மூன்றாம் உலகப் போர்

This entry is part 9 of 10 in the series 28 ஏப்ரல் 2019

சி. ஜெயபாரதன், கனடா

ஈழத்தில் இட்ட மடி வெடிகள்,
மத வெறி வெடிகள் !
திட்ட மிட்டு மானிடரைச்
சுட்ட வெடிகள் !
காட்டு மிராண்டி களின்
கை வெடிகள் !
முதுகில் சுமந்து தட்டிய
நடை வெடிகள்,
அப்பாவி
அமைதி மனிதர் மீது
விட்ட இடி வெடிகள் !
பொது நபரைச் சுட்ட
தனி வெடிகள் !
எப்படி இத்தனை மடி வெடிகள்
ஈழத்தில் இறங்கின ?
தென் ஆசியா வுக்கு ஏற்று மதியா
சின்ன வெடிகள் ?
சிரியாவி லிருந்து
ஶ்ரீலங்கா
புகுந்த கனல் வெடிகள் !
எச்சரிக்கை இது !
இனி மத வெடிகள் இந்தியாவைக்
குறி வைக்கலாம் !
9/11 பச்சைக் கொடி
ஆரம்பித்த
மூர்க்கர் இடும் மதப்போர் தான்
மூன்றாம் உலகப் போர் !

Series Navigationஜப்பான் ஹயபூசா -2 விண்சிமிழ் தாமிரக் கட்டி முரண்கோளைத் தாக்கி குழி பறித்துள்ளதுபயங்கரவாத செயல்களின் பின்புலமும், இடதுசாரி அரசியலும்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *