ஜனநாயகம் – தமிழச்சி – குறிப்புகள்

This entry is part 3 of 8 in the series 24 மார்ச் 2019

ஜனநாயகம் என்பது தனி மனிதச் சிந்தனை சார்ந்தது.

ஒவ்வொரு தனி மனிதனும் தேர்தலில் போட்டியிடுகிற கட்சிகளைக் குறித்தும் அதன் வேட்பாளர்கள் குறித்தும் சீர்தூக்கிப் பார்த்து அவற்றில் தனக்குச் சரியெனப்படுகிற ஒரு கட்சிக்கோ அல்லது வேட்பாளருக்கோ வோட்டளிப்பதுதான் ஜனநாயகம். ஒவ்வொரு இந்தியனின் ஒவ்வொரு ஓட்டும் மகத்தான சக்தி வாய்ந்தது. அவனது மற்றும் அவனது பிள்ளைகளின் எதிர்காலத்தை அந்த ஒற்றை ஓட்டின் மூலம் தனியொரு இந்தியன் தீர்மானிக்கிறான்.

அவ்வாறே, பிற இந்தியக் குடிமகனும், குடிமகளும் எந்தவிதமான அழுத்தங்களும், நிர்பந்தங்களும், ஜாதி, மத, இன வேறுபாடுகளின்றிச் சிந்தித்து தேர்தலில் போட்டியிடும் பல்வேறு கட்சி வேட்பாளர்களிடையே தனக்கும், தனது தாய் நாட்டிற்கும் நன்மைகள் செய்வான் என நினைக்கும் ஏதோவொரு கட்சியின் வேட்பாளருக்கு அவரது தகுதி மற்றும் திறமைகளை மட்டுமே சிந்தித்து வாக்களிப்பதுதான் ஜனநாயகம்.

“எங்கப்பா அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்டாரு. நானும் அதே கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவேன்” என்பதோ, அல்லது “வேட்பாளர் எங்கள் சாதிக்காரர். எனவே அவருக்கு மட்டும்தான் எங்கள் சாதிசனம் ஓட்டுப் போடும்” என்பதோ, அல்லது “எங்கள் சர்ச் பாதிரி சொன்னவருக்குத்தான் ஓட்டு” என்பதோ, அல்லது “எங்கள் முல்லா சொல்பவனுக்குத்தான் எங்கள் ஓட்டு” என்பதோ, அல்லது காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவதோ ஜனநாயகமே அல்ல. இதுபோன்ற செயல்கள் ஜனநாயக விரோதமானவை. தான் சிந்தித்து, சீர்தூக்கிப் பார்க்க மறுக்கும் ஒரு மூடன் மட்டுமே அடுத்தவன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஓட்டுப் போடுவான்.

அப்படி பாதிரியோ அல்லது முல்லாவோ அல்லது ஒரு ஹிந்து சாமியாரோ சொல்வதனைக் கேட்டு ஓட்டுப் போடுகிறவனுக்கும் பாகிஸ்தானியனுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. பாகிஸ்தான் பெயரளவிற்கு ஒரு ஜனநாயக நாடென்றாலும் அங்கு நடக்கும் தேர்தலில்களில் ஒரு சாதாரண பாகிஸ்தானி யாருக்கு ஓட்டுப் போடவேண்டும் என்பதினை அவன் தீர்மானிப்பதில்லை.

ஏனென்றால் பெரும்பாலான பாகிஸ்தானிகள் அந்தந்த பகுதிகளில் வாழும் பெரும் நிலச்சுவான்தார்களின் அடிமைகள். பாகிஸ்தானின் பெருமளவு நிலம் இன்றைக்கும் ஜமீன்தார்கள், பண்ணையார்கள், வாத்ரா, நவாஸ் ஷெரிஃப், பாகிஸ்தானிய ராணுவம் போன்றவர்களின் கைகளில் இருக்கிறது. எந்தவிதமான தொழில்களும், தொழிற்சாலைகளும் இல்லாத பாகிஸ்தானின் பெரும்பகுதி மக்கள் இந்த ஜமீன்தார்களின் நிலங்களில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே அந்த ஜமீன்தார் சொல்கிறவனுக்கு மட்டும்தான் அவர்கள் ஓட்டுப் போட முடியும். மீறினால் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான்.

