களைச் [Asteroids] சுற்றி, அவற்றில் தடம் வைத்து மாதிரி மண்ணை எடுத்துப் பூமிக்கு மீளும் யந்திர சுய இயக்கப் பொறி நுணுக்கத்தில் ஜப்பானை யாரும் மிஞ்ச முடியாது.  அந்த பயணங்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வருவது ஜப்பானின் “ஹயபுஸா-2” விண்ணுளவி.   அடுத்து புரியப் போகும் சாதனை பிப்ரவரி 22, 2019 இல் நிகழப் போகிறது.  அதாவது 880.மீடர். [540 அடி] விடமுள்ள “ரியூகு” முரண்கோளில்  ஹயபுஸா -2 இன் தளவுளவி இறங்கப் போகிறது.  முரண்கோளில் தடமிடும் இடம் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது..  2018 ]செப்டம்பரில் ஜப்பான் விண்வெளி ஆணையகம் [JAXA – JAPAN AEROSPACE EXPLORATION AGENCY]  10 கி.கிராம் [22 பவுண்டு] பளு உள்ள மாஸ்காட்   [MASCOT] [MOBILE ASTEROID SURFACE SCOUT] என்னும் தளவுளவியை  ஏவி வெற்றிகரமாக  அங்கே இறக்கியுள்ளது.

Japan Landers

மாஸ்காட் தளவுளவியின் கருவிகள் படங்களைப் பல்வேறு அலை நீளங்களில் பதிவு செய்யும்.  நுண்ணோக்கி மூலம் முரண்கோளின் தாதுக்களை ஆய்வு செய்யும்.  தள உஷ்ணத் தையும், காந்த சக்தியையும் அளக்கும்.  ஜப்பானிய  “கழுகு” எனக் கருதப்படும் ஹயபூஸா – 2 ஒரு சமயலறை ரெஃப்ரிஜெரேட்டர் அளவு கொண்டது.  2014 டிசம்பரில் ஏவப்பட்ட ஹயபுஸா 2 அனுப்ப ஆகும் நிதிச் செலவு சுமார் U$ : 260 மில்லியன்.  அது ரியூகு மாதிரி மண்ணை 2020 ஆண்டில் பூமிக்குத் தானாய்க் கொண்டு வரும்  என்று எதிர்பார்க்கப் படுகிறது.  அவ்விதம் எடுக்கப் பட்ட மண் மாதிரிகள் பிரபஞ்ச உயிரினங்கள் பற்றிய தகவலை  விஞ்ஞானிகளுக்கு கூறும்.  அத்துடன் வேறு எந்த மூலகங்கள் [Elements] சேர்ந்து, பூமியில் உயினங்கள் தோன்றின என்றும் அறிவிக்கும்.

[Click to Enlarge]

++++++++++++++++++++++++++++++++++++++++++++

https://en.wikipedia.org/wiki/162173_Ryugu
http://www.spacedaily.com/reports/Japan_space_probe_reaches_asteroid_in_search_for_origin_of_life_999.html

+++++++++++++++++++++

See the source image

ஜப்பான் கழுகு -2 பயணம்

+++++++++++++++++

Information News

  1. https://www.nytimes.com/2019/02/21/science/ryugu-asteroid-hayabusa2.html  [February 21, 2019]
  2. https://www.dailymail.co.uk/sciencetech/article-6215311/Japans-hopping-Ryugu-robots-send-video-surface-asteroid-180million-miles-away.html
  3. https://www.breitbart.com/news/touchdown-japan-probe-hayabusa2-lands-on-distant-asteroid/
  4. https://www.express.co.uk/news/science/1090651/Asteroid-landing-live-stream-japan-hayabusa-asteroid-ryugu-landing-watch-online
  5. https://www.express.co.uk/news/science/1090651/Asteroid-landing-live-stream-japan-hayabusa-asteroid-ryugu-landing-watch-online
  6. http://www.the-japan-news.com/news/article/0005561687 [February 22, 2019]
  7. https://en.wikipedia.org/wiki/Hayabusa2  [February 23, 2019]

++++++++++++++++++++++++

S. Jaybarathan  [jayabarathans@gmail.com] February 23, 2019]  [R-1]

Series Navigation10. மறு தரவுப் பத்து
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *