மஞ்சுளா
மதுரை
ஒரு பூனையின் வருகையாக நிகழ்ந்தது அது
கால ரேகைகளை அடர்த்திப் பரத்தியிருக்கும் பூமியின் பருவச் செழிப்புக்களில் விளையும்இன்பப் பரவலில் உயிர்த்தெழுகின்றன என் கனவுகள்
ஒரு பறவையின் உயிரின்பம் அதன் சிறகுகளில் உள்ளதாக அறிந்தாயும் அறிவியலின் எல்லா எல்லைக் கோடுகளையும் தாண்டி வந்து விட்ட அது அரூபத்தில் என்னை கடத்திச் செல்கிறது புல் பூண்டு மலைகள் ஆறுகள் அருவிகள் என என் இருப்பை மாற்றிக் கொண்டே வந்தது
மானாக நிலத்தில் ஓடியும் மீனாக நீரில் நீந்தியும் திளைத்திருந்த அனுபவங்கள்
என்னை மனித அறிவிலிருந்து மீட்டெடுத்தன
ஆறாம் அறிவு என்னுள் அகதியாய் திணறிக் கொண்டிருந்தது
அகதியை உற்று நோக்கிய கடவுள் இறுதி யோசிப்பில்
ஏழாவது அறிவை பூனையிடமும் எலியிடமும் பிரித்துக் கொடுத்தார்
பின் அவைகள் ஒன்றையொன்று துரத்திக் கொண்டிருந்தன கடவுள் சாட்சியாக –
- வள்ளுவர் காட்டும் மனிதர்கள் 1. மர(ம் போன்ற) மனிதர்கள்
- “சுயம்(பு)”
- துறைமுகம், தேடல் நாவல்களில் நெய்தல் நில மக்களின் வாழ்வியல்
- பிராந்தி
- சொல்வனம் 200: அம்பை சிறப்பிதழ் வெளியீடு
- கோவேறு கழுதைகள் நாவல் சிறப்புப் பதிப்பு முன்வெளியீட்டுத் திட்டம்
- ஏழாவது அறிவு
- ஜப்பான் ஹயபூசா -2 விண்சிமிழ் தாமிரக் கட்டி முரண்கோளைத் தாக்கி குழி பறித்துள்ளது
- மூன்றாம் உலகப் போர்
- பயங்கரவாத செயல்களின் பின்புலமும், இடதுசாரி அரசியலும்