இல.பிரகாசம்
விபரீதமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறீர்கள்.
ஒரு போதும் உண்மையாகாத ஒன்றை
மெய்யென முன்மொழிந்து கொண்டிருக்கிறீர்கள்.
அது உண்மையல்லாத போதும்.
ஒரு பொய்மையான வாதத்திற்கு ஒப்பானதாக கற்பனையான ஒன்றை
உண்மையென முன்மொழிந்து கொண்டிருக்கிறீர்கள்.
இது ஒரு முழுமையான அபத்தம்.
எனது குற்றச்சாட்டுகளின் தன்மையை புரிந்து கொள்ள
உங்களுடைய காதுகளை காட்சிப் புலன் நிலைக்கோ
அல்லது
உங்களுடைய கண்களை கேட்கும் புலன் நிலைக்கோ
மாற்றிக் கொள்ள உங்களால் முடியுமா?
உங்களுடைய சரீரம் என்று நம்பப்படுபவை எல்லாம்
ஆண்குறியைக் கொண்டோ அல்லது பெண்குறியைக் கொண்டோ
நம்புவது பாலினத்தன்மைக்கு எதிரானது.
ஒருபோது பொய்யென நம்பப்படுபவைகளை
உங்களுடைய வீட்டில்
சமயலறை படுக்கையறை குளியலறை கழிவறை என
அவைகளை பரிசோதனைக் கூடமாக்கி
சோதித்துப் பாருங்கள்.
உண்மைத் தன்மைக்கு அருகே இருக்கும் ஒன்று
அப்பரிசோதனையில் முழுமையான ‘நிர்வாணமாய்’ இருந்தால்
பரிசோதனை நேர்கோட்டில் இருந்து விலகவில்லை
என்பதை
நீங்கள் தெளிந்து கொள்வீர்கள்.
-இல.பிரகாசம்
- கவிதைகள்
- 2022 ஆண்டில் இந்தியா அடுத்து முற்படும் மூவர் இயக்கும் விண்வெளிச் சிமிழ் தயாரிக்க ரஷ்ய நூதனச் சாதனங்கள் பயன்படுத்தும்
- மன்னிப்பு எனும் மந்திரச்சொல்
- நூலக அறையில்
- இனிய தமிழ் கட்டுரைகள் ஆசிரியர் மணிமாலா மதியழகன் , சிங்கப்பூர்
- பரிசோதனைக் கூடம்
- இந்திய புதிய கல்விக்கொள்கை – ஓர் சிங்கப்பூர் ஒப்புநோக்கு – அத்தியாயம் மூன்று
- பாரதம் பேசுதல்
- ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- இலக்கிய நயம் : குறுந்தொகை
- கருஞ்சக்தி இயக்கம் பற்றி விளக்கும் தற்போதைய புதிய பிரபஞ்ச நியதி