
தமிழகத்தில் எது இன்று அதிகாரப்பூர்வமான “சரியான அரசியல்” politically correct என்பதை சமீபத்தில் ஆர்.எஸ் பாரதி என்னும் திமுக தலைவரின் தனது பேச்சில் உறுதி செய்திருக்கிறார்.
அரசியல் ரீதியில் அவர் இரண்டு விசயங்களை பேசியிருக்கிறார்.
ஒன்று தலித் நீதிபதிகள் நியமிகப்பட்டது திராவிட இயக்கத்தின் பிச்சை என்று சொல்லியிருக்கிறார்.
இரண்டாவது பத்திரிக்கைக்காரர்கள் ரெட்லைட் ஏரியாக்காரர்கள் போல காசுக்கு விலைபோவதாக குறிப்பிட்டிருக்கிறார்.
இரண்டுமே இன்றைய தமிழகத்தில் “சரியற்ற அரசியல்” politically incorrect. இரண்டையுமே பேச கூடாது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்திய பின்னர், இந்த இரண்டுக்கும் மன்னிப்பு கேட்டுகொண்டார்.
தலித் மக்களின் தலைவராக தன்னை முன்னிறுத்திகொள்ளும் திருமாவளவன் சில பல நாட்கள் கழித்து, அவர்கள் நீதிபதி பதவிகள் எல்லாம் பெற்றது அம்பேத்கார் அரசியல் சாசனத்தில் ஏற்படுத்தி கொடுத்த உரிமை என்று பேசியிருக்கிறார். (அவர்கள் திறமையினால் பெற்றார்கள் என்று திருமாவளவன் ஏனோ குறிப்பிடவில்லை. அதன் காரணம் அதன் காரணம் யாருக்குத் தெரியும்? )
திறமையினால் உயர்ந்த எத்தனை எத்தனையோ பட்டிலினத்தவர்கள் பல இடங்களில் பல்வேறு துறைகளில் கோலோச்சிகொண்டிருக்கிறார்கள். ஆனால் அவை எல்லாம் அரசியல் பேச உதவாது என்று திருமாவளவன் கருதிவிட்டார் போலிருக்கிறது. இளையராஜா என்னும் மேதையினால் இன்று தமிழக இசையுலகமே பெருமைப்பட்டுகொண்டிருக்கிறது. அதற்கு அம்பேத்காரோ அல்லது திராவிட இயக்கமோ எந்த பிச்சையும் போடவில்லை என்று சொல்லவேண்டியிருக்கிறது. அவர் போல எத்தனை எத்தனையோ திறமைசாலிகள் எவரது பிச்சையையும் எதிர்பாராமல் எவரது பிச்சைக்கும் தேவையிராமல் அவர்கள் பாட்டுக்கு வேலையில் மும்முரமாக இருக்கிறார்கள்.
இரண்டாவது பத்திரிக்கையாளர்கள் பலர் ரெட்லைட் ஏரியாக்காரர்கள் போல காசுக்கு கூவுகிறார்கள் என்று சொல்லுகிறார். தமிழகத்தில் பெரும்பாலான பத்திரிக்கையாளர்கள் திமுகவுக்கு சொம்பு தாங்கிகள் தான். தமிழகத்தில் எவ்வாறு ஸ்டெர்லைட், நீட், ஹைட்ரோகார்பன் இன்ன இதர ஆகியவை பெரும் பிரச்னைகளாக ஊதி ஊதி உருவாக்கப்பட்டன, இந்த விவாதமேடைகள் யாரை குறி வைத்தன, யாருக்கு ஆதரவாக விவாதத்தை உருவாக்கின என்பதை பார்த்தவர்களுக்கு அதில் எந்த சந்தேகமும் இராது. ஆனால், அங்கங்கு இருக்கும் ஓரிரு பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சி விவாத மேடை உருவாக்குபவர்கள், திமுகவை பற்றியும் பேசிவிட்டால், அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார் இந்த திமுக தலைவர் ஆர்.எஸ். பாரதி அவர்கள். ஒருவேளை திமுக ஆதரவு பத்திரிக்கையாளர்கள் இப்படிப்பட்டவர்கள் என்று அவர் நினைப்பதால் ஒட்டுமொத்த பத்திரிக்கையாளர்களுமே அப்படித்தான் என்று நினைத்துவிட்டாரோ என்னமோ !
