வந்தவாசியைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷ் எழுதிய            சிறுவர் கதை நூலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்க விருது

author
0 minutes, 3 seconds Read
This entry is part 5 of 8 in the series 10 பெப்ருவரி 2019

 

வந்தவாசி. :. வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த

கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ’அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ எனும்
சிறுவர் கதை நூலுக்கு, திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த சிறுவர் கதை நூலுக்கான
விருது வழங்கப்பட்டது.

திருப்பூரில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் திருப்பூர் தமிழ்ச் சங்கம்,
தமிழில் வெளியாகும் சிறந்த நூல்களுக்கு பல்வேறு தலைப்புகளின் கீழ் விருதுகளை
ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

2017- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான விருது வழங்கும் விழா
திருப்பூர் பாரதி கார்டனில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா அரங்கில் நேற்று
செவ்வாய்க்கிழமை (பிப்.07) அன்று நடைபெற்றது.

இவ்விழாவிற்கு,  திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஆ.முருகநாதன்
தலைமையேற்றார். தமிழ்ச் சங்க செயலாளர் ஆடிட்டர் ஏ.லோகநாதன் அனைவரையும்
வரவேற்றார்.

2017-ஆம் ஆண்டு வெளியான நூல்களில் சிறுவர் இலக்கியப் பிரிவில்

சிறந்த நூலாக கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல்
கதை’ எனும் நூல் தேர்வு செய்யப்பட்டு, ரூ.5000/-  விருதுத்தொகையை குன்றக்குடி ஆதினம்

தவத்திரு பொன்னம்பல அடிகளார் வழங்க, பாராட்டுச் சான்றிதழை விஐடி பல்கலைக்கழக
வேந்தர் ஜி.விஸ்வநாதன் வழங்கினார்.

சிறுவர் கதை நூலுக்கான விருதினைப் பெற்றுள்ள கவிஞர் மு.முருகேஷ்,
வந்தவாசி நூலக வாசகர் வட்டத்தின் தலைவராகவும், வந்தை வட்ட  கோட்டைத்  தமிழ்ச்
சங்கத்தின் ஆலோசகராகவும் இருந்து சமூகம், கல்வி மற்றும் கலை இலக்கியப் பணிகளில்
ஆர்வத்துடன் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். இதுவரை 42-க்கும் மேற்பட்ட கதை, கவிதை ,

கட்டுரை, சிறுவர் இலக்கியம், விமர்சன நூல்களைப் படைத்துள்ள இவர், தனது நூல்களுக்காக

25-க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகள் வழங்கிய பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவரது படைப்புகள் மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டு, அவை நூல்களாகவும் வெளிவந்துள்ளன. இலக்கிய மாநாடுகளில்
உரையாற்றுவதற்காக இலங்கை, சிங்கப்பூர், குவைத் ஆகிய நாடுகளிலுள்ள அமைப்புகளின்
அழைப்பின் பேரில் அங்கு சென்று, உரையாற்றி வந்துள்ளார். மத்திய அரசின் இலக்கிய அமைப்பான
சாகித்திய அகாதெமி ஏற்பாட்டில், மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங், கர்நாடகாவிலுள்ள மைசூரு,
ஆந்திர மாநிலம் விஜயவாடா, அசாம் மாநிலம் கவுகாத்தி ஆகிய இடங்களில் நடைபெற்ற
தேசிய அளவிலான இலக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளார்.

இவரது படைப்புகளை இதுவரை 6 கல்லூரி மாணவர்கள் இளமுனைவர் பட்ட ஆய்வும்,
3 மாணவர்கள்  முனைவர் பட்ட ஆய்வும் செய்துள்ளனர். இவரது கவிதைகள் மதுரை காமராஜர்
பல்கலைக் கழக பாடத்திட்டத்திலும், விருதுநகர் வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரிப்
பாடத்திட்டத்திலும், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி பாடத்திட்டத்திலும்
இடம் பெற்றுள்ளன.
சமச்சீர் பாடத்திட்டக் குழுவில் இடம்பெற்று, 1-ஆம் வகுப்பு மற்றும் 6-ஆம் வகுப்பு பாட நூல்கள்

உருவாக்கத்தில் பங்களிப்பு செய்துள்ளார். 2010- ஆம் ஆண்டு வெளியான இவரது ‘குழந்தைகள்
சிறுகதைகள்’ எனும் நூல்,  தமிழக அரசின் ’புத்தகப் பூங்கொத்து’ எனும் திட்டத்தில் தேர்வாகி,
தமிழகத்திலுள்ள 32 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விழாவில், எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், குன்றக்குடி சிங்கார வடிவேல், கவிஞர்கள்

பாரதிவாசன், ‘வெளிச்சம் வெளியீடு’ ஆ.பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிறைவாக, பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.

 

இணைப்பு: குறிப்பும் – 

திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் திருப்பூரில் நடைபெற்ற விழாவில், 2017-ஆம் ஆண்டு

வெளியான நூல்களில் சிறந்த சிறுவர் கதை நூலுக்கான விருதினை விஐடி பல்கலைக்கழக
வேந்தர் ஜி.விஸ்வநாதன் வழங்கியபோது எடுத்த படம். அருகில், குன்றக்குடி ஆதினம்

தவத்திரு பொன்னம்பல அடிகளார், திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஆ.முருகநாதன்,
செயலாளர் ஆடிட்டர் ஏ.லோகநாதன் ஆகியோர் உள்ளனர்.

Series Navigationதுணைவியின் இறுதிப் பயணம் – 122019 பிப்ரவரி 22 இல் ஜப்பான் ஹயபூஸா -2 தளவுளவி “ரியூகு” முரண்கோளில் தடம் வைக்கப் போகிறது
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *