- கசடு
வளவ. துரையன்
மறைந்தவர்களின்
மாசுகளை வெளிச்சம்
போட்டுக்காட்டுவது
மரியாதையன்று மரபுமன்று
ரணம் இன்னும் ஆறாவிடினும்
ஈக்களை மட்டும் ஓட்டுதலே
தற்காலிகப் பணி
வேல் கொண்டு பாய்ச்சினால்
குருதிக்கறையே காலத்தின் கோலம்
புகழுரைகளும் பூமாலைகளும்
அமிர்தமே ஆனாலும்
அளவுக்கு அதிமானால்…?
உச்சி மரக்குளையில்
உட்கார்ந்திருக்கும் குரங்கு
எல்லாவற்றையும்
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.
கட்டிப்போட்டிருக்கும் எருமையும்
கணக்கு தீர்க்கக்
காலம் பார்க்கிறது.
அழுக்குகளை அழித்துக்கொண்டு
ஓடும் என எண்ணும்ஆறு
ஆலயங்களையும்தான்
ஆடும்வரை ஆடிப்பார்த்து
இப்போது கீழிறங்கி வந்துக்
காசு கேட்கும் கழைக்கூத்தாடிபோல
முழு வெள்ளையாயிருந்தாலும்
ஒரு சிறு கருப்பு
வெற்றி கொள்கிறது
என்னதான் தெளிவாக
இருந்தாலும் எண்ணெய்க் குடத்தின்
அடி மட்டத்தில் கசடுதானே
அப்பிக் கிடக்கிறது
2.நால்வகை நிலமே
வளவ. துரையன்
ஏற்காடு மலைமீது
சந்தித்தபோது உன்னைக்
குறிஞ்சிச் செல்வி என அழைக்க
நீ குறுநகை புரிந்தாய்
களக்காடு முண்டந்துறைக்
காடுகளில் நாம் உலவும்போது
முல்லை மலரே என நான்
பெயரிட முறுவலில்
என்னைச் சிறைப்பிடித்தாய்
தஞ்சைப் பெரிய கோயில்
பார்க்க வயல்களின்
ஊடே பயணம் செய்கையில்
மருதநாயகி
என உன் கைகேட்க
மறுபேச்சின்றிக் கைகோர்த்தாய்
பூம்புகார்க் கடற்கரையில்
ஓடிப்பிடித்தாடுகையில்
நெய்தற்பூவே என்றுன்
கன்னம் தொடப்
பூக்களைப் பறிக்காதீர் என்று
பொய்க்கோபம் காட்டினாய்
இப்போது பிரியும்போது
நானென்ன பாலையா
எனக் கேட்கிறாய்
பாலை என்பது
தனி நிலமன்று
என் பால்நிலவே
அதனால் நமக்குள்
பிரிவென்பது
இல்லையென்கிறேன்
==================================================================
5.அச்சமும் ஆ
- குரலற்றவர்களின் குரல்களாகிறவர்கள்
- ஆழமும் தெளிவும் உள்ளவை [வ. ஸ்ரீநிவாசனின் எதைப்பற்றியும் அல்லது இது மாதிரியும் தெரிகிறது” தொகுப்பை முன்வைத்து]
- கசடு
- பூகோள உயிரினத்தைச் சீர்கெடுக்கும் சூடேற்றக் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருகி வருகின்றன.
- உள்ளது இல்லாதபடியான அச்சுப்பிரதி
- என்னவளே
- நமக்கான எதுவும் நம்மிடம் இல்லை
- திருப்பூர் சக்தி விருதுகள்
- நேர்மைத் திறமின்றி வஞ்சனை சொல்வாரடீ…….