இதை பற்றியும் ஈயம் பூசுனமாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும் என்ற வகையில் பத்திரிக்கையாளர்கள் கண்டனத்தை பதிவு செய்துவிட்டு அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார், ஆகையால் இதனை பற்றி பேசக்கூடாது என்று அறிவுஜீவி புளுகர்கள் அறிக்கைவிட்டு திமுகவுக்கு சொம்படிக்க கிளம்பிவிட்டார்கள்.
மூன்றாவது என்று ஒன்று அவர் சொன்னார். ஆனால் அது பொலிடிகலி கரெக்ட்.
அதாவது ஹெச் ராஜா அவர்களை பொறுக்கி நாய் என்றும் பார்ப்பன நாய் என்றும் குறிப்பிட்டார்.
இது தமிழ்நாட்டில் எந்த ஒரு பத்திரிக்கையாளரும், பத்திரிக்கையும், அரசியல் விமர்சகரும், விகடனும், பெருந்தேவி, ராஜன்குறை, காலச்சுவடு கண்ணன், கலாப்ரியா, அம்ஷன்குமார், ஸ்டாலின் ராஜாங்கம், கோ ராஜாராம், வெளி ரங்கராஜன், அம்பை போன்று (சில நேரங்களில் நான் முரண்பட்டாலும்) மதிக்கும் சிந்தனையாளர்கள் எவருமே இதனை விமர்சிக்கவோ, பேசவோ இல்லை. இதற்காக முக ஸ்டாலின் ஆர் எஸ் பாரதியிடம் மன்னிப்புக்கேளுங்கள் என்று சொல்லவுமில்லை. ஆர்.எஸ் பாரதி மன்னிப்பு கேட்கவுமில்லை. ஏன், வேறெந்த நபரும் இதனை பேசக்கூட இல்லை. பார்ப்பனர்களால் பலனடைந்தவர்கள் மட்டுமே அவர்களுக்கு பரிந்து பேசவேண்டும் என்ற வார்த்தையையும் நான் நிராகரிக்கிறேன். இது ஒரு அடையாளத்தின் மீதான தாக்குதல். இது அசிங்கமான, பிறப்பின் அடிப்படையிலான, இனவெறுப்பு அரசியல்.
இதுதான் பரந்த தமிழக வெளியில் பெரியாரின் மிகப்பெரிய வெற்றி.
பெரியார் பரப்பியது வெறும் இனவெறுப்பு தானே தவிர அதில் எந்த விதமான புண்ணாக்கும் இல்லை என்று நான் வாதிட்ட போதெல்லாம் எடுத்து காட்டி பேசியவர்கள் இன்று ஒரு பார்ப்பன தாய் தந்தைக்கும் பிறந்த ஒருவரை பார்ப்பன நாய் என்று சொல்லும்போது அதனை மிக எளிதாக, அது ஒரு விஷயமே இல்லை என்பது போல கடந்து செல்கிறார்கள்.
ஹெச் ராஜாவை பொறுக்கி நாய் என்று சொல்லுவது அவரை தனிப்பட்ட முறையில் தாக்குவது. ஆனால் பார்ப்பன நாய் என்று சொல்லுவது பார்ப்பன குலத்தில் பிறந்தவர்கள் மீது எறியப்படும் பொதுவான பகிரங்கமான வசைச்சொல்.
இந்த வெறுப்பு, யூதர்கள் மீது கிறிஸ்துவம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கட்டமைத்த வெறுப்புக்கு கொஞ்சமும் குறைந்ததில்லை.
இதே ஆர்.எஸ் பாரதி, இதே வார்த்தைகளோடு கிறிஸ்துவரையோ அல்லது இஸ்லாமியர்களையோ அல்லது செட்டியார்களையோ அல்லது பட்டியலினத்தவரையோ சொல்லியிருந்தால் தமிழகத்தில் எப்படிப்பட்ட கொந்தளிப்பான நிலை உருவாகியிருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.
இங்கே திமுக வெற்றிகரமாக இரண்டு அன்னியர்களை கட்டமைத்திருக்கிறது. ஒன்று பார்ப்பனர்கள். இவர்கள் நாய்கள். மற்றொன்று பட்டியலினத்தவர்கள். இவர்கள் திராவிட இயக்கத்தின் பிச்சையில் வாழ்பவர்கள். பார்ப்பனரல்லாத, பட்டியலினத்தவர் அல்லாத, குலங்களை ஒன்றிணைப்பது திராவிட இயக்க போர்வை. இதற்குள் வடுகர்கள், கன்னடர்கள் எல்லாரும் வரலாம். ஆனால் பட்டியலினத்தவரும், பார்ப்பனர்களும் விலக்கு.
“திமுக இந்துக்களுக்கு எதிரி அல்ல” என்று ஆர்.எஸ் பாரதி, முக ஸ்டாலின் போன்றவர்கள் தற்போது சொல்லிகொள்வது. திமுக இந்துக்களுக்கு எதிரி அல்ல என்றும், நாங்களும் இந்துக்கள்தான் என்றும், நானும் இந்து கோவிலுக்கு போகிறேன் என்று சொல்லுவதும் காட்டும் அடிப்படை முரண்பாட்டை அவர்கள் உணர்ந்தும், அதில் இன்று சால்ஜாப்பு சொல்லி மேலும் மாட்டிகொள்கிறார்கள்.
”இந்து என்று சொல்லாதே இழிவைத்தேடி கொள்ளாதே” என்று முழக்கமிட்ட திகவும் திமுகவும் இன்று ஏன் தங்களை இந்துக்கள் என்று சொல்லி “இழிவை” தேடிக் கொள்கிறார்கள்? தன்னை இந்து என்று சொல்லிகொள்ளும் திமுக தலைவர் ஏன் இஸ்லாமியரின் திருமணத்தில் சென்று இந்துக்களின் திருமணத்தை கிண்டல் செய்யவேண்டும்? இது எப்படியான இந்து? அங்கே யாரும் இந்து மதத்தை கிண்டல் செய்தால், நானும் இந்துதான், அவ்வாறு கிண்டல் செய்வது என்னை அவமானப்படுத்துவதற்கு சமம் என்று சொல்லியிருக்கிறாரா ஆர்.எஸ் பாரதியோ அல்லது முக ஸ்டாலினோ? இந்து மதம் என்பது பார்ப்பனர்களின் மதமாக இவர்கள் கட்டமைத்ததை இவர்களே ஒப்புகொள்ளவில்லை என்பதுதானே உண்மை? அதனால்தானே இவர்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று அங்கிருக்கும் குலதெய்வத்திடம் இந்து பாரம்பரியத்தின் படி நின்று வணங்கி அந்த பூசாரியிடம் திருநீறு பெறுகிறார்கள்? இந்து கோவில்களுக்கு தர்ம கர்த்தர்களாக இருக்கிறார்கள்? சமயபுரம் மாரியம்மனுக்கு முன்னால் சென்று அழுகிறார்கள்? கள்ளழகர் கோவிலில் உரிமை கொண்டாடுகிறார்கள்?
ஆனால், இந்த முரண்பாட்டை அவர்கள் உணராததால், பெரியார் பரப்பியிருக்கும் இந்த பார்ப்பனர்கள் மீதான வெறுப்பு இங்கே கால் வைக்கும் இடமெல்லாம் சகதி போல காலில் சிக்கிக்கொள்கிறது. நாம் சகதியில் நிற்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் அனைவரும், பார்ப்பனர்கள் உட்பட, இதில் குளித்து சந்தனமாய் பூசிகொள்கிறார்கள்.
இந்திய கலாச்சாரத்தின் மீதும் இந்து கலாச்சாரத்தின் மீது கிறிஸ்துவ போதனையாளரும், இஸ்லாமிய போதனையாளரும், காலனிய அடிவருடிகளான திராவிட இயக்கத்தினரும் எறியும் சாணியே பார்ப்பனர்கள் மீது எறியும் சாணி. பார்ப்பனர்கள் என்பது இங்கே வெறும் குறியீடு மட்டுமே.
எந்த நாட்டின் மரபையும் அதன் அறிவுச்செல்வத்தையும் அழிப்பதே இம்பீரியலிஸ மதங்களின் முதன்மை பணி. இந்த பணியின் விளைவே பிரிட்டன், பிரான்ஸ், ஐயர்லாந்து நாட்டில் இருந்த டுரூயிட்கள் (Druids) அழிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியே அமெரிக்காவில் ஷாமன்கள் கத்தோலிக்கத்தால் அழிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியே சூனியக்காரிகள் என்று பெயர் சூட்டி பல புராதன அறிவை கொண்டிருந்தவர்கள் அழிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியே இந்தோனேஷியாவில் இந்துக்கள் கொல்லப்பட்டு, பல இந்துக்கள் பாலியில் தஞ்சம் புகுந்தது.
காலனிய ஆதிக்கத்தினால் மூளைச்சலவை செய்யப்பட்டவன் தனது கலாச்சாரம் இழிவானது என்று நம்பத்தொடங்குகிறான். அல்லது நம்ப வைக்கப்படுகிறார்கள். ஆஸ்திரேலிய பழங்குடிகளின் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து கட்டாயமாக பிரித்து எடுக்கப்பட்டு வெள்ளையர்கள் நடத்தும் ஹாஸ்டலில் அவர்களை பற்றி அவர்களே குற்ற உணர்வு கொள்ளும் அளவுக்கு வளர்க்கப்பட்டார்கள். அமெரிக்காவில் பழங்குடியினரின் குழந்தைகளும் இவ்வாறே பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு ஹாஸ்டலில் வளர்க்கப்பட்டார்கள். இந்த குழந்தைகள் பல கொல்லப்பட்டன. பல குழந்தைகள் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார்கள்.
அப்படிப்பட்ட உளச்சிக்கலில் இன்று முழு தமிழகமே சிக்கிகொண்டிருக்கிறது. இதற்கு ஒரு விடிவோ விமோசனமோ இங்கே நான் பார்க்கவில்லை. ஏனெனில் இது உளவியல் சிக்கல் என்றே புரிந்துகொள்ளாத ஒரு கூட்டமே இங்கே நான் காண்கிறேன்.
என்னை பார்ப்பன அடிவருடி என்று நிச்சயமாக கூறுங்கள். நிச்சயமாக அது பெரியாரிய நாஸி இனவெறுப்பு அடிவருடியாக இருப்பதை விட எவ்வளவோ மடங்கு மேலானது.
- டியோ ச்யூ ராமாயி
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- இந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்டப் போகிறது
- ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நான் ஆதரிப்பது ஏன் ?
- ஊர் மாப்பிள்ளை
- பெரியார் தமிழகத்துக்கு கொடுத்த ஒரு பெரிய கொடை
- சூதும் அன்பும் சேர்ந்ததே உலகம்…………..
Outstanding ! பலரும் மூடி மறைக்கும் உண்மையை மிகச் சரியாக எடுத்துக் கூறியமைக்கு.
உண்மையை உரத்துச்சொன்னதற்கு பாராட்டுகள்.
பெரும்பாலான ஊடகங்கள் என்னவோ அந்த ஜந்து சொன்னதுபோலத்தான் நடந்துகொள்கின்றன. பின்னே, இதையே ஒரு பார்ப்பனர் சொல்லியிருந்தால் இன்னேரம் ஒட்டுமொத்த ஊடகங்களும் கொந்தளித்துக்குமுறியிருக்காதா ? உண்மையில் ஊடகங்களுக்கு சட்ட நெறிமுறைகள் வகுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
இந்த ஜந்துவிற்கெல்லாம் கால்துடைத்துவிடுமளவுக்குக் கீழிறங்கியிருக்கும் அப்துல் ஹமீது, அவர் வருத்தம் தெரிவித்துவிட்டார் என்பதால் அதற்குப்பிறகு அவரை யாரும் விமர்சிக்கக்கூடாது என்கிறார். ”மனுஷ்யபுத்திரன் என்னும் கவிஞர்” என்ற பீடத்தில் அமர்ந்திருந்தவர் இவர். சேராத இடம்தன்னில் சேர்ந்ததன் விளைவு.
இப்படிப்பட்ட வெறுப்புப்பேச்சிற்கு தீண்டாமைச்சட்டத்தின்கீழ் உள்ளே தள்ளி முட்டியைப்பெயர்த்திருக்கவேண்டும்.
ஃபேஸ்புக் முழுக்க இந்த இனவெறுப்பு வாதம்தான். இந்துமதம் என்பதே வந்தேறிய மதம் என்பதாகக்கூடப் பேசப்படுகிறது. வருத்தமாக இருக்கிறது.
சமூக ஊடகங்கள் ஒரு திறந்த வெளியில் நடமாடும் விடுதலையைத் தனிமனிதனுக்குத் தருகின்றன. அதை பலரும் பலவிதமாக – நன்றாக, அல்லது கேடாக – பயன்படுத்தினாலும், இப்படிப்பட்ட உள்ளக்கிடைக்கைகளை வெளிப்படுத்துதலை நான் தவறென்று சொல்ல மாட்டேன். காரணம்: வெளிபடுத்தவில்லையென்றால், அவர்களிடமிருந்து காணாமல் போய்விடுமா? போகாது. மாறாக, அது பிறவழிகளில் வெளிப்படும். ஓபனாகவே சாதிக்கட்சிகள் இருக்கின்றன. சில தேர்தலிலும் போட்டியிட, நீங்களோ, சமூக வலைதளங்களில் முகந்தெரியா பாமரர்கள் எழுத்தை விமர்சிக்கிறீர்கள். சாதிக்கட்சிகளில் இனவாதத்தை எதிர்த்து ஏதாவது திண்ணையில் கட்டுரை எழுத முடியுமா?
உன்னத நடிகர் பெரியார்
சி. ஜெயபாரதன், கனடா
உயிர்ப்பித்த பெரியாரை
திரைமே டையில் ஏற்றி
உரை முழக்கி
நடிக்க வைத்துள்ளார்.
ஒருபுறம் புத்தர்.
மறுபுறம்
எழில்மிகும் இளம் மனைவி.
இடது கையில்
கைத்தடி.
வலது கையில் தீப்பந்தம் !
வாயில் வருவது
தீப்பறக்கும் சொற்கள் .
பிள்ளையார்
சிலை உடைப்பார் சீடர் !
செருப்பால்
அடிப்பார் பெரியார் !
இந்து மதத்தை எதிர்ப்பதாய்
இனவெறுப்பு,
இறைமை மறுப்பு தான்.
“பெரியாரியம்” என்றால்
எழுபது வயதினிலே
கிழவர் குமரி
அபூர்வத் திருமணம்.
கவிச்செல்வர்
கம்பர் படைத்த காவிய
இராமாயணம்
அம்புலி மாமா கதையாம் !
திரைப்படத்தில்
பெருஞ் செலவு செய்து
பேசுவது
பெரியார் நடிகர்.
ஏழை, எளியவர், எல்லாம்
இழந்தவர் தமக்கு
இலவசக் கல்விக் கூடம்
நிறுவலாம்.
+++++++++++++++
யாரில்லை கடவுளா ?
சி. ஜெயபாரதன்
கடவுள் இல்லை என்றார்
பெரியார்.
கடவுள் இல்லவே இல்லை
என்று முழக்கியவர் பெரியார்.
கடவுளுக்கு என்றுமே
மரணம் இல்லை.
செத்தவர் பெரியார்.
கடவுள்
நடமாடு மோர்
பிரபஞ்சம்.
உன் நாவிலும் மற்றும்
என் நாவிலும்
பெரியார் நாவிலும்
திராவிட
கழகத்தோர் நாவிலும்
என்றும்
எங்கும் இருப்பது
கடவுள் நினைவுதான்.
என்றும் மரணம் இல்லை
எங்குமுள்ள இறைவனுக்கு.
நேற்றுப் பிறந்த
பெரியார் இன்று
மூச்சு நின்று
முகவரி
இல்லாது போனார்.
மனித ருக்கு
மரணம்.
பிரஞ்சம் இயங்குது
யுக யுகமாக.
தெரியாமலே இயக்கும்
கடவுளுக்கு இல்லை
மரணம்.
+++++++++++++++++++
// கடவுள் இல்லையென்றார் பெரியார்
கடவுள் இல்லவே இல்லை என்று முழங்கியவர் பெரியார்
கடவுளுக்கு என்றுமே மரணம் இல்லை
செத்தவர் பெரியார்.//
கடவுளுக்கு மரணம் இல்லை…அப்படி மரணிப்பவன் கடவுளாக இருக்க முடியாது.ஆனால் யதார்த்த உலகம் இந்த நம்பிக்கையில் இல்லையே! ஆபிரஹாமிய பிரதான கிருத்துவ மார்க்கமே “ கர்த்தராகிய ஆண்டவராகிய இயேசு கிருஸ்து சிலுவையில் மரித்தார். ( பின்பு உயிர்த்தெழுந்தது வேறு). திரு.ஜெயபாரதன் அவர்கள் நம்பிக்கையின்படி மரித்த இயேசு எப்படி கடவுளாக இருக்க முடியும்? ஆனாலும் அவர் நம்புகிறார்.ஆனால் பெரியாரின் கடவுள் மறுப்பை எதிர்க்கிறார்.
இதோ…பெரியாரே பேசுகிறார்…….
கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்பதற்காகக் கோபித்துக் கொள்ளும் சிகாமணிகளே! நான் கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்றால் எதற்காக நீங்கள் கோபித்துக் கொள்ள வேண்டும்? உண்டாக்கியவன் முட்டாள் என்றால் உண்டாக்கியவன் யார்? அச்சொல் யாரைக் குறிக் கிறது? கோபிக்கிறவனே நீ கடவுள் உண்டாக்கப்பட்டது என் பதை ஒப்புக்கொள்கிறாயா? கடவுளை உண்டாக்கியவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக்கொள்கிறாயா? உனது முட்டாள்தனத்தைக் காட்டத்தான் கோபிக்கிறாய், ஆத்திரப்படு கிறாய். நிற்க, உன் ஆத்திரத்திற்குக் காரணம் ஆதாரம் என்ன?
முண்டமே! நீ நினைக்கும் கடவுள் ஒருவனால் உண்டாக் கப்பட்டது என்கிறாயா? அல்லது அது ஒருவனால் கண்டு பிடிக்கப்பட்டது என்கிறாயா? அல்லது கடவுள் யாராலும் உண் டாக்கப்படாமல், யாராலும் கண்டுபிடிக்கப்படாமல் தானாக, இயற்கையாக, கடவுள் இஷ்டப்படி கடவுளே தோன்றிற்று என்கிறாயா? நான் சொல்வதில் உனக்கு ஆத்திரம், கோபம் வருவதாயிருந்தால், எதற்காக வரும்? நான் சொல்வதை, கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று நீ கருதினால்தானே உண்டாக்கியவனை நான் முட்டாள் என்கிறேