அண்மைக்கால நீதிமன்ற தீர்ப்புக்களும் அவை சொல்லும் கனமான செய்திகளும்.

This entry is part 3 of 8 in the series 10 பெப்ருவரி 2019

எஸ்ஸார்சி

முன்பு ஒருகாலத்தில் டூ- ஜி அலைக்கற்றை பேரம் என்னும் பூதம் இந்தியாவைஆட்டிப்படைத்தது.. பிடறி பிடித்து உலுக்கியது.. அந்த பகாசுர பேரத்தில் என்ன எல்லோமோ இங்கு நடந்துவிட்டதாய் மக்கள் திணறிப்போயிருந்தார்கள்.ஒரு மிகப்பெரிய ஜன நாயக நாட்டின் தேர்தலையே அது திக்குமுக்குஆடவைத்தது.

அழுக்குச்சட்டையே போடும் சாதாரண மனிதர்கள் கேட்டதுமே மலைத்துப்போய் நிற்கும் ஒரு எண்ணிற்கு எத்தனை பூச்சியம் உங்களுக்குத்தெரியுமா ? என்பதைத் தேர்தல்பிரச்சார மேடைதோறும் அரசியல்வாதிகள் முழங்கி மக்களை அச்சத்தில் ஆழ்த்தினார்கள்.

அந்த மாயமானை உலகுக்கு அறிவித்த இந்தியாவின் ஆகப்பெரிய தணிக்கை அதிகாரி அன்று சாமானிய மக்களுக்குக் காக்கும் கடவுளெனத்தெரிந்தார் இதை இப்படி விடவே முடியாது விட்டு விட்டால் இந்த.தேசமே அழிந்து சூன்மாய்ப்போய்விடும் என அப்போது நீங்களும் நாங்களும் எண்ணியிருந்தோம்

.ஆனால் நாட்டின் தலை நகரத்து ஒரு நீதிபதி அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவே இல்லை இனி எல்லோரும் நிம்மதியாக இருங்கள் அவரவர் வேலையைப்பாருங்கள். சம்பந்தப்பட்டவர்களால் .எனக்கு க்காட்டப்பட்ட விபரங்கள் எப்படியோ அப்படித்தான் அமைகிறது என் தீர்ப்பு.இப்படியாக ஒரு அர்த்தமுள்ள விளக்கமும் தந்தார்..

ஆகத்தனக்குத்தெரிந்தோ அல்லது தெரியாமலோ வந்துசேரும் பழிபாவத்திலிருந்து அந்த நீதிபதி விடுதலையும் பெற்றுக்கொண்டுவிட்டார். நியாயங்கள் தோற்றுப்போகும் ஆனால் தருமங்கள் பழிவாங்கித்தீரும் என்று ஊனச் சமாதானத்தைத் தேவைப்பட்டவர்கள் மாத்திரம் சொல்லிக்கொண்டு ஒருவழியாய்ச் சமாதானம் அடைந்துவிட்டோம்.

கேரளத்து நம்பி நாராயணன் என்கிற வானியல் அறிஞருக்கு இழைக்கப்பட்ட அநியாயம் எந்தப்புனித கங்கையில் வீழ்ந்து எழுந்தாலும்தொலையவே தொலையாது.இதை மனச்சாட்சி உள்ளவர்கள் அறிவார்கள். கேரளத்துக்காவல்துறையின் பூடகமான சதி விஷயத்தை எழுத்தாளர் பால் சச்சாரியாதான் வெளியே கொண்டுவரக்காரணமாயிருந்தார்.. கேரளத்து இடதுசாரி பெரிய ஆளுகை ரூபாய் ஐம்பது லட்சத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நாராயணனுக்கு நஷ்ட ஈடு அளித்து ஒரு சரித்திரத்தை எழுதியது தொலைக்காட்சியில் இதைப்பார்த்தவர்கள் திணறிப்போனார்கள்..சாதாரண மக்களின் அடி மனத்தில் இப்படிக்கூட ஒரு நல்ல மனிதருக்கு அநியாயம் நடக்குமா என்று ஒரு கேள்வி இன்னும் புகைந்துகொண்டு இருக்கிறது

சமீபமாக பத்ம விருதுக்கு ஏற்புடையவராக அவரை த்தேர்வு செய்து இருக்கிறார்கள்.

சபரிமலைக்குப்பெண்கள் எந்த வயதினரும் செல்லலாம் என்கிற தீர்ப்பு இப்போது கேரளத்தை ப்புரட்டி புரட்டி எடுக்கிறது.எத்தனையோ அவஸ்தை எத்தனையோ நஷ்டம்.சட்டமொழுங்கு பிரச்சனை எது எப்படியிருந்தாலும்.பிருந்தாவும் கனகதுர்காவும் அய்யப்பனை ஜனவரி இரண்டாம் நாள் தரிசித்து வந்துவிட்டார்கள் கோவிலின் .மேல்சாந்தி அவர்களின் வருகைக்குப்பரிகாரம் செய்து முடித்துவிட்டார்.அய்யப்பப்பெருங்கடவுள் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு அருள் பாலிக்கிறார்.

கேரள அரசு ’பெண்களின்எதிர்ப்புச் சுவர்’ என்கிற பெரிய போராட்டம் நடத்தி உச்ச நீதி மன்ற தீர்ப்பைத்தூகிப்பிடித்து ஒரு வரலாறு நிகழ்த்தியிருக்கிறது.

இதே கேரள மண்ணில் ஆறு ஷெட்யூல்ட் இன அர்ச்சகர்களை நியமித்து இந்துக்கோவிலின் கருவறைக்கு அனுப்பி வைத்த பெருமைக்குரிய சமாசாரமும் சமீபத்தில்தான் நடந்து முடிந்தது. யது கிருஷ்ணன் என்னும் ஷெட்யூல் இனத்து அர்ச்சகர் திருவல்லா மணப்புரம் சிவன்கோவிலில் மேல்சாந்தியாகி ப்பணிதொடங்கியது மறக்கமுடியாத சமாச்சாரம்..’தமிழ் நிலத்தில் இது என்றுதான் நடந்தேறும் அந்தக்.கனவு மெய்ப்படவேண்டுமே…

முல்லைப்பெரியாறு அணையை சற்றுஉயர்த்த அதே உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கொடுத்தது. அதனை அமல் செய்ய மாத்திரம் அந்தக் கடவுள் அருள் பாலிக்கும் பூமியில் யாரும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். டில்லியில் அமர்ந்து கொண்டு இருப்பவர்கள்தானே. அவர்களுக்கு இடிக்கி மக்களின் உயிர்பற்றி என்ன கவலை ? என்று விளக்கம் மட்டுமே தருவார்கள்.

ஹரீஷின் ‘‘மீசை’’ என்கிற ஒரு புதினத்தொடர் வெளிவந்து பாதியில் நின்றுபோனது. மாத்ருபூமி வார இதழில் வெளிவந்தது கதை.. இந்தப் பிரச்சனை உச்ச நீதி மன்றத்தின் பார்வைக்குப்போனது.படைப்பவனின் பேனாவுக்குக் குறுக்கே நிற்க யாருக்கும் உரிமைஇல்லை. அதனை நிறுத்தி ஆணை இட்டால்அது மனித குலத்தை இருண்டகாலத்திற்கு அழைத்துச்சென்றுவிடும் என்கிற ஒரு அற்புதத்தீர்ப்பை அந்த மாமன்றம் வழங்கியது. படைப்பாளிகளின் நெஞ்சில் இப்படிப் பால் வார்த்த வரலாறும் உச்ச நீதிமன்றத்திற்கு உண்டென்பது நாம் அறிந்ததே.

‘Ideas have wings. If the wings of free flow of ideas and imagination are clipped no work of art can be created’…. என்றது அந்தத் தீர்ப்பு.. வால்டேரின் முத்தான வரியை மேற்கோளாய்க்குறிப்பிட்ட நீதியரசர் தீபக் மிஸ்ராவின் அத்தீர்ப்பு இப்படிச்சென்றது,

It ought to be remembered that eventually, what the great writer and thinker Voltaire had said,’I may disapprove of what you say,but I will defend to death your right to say it’’, becomes the laser beam for guidance when one talk about freedom of expression.

ஒருவீட்டுக்காரன் மனையாளை அடுத்த வீட்டுக்கரன் வைத்துக்கொண்டால் அதில் ஒன்றும் தவறில்லை. முடிந்தால் ஒத்துப்போ இல்லை என்றால் மணவிலக்கு பெறு என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் டில்லியிலிருந்து வந்து இருக்கிறது .பிறன் மனை நோக்காப்பேராண்மை என்னும் திருக்கறள் நமக்கு மட்டும்தான் கொஞ்சம் தெரியும்.வடக்கில் இருப்பவர்களூக்கு அது தெரிந்திருக்க நியாமில்லை அடுத்தவன் மனவியை அந்த ஆசைக்காகத்தொட்டவனுக்கு .ஐந்தாண்டுகள் சிறைதண்டனை (இ பி கோ செக்‌ஷன் 497) அது இது எல்லாம் இனி ஏது? எவ்வளவோ சவுகரியம் இதனில் பலருக்குத் தென்படலாம். அது நமக்கு விஷயம் இல்லை..