இந்தியாவில் அப்படியா நடக்கிறது?

நான் எந்தவொரு குறிப்பிட்ட கட்சிக்கும் நீங்கள் ஓட்டுப் போட வேண்டும் என்று சொல்லவில்லை. அது என் வேலையும் இல்லை. நான் சொல்வதெல்லாம் அடுத்தவன் சொல்வதைக் கேட்காமல் நீங்களே சிந்தித்து, சீர்தூக்கிப் பார்த்து முடிவெடுங்கள் என்கிறேன். அதுவே சிறந்த ஜனநாயகம். அடுத்தவன் சொல்வதைக் கேட்டு முடிவெடுக்கிறவன் அவனுக்கு அடிமையாக மட்டுமே இருக்க முடியும்.

இந்தியர்களின் ஓட்டுரிமையை இன்றைக்கு உலகமே வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு தங்களை ஆள்பவர்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை இல்லை. உங்களின் ஓட்டு ஒரு வலிமையான ஆயுதம். அதனை அடுத்தவன் பேச்சைக் கேட்டு மலிவானதாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் என்பதே எனது வேண்டுகோள்.


தமிழச்சி

இந்தியாவில் யாரும், எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் என்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையுமில்லை. எல்லோரும் இந்தியரே.

ஆனால், “தமிழச்சி” என்கிற பெண்மணி உண்மையில் தமிழச்சியே கிடையாது. அந்தப் பெண்மணி ஒரு தெலுங்கச்சி என்கிற மீம்ஸ்களையும் அதனைக் கண்மூடித்தனமாகப் பகிர்கிறவர்களையும் கண்டு சிரித்துக் கொண்டிருக்கிறேன். வேறு ஒரு காரணத்திற்காக.

இப்படியாகப்பட்டதொரு மீம்ஸைக் கிளப்பி விட்டவனே தி.மு.க.காரன்தான் என்கிறேன் நான்.

காரணம் மிக எளிதானது.

சென்னையில் ஏறக்குறைய நாற்பத்தைந்து சதவீதத்திற்கும் மேலானவர்கள் தெலுங்கு பேசுபவர்கள். அதிலும் வடசென்னைப் பகுதியில் மெஜாரிட்டியே அவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களின் வாக்குகளைப் பெறுகிற எவருமே எளிதாக வெற்றி பெறலாம் என்பது நிதர்சனம்.

எனவே தி.மு.க. தந்திரத்துடன் மேற்படிப் பெண்மணி ஒரு தெலுங்குக்காரப் பெண் என மறைமுகப் பிரச்சாரம் செய்கிறது மண்டூகங்களே. “பேருதான் தமிழச்சி. மரி அதி மன தெலுகு அம்மாயி. சூஸ்கோ…” என்பதே அந்தப் பிரச்சாரம்.

இதைப் புரியாத ஜடங்கள் இதனை மேலும், மேலும் பரப்புகின்றன. தன் கையை எடுத்து தானே தன் கண்ணில் குத்துகிற தந்திரம்.

ஆங்…அப்பிடியெல்லாம் இல்லை. தி.மு.க. ஒரு சமத்துவக் கட்சி என்பவர்களுக்கு நான் சொல்லும் ஒரு செய்தி என்னவென்றால், தி.மு.க.தான் தமிழகத்தின் மிகப்பெரிய சாதிக் கட்சி என்பதுதான்.

சாதி பலம், பண பலம் இல்லாத எவனையும் அல்லது எவளையும் மு.க. தேர்தலில் இறக்கியதில்லை. அதுவேதான் இன்றைக்கும் தொடர்கிறது

Series Navigationபுகுஷிமா விபத்துக்குப் பிறகு ஏழாண்டுகளில் உலக அணு மின்சக்தி இயக்கப் பேரவை வடித்த மேம்பாட்டு நெறிப்பாடுகள்பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்து தலித் அமைச்சர் ஜோகேந்திர மண்டலின் ராஜினாமா கடிதம் – 1
narendran

பி எஸ் நரேந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *