இஸ்ரேல் முதன்முதல் ஏவிய நிலாத் தளவுளவி நிலவைச் சுற்றி வந்து, இறங்கப் போகிறது.
2019 பிப்ரவரி 21 இல் தனியார் ஏவுகணை ஸ்பேஸ்X [SPACEX], [Falcon -9 Rocket] பிளாரிடா கெனாவரல் முனையிலிருந்து கிளம்பி, முதல் முதல் இஸ்ரேலின் நிலாத் தளவுளவியைச் [Lunar Lander : Beresheet] சுமந்து கொண்டு, 2019 ஏப்ரல் 11 ஆம் தேதி நிலவில் இறங்கத் திட்டமிடப் பட்டுள்ளது. [Beresheet means Genisis]. சுயமாய் இயங்கும் தளவுளவியின் எடை : 585 கி.கி. [1290 பௌண்டு]. இதுவே நாசா, ஈசா போலின்றித் தனியார் நிறுவனம் முதன்முதல் புரியும் விண்வெளிச் சாதனை. இது பலவித முறைகளில் விண்வெளி முதன்மை முயற்சியாகக் கருதப் படுகிறது. இது தனிநபர், ஆப்ரிக்கச் செல்வந்தர் இலான் மஸ்க் [Elon Musk] இஸ்ரேல் நிலாத் தளவுளவியைத் தனது ராக்கெட் [SpaceX] மூலம் முதன்முதல் தூக்கிச் செல்வது. மிகக் குறைவான நிதிச் செலவில் நிலவைச் சுற்றவும், விண்சுற்றிக் கப்பலின்றி, தளவுளவி நேராக நிலவில் இறங்கவும் முயல்வது.

தளவுளவி பூமியைச் சுற்றி வேகம் மிகுந்து நீள்வட்டப் பாதை ஒவ்வொரு சுற்றிலும் புவியீர்ப்பு விசையால் நீட்சி ஆகிறது.
++++++++++++

தளவுளவி பூமியைச் சுற்றி வேகம் மிகுந்து நீள்வட்டப் பாதை ஒவ்வொரு சுற்றிலும் புவியீர்ப்பு விசையால் நீட்சி ஆகி, முடிவில் நிலவை நெருங்கும் போது, வேகம் தணிக்கப் பட்டு, நிலவின் ஈர்ப்பு தன்னைச் சுற்றிவர இழுத்துக் கொள்கிறது.
மேலும் ராக்கெட் ஆற்றலில், அசுர ராக்கெட் அபெல்லோ -11 போலின்றி ஒரே பாய்ச்சலில் நிலவுக்குச் செல்லாது, பூமியைப் பன்முறை சுற்றிவந்து, புவியீர்ப்பு சுழல்வீச்சு [Gravitational Flyby Swing] ஆற்றலில், ஒவ்வொரு சுற்றிலும் வேகம் மிகுந்து, நீள்வட்டப் பாதை நீட்சியில் நிலவை நெருங்குவது. சிக்கனமான இம்முறையை வெற்றி கரமாகச் செய்து காட்டியது இந்தியா. சந்திரயான் நிலவைச் சுற்றியது, மங்கல்யான் செவ்வாய்க் கோளைச் சுற்றியது இப்படித்தான். எட்டு ஆண்டுகளாய் இஸ்ரேல் நிபுணர் திட்டமிட்டுச் செய்த பிரிசீட் நிலாத் தளவுளவி [Beresheet Lunar Lander] ஏப்ரல் 11 ஆம் தேதி நிலவில் இறங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஏவிய பிறகு தூக்கிச் சென்ற ராக்கெட், பணி முடிந்து, பாது காப்பாக சுய இயக்கத்தில், திட்டமிட்ட இடத்தில் புவிக்கு மீட்சியானது. இது மீண்டும் பயன்படுத்தப் படும். இந்த இஸ்ரேல் சிக்கன மலிவு நிலாத் திட்டம் 100 மில்லியன் டாலருக்குள் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Israel Lunar Lander Assembly


Artist Picture View of Israel Luna Lander
[April 11, 2019]

Israel Space Centre Control Room
+++++++++++++++++++
Space News :
- https://www.space.com/43188-israel-first-moon-lander-spaceil-beresheet-photos.html
- https://www.space.com/israel-moon-lander-first-maneuver.html
- https://www.theguardian.com/world/2019/feb/22/israel-first-lunar-lander-blasts-into-space-florida-spacex-beresheet
- https://www.space.com/spacex-israeli-moon-lander-satellites-launch-success.html
- https://youtu.be/kzu4-h41xWY
- https://youtu.be/zOL1hqtGRnA
- https://youtu.be/Xfg-Az1cOsA
- https://youtu.be/hESyPm1vxpA
- https://youtu.be/XZULKCMq1T4
- https://youtu.be/BZ2r7Cc_Z9g
- https://youtu.be/01p-4YfMXm8
- https://youtu.be/kWnx0p2aez4
+++++++++++++++++
S. Jayabarathan [jayabarathans@gmail.com] March 2 [R-0]
- தமிழ் நுட்பம் 8 மென்பொருள் ரோபோக்கள் (bots )
- முதன்முதல் இஸ்ரேல் விண்வெளித் தேடல் ஆணையகம் ஏவிய நிலாத் தளவுளவி நிலவு நோக்கிச் செல்கிறது
- மயக்கமா இல்லை தயக்கமா
- பால் டார்ட் துப்பாக்கி இயக்குபவரின் இறப்பு
- ஓவியர் இயூஜின் கருணாவின் இழப்பு எமது சமூகத்தின் பெரும் இழப்பாகும்
- காஷ்மீர் – அபிநந்தன்
- விளக்கு விருது வழங்கும் விழா
- சி வி ராமன் பற்றிய ஆவணப்படம் தற்போது இணையத்தில்ஆங்கிலம்/ தமிழ் இருமொழிகளிலும்