அன்புள்ள வாசகர்களுக்கு, 26 ஏப்ரல் 2019
சொல்வனம் இணைய இதழ் பத்தாண்டு கால இயக்கத்தில் தன் 200 ஆவது இதழை வந்தடைந்திருக்கிறது. இந்த இதழை தமிழில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ள எழுத்தாளர், சமூகச் செயல் வீரர், அம்பை அவர்களைக் கௌரவிக்கும் விதம் ‘அம்பை சிறப்பிதழ்’ என்று வெளியிட்டிருக்கிறோம். இதழில் 44 உருப்படிகளைப் பிரசுரித்திருக்கிறோம். அவையாவன:
இதழ் 200- பதிப்புக் குறிப்பு – பதிப்புக் குழு
அம்பையைப் பற்றி:
அம்பையின் கதைகள் – கலைச்செல்வி
‘உடலே இல்லாத ஒரு வெளியில் மிதந்து கொண்டிருந்தோம்’ – பேட்டி
குட்டி ரேவதியுடன் பனிக்குடம் இதழுக்காக ஒரு நேர்காணல்
அம்பையின் அண்மைக்காலக் கதைகளும் மூப்பியலும் – சமயவேல்
அம்பை: பெண்மையின் அழகும் பெண்ணியத்தின் சீற்றமும் – வெங்கட் சாமிநாதன்
அம்பையின் முறியாத சிறகுகள் – புதிய மாதவி
வீட்டிற்குள்ளிருந்து சில குரல்கள் – எஸ்.ராமகிருஷ்ணன்
அம்பை – ஒரு எதிர் அணுக்க மதிப்பீடு– அரவிந்தன் நீலகண்டன்
வண்டல் படிய ஓடும் நதி –மைத்ரேயன்
அம்பை எழுதியவை – மீள் பிரசுரங்கள்
பாமாவின் கருக்கு
என் நோக்கில் சுரா
ஆலமரத்தின் கீழ் ஒரு குடியிருப்பு – [பவ்வரி தேவியின் தீரப் போராட்டம் பற்றி]
சுல்தானாவின் கனவும் மாணிக்கக் கல்லும் – [19ஆம் நூற்றாண்டுப் பெண் கல்வி முன்னோடி பேகம் ரோக்கியா பற்றி]
நச்சுடை நாகங்கள் இடையே ஒரு நங்கை – ஜுனைதா பேகத்தின் சிந்தனைகள் பற்றி
பெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம்
மனத்துக்கினியவள் – எழுத்தாளர் ஆர். சூடாமணி நினைவஞ்சலி
மாதர் மறுமணம் – ஓர் அச்சு இயக்கம் – துவக்க கால சீர்திருத்த இயக்கம் பற்றி
அம்பை பற்றிப் பிற எழுத்தாளர்கள்:
எல்லைகள் அற்ற வெளி – பானுமதி ந.
கண்ணனை அழைத்தல் – கமலதேவி
சங்கல்பமும் சம்பவமும் : அம்பையின் இரு நூல்களை முன்னிட்டு தமிழ்ப் பெண்ணெழுத்து – ஒரு பார்வை – சுசித்ரா ரா. வின் அலசல் கட்டுரை
அடவியும் அந்தேரி மேம்பாலமும்.. – எம்.ஏ.சுசீலா
தோற்காத கடவுள் – இந்திரா பார்த்தசாரதி
மீண்டும் அம்பையின் கட்டுரைகள்:
உரக்க ஒலித்த பெண் குரல்– ராஜம் கிருஷ்ணனுக்கு அஞ்சலி
குக்கூவின் மாய யதார்த்த வாழ்க்கை- வங்க எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி பற்றி
மொழியும் மௌனமும் வாழ்க்கையும் – இந்திய பன்மொழிச் சமூகம் பற்றிய ஒரு விசாரம்
பனைமரமே, பனைமரமே – தமிழ் நாவலாசிரியர் ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு புத்தக மீள்பிரசுரத்துக்கு எழுதிய முன்னுரை
இரண்டு சூடான அவித்த முட்டைகளும் காஷ்மீரமும் – பிரிவினை வாதமும் இந்திய ‘சிந்தனையாளர்களும்’ பற்றி
நீளாவுடன் நீளும் பயணம் – பா.வெங்கடேசனின் கவிதை நூல் பற்றி
ஊர் வேண்டேன்… – தன் வாழ்க்கைக் குறிப்பு
விருதேற்பு உரை
மீண்டும் அம்பை பற்றிப் பிறர்:
அம்பையின் சிறுகதைகள் – வண்ணநிலவன்
‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ : மூவகை முரண்கள் – பெருமாள் முருகன்
ஞாபகக் காற்று – கலாப்ரியா
அம்பை – குறிப்புகள் பலர் எழுதியவற்றைத் தொகுக்கிறார் பாஸ்டன் பாலாஜி
மறுபடியும் அம்பையின் கட்டுரைகள்:
குடுமியில் சிக்கிக்கொண்ட மோக இழைகள் – பா. வெங்கடேஸ்வரனின் நாவல் ‘பாகீரதியின் மதியம்’ பற்றி
அணில் கட்டிய பாலம் ஒன்று – மறைந்த ஆவணப் பாதுகாவலர் திரு.ரோஜா முத்தையா அவர்கள் பற்றிய ஒரு குறிப்பு
மண்ணாசை – ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’ நாவல் மீள் பிரசுரத்துக்கு முன்னுரை
சந்தையில் புத்தகங்கள் – சென்னை புத்தகச் சந்தையில் சில அனுபவங்கள்
பிறவை:
அம்பை புகைப்படங்கள் – தொகுப்பு
நட்சத்திரங்கள் பொழிந்துகொண்டிருக்கின்றன – அதிபுனைவுச் சிறுகதை- பூங்கோதை
நூறாண்டு! நூறாண்டு! பலகோடி நூறாண்டு! – மருத்துவர் கடலூர் வாசு மனிதரின் நீண்ட ஆயுளின் பின்னே என்ன உள்ளதென்று அலசுகிறார்
ஒரு வார்த்தை.. நம் மொழியில்.. – ராமலக்ஷ்மி – கவிதை
ஆட்டத்தின் 5 விதிகள் – முதல் விதி – ஜா.ராஜகோபாலனின் தொடர் கட்டுரை பாகம் 3
ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு மாலைப்பொழுது – ஏகாந்தனின் அனுபவம்
கோடை ஈசல் – அறிவியல் புனைவின் கடைசிப் பாகம். மொழி பெயர்ப்பு. மூல ஆசிரியர்கள்: பீடர் வாட்ஸும், டெரில் மர்ஃபியும்
இத்தனையும் வாசகர்களுக்கு solvanam.com தளத்தில் கிட்டும்.
இனி செய்யப்பட வேண்டியதெல்லாம், வாசகர்கள் solvanam.com தளத்துக்கு வருகை தந்து, நேரம் செலவழித்து அனைத்தையுமோ, அல்லது பிடித்தவற்றையோ, படிப்பதும், படித்தவற்றைப் பற்றி எங்களுக்கு கடிதம் எழுதித் தெரிவிப்பதும்தான்.
மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி: solvanam.editor@gmail.com
உங்கள் வருகையை எதிர்பார்க்கும்
பதிப்புக் குழுவினர்
- வள்ளுவர் காட்டும் மனிதர்கள் 1. மர(ம் போன்ற) மனிதர்கள்
- “சுயம்(பு)”
- துறைமுகம், தேடல் நாவல்களில் நெய்தல் நில மக்களின் வாழ்வியல்
- பிராந்தி
- சொல்வனம் 200: அம்பை சிறப்பிதழ் வெளியீடு
- கோவேறு கழுதைகள் நாவல் சிறப்புப் பதிப்பு முன்வெளியீட்டுத் திட்டம்
- ஏழாவது அறிவு
- ஜப்பான் ஹயபூசா -2 விண்சிமிழ் தாமிரக் கட்டி முரண்கோளைத் தாக்கி குழி பறித்துள்ளது
- மூன்றாம் உலகப் போர்
- பயங்கரவாத செயல்களின் பின்புலமும், இடதுசாரி அரசியலும்