கு. அழகர்சாமி
திசைவெளியெல்லாம் யாருமற்று கேட்க
தீனக்குரலெடுத்து கதறும்
அது.
ஒரு
பிடி
புல் போட்டாலென்ன
அவன்?
அடுத்த பலி
அது-
பலி அறியாதாயினும்
பசி அறியாதிருக்குமா
அது?
ஒரு
பிடி
புல்
போட்டாலென்ன
அவன்?
கூற்றாய்க் காத்திருக்கும் கொலைப்பசியில்
அவன் வெட்டுக்கத்தி.
உயிர் செகுத்த பின்
வயிறு பசிக்குமா
அரூப ஆட்டுக்கு?
ஒரு
பிடி
புல் போட்டாலென்ன
அவன்?
கூற்றின்
கொண்டாட்டம்.
ஒரே
வெட்டு.
அறுபட்டு விழும்
ஆட்டின் தலை.
பீறிட்டடிக்கும்
அவன்
குருதி.
திசைவெளியெல்லாம் யாரும் கேட்க
தீனக்குரலெடுத்து கதறும்
அரூப
ஆடு.
பசியிலல்ல-
கு. அழகர்சாமி