முத்தலாக் பிரச்சனை ஒரு தனிக்கதை.ஏகப்பட்ட இசுலாமிய நாடுகள் அதனை ஒத்துக்கொண்டுவிட்டன என்பது ஒரு விஷயம்.உச்ச நீதிமன்றம் மையஅரசுக்கு வழிகாட்டி இருப்பதுஎப்பபடியோ அப்படி செயல்பட்டு வருகிறோம்.என்கிறார்கள் முத்தலாக் .அவசர சட்டம் கொண்டு வந்தார்கள் .ஆறு மாத கால. அவசரச்சட்டம் அல்பாயுசுதான். மக்கள் சபையில் பாஜகவுக்கு ஆட்களுண்டு ஆக அதனை ஒப்பேற்றினார்கள். இப்போது மேல்சபையில் திணறிக்கொண்டு. சமாளித்து நடிக்கிறார்கள் தேர்தலும்.வோட்டும்தான் எல்லாவற்றிற்கும் ஆதார சுருதி இரும்பு மனிதர்.பட்டேல் சிலை நர்மதா நதிக்கரையில் மிகமிக உயரமானதுதான் அதில் யாருக்கும் எந்த அய்யமும் இல்லை

.ஓரினச்சேர்க்கை பற்றி உச்ச நீதிமன்றம் ஒருபுரட்சித் தீர்ப்பு வழங்கியது.அவர்கள் விரும்பினால் திருமணமேகூட செய்துகொள்ளளாம்..லட்சக்கணக்கானவர்கள் அந்த நீதிமன்றவெற்றிக்கு எப்படி எல்லாம் மகிழ்ந்துபோனார்கள் அப்போது தான் தெரிந்தது இத்தனை பேர் இங்கு ஓரினச்சேர்க்கையாளர்களா!, இதனில் இவ்வளவு ஆழமும் கனமும் இருக்கிறதா? என்று .

.சாதாரணர்களுக்கு இந்த அலிகளின் உளவலி விளங்கிக்கொள்ள முடியாமல் இருக்கலாம்.இறைவனே ஆணாகி பெண்ணாகி அலியுமாகி இருப்பதை எல்லாம் நாம் பேசுகிறோம் மறந்துவிடுகிறோம் .அவ்வளவுதான்..

சிவகாசி பட்டாசு தயாரிப்போருக்கு ப்பிரச்சனையாக ஒரு -பசுமைப்பட்டாசு என தீர்ப்பும் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கு எல்லோருக்கும் ஒரு கால வரன்முறையும் உச்ச நீதிமன்றம் அளித்து திக்குமுக்காடவைத்தது.

இன்னும் உச்ச நீதிமன்றம் சாதிக்கவேண்டி நிறையக்காத்திருப்பதாய் மக்கள் நினைக்கத்தொடங்கி இருக்கிறார்கள்.அரசியல்வாதிகளுக்கோ வோட்டுக்கு மட்டுமெ சுற்றிவரவேண்டிய பெரும் பணி அடிக்கடி வந்து சேர்கிறது

.மசூமா ரனால்வி என்னும் பெண் போராளி அவர் பிறந்த போரா இனத்தில் இன்றைக்கும் சிறுமிகள் பிறப்புறுப்பில்கூரிய கத்தி கொண்டு சிறு கத்தரிப்பு (female genital mutilation) என்னும் கொடுமை நிகழ்த்தப்படுவதற்கு எதிராகத்தொடர்ந்துபோராடி வருகிறார்..அவர்களும் இசுலாமியர்களே.. அவர்களின் பக்கம் உச்ச நீதிமன்றம் கருணையோடு பார்க்க வேண்டியிருக்கிறது.

ரபேல் விமான பேரம் குறித்து உச்ச நீதிமன்றம் கூறியாகிவிட்டது .மக்களுக்கு மட்டும் அதன் சாராம்சம் விளங்காமல் இருப்பதை மறுப்பதற்கில்லை

மோடியின் 10 சதவீதஒதுக்கீடு பொருளாதாரத்தில் பின் தங்யோர்க்கு என்பதிலும் உச்ச நீதுமன்றம் நுழைய வேண்டியதாயிற்று. ஆண்டுக்கு 8 லட்சம் வருமானம் பெறுபவர்கள் அதாவது வருமானவரி ஆயிரம் ஆயிரம் கட்டுபவர்கள் எப்படி பொருளாதாரத்தில் பின் தங்கிப்போனார்கள் என்பதை கணக்கில் கொண்டு அதனை மாற்றி அமைத்தால் கொஞ்சம் தேவலாம்.

.தூத்துகுடி தாமிர ஆலை எதிர்ப்பு இயக்கம் வேதாந்தாவின் சக்கர வ்யூகத்தை கவனத்தில் கொண்டு எழுந்து நிற்கிறது. அது ஓயாமல்போராடிக்கொண்டு இருப்பதைக்காண்கிறோம்.தொடர்புடைய நீதி மன்றம் மக்களின் பிரச்சனைக்கு ஒரு பசுமையான தீர்ப்பினை வழங்கிட நல்லது மட்டுமே பெரிதாக வேண்டும்.

——-

Series Navigation8. மகட்போக்கிய வழித் தாய் இரங்கு பத்துதுணைவியின் இறுதிப் பயணம் – 12
author

எஸ்ஸார்சி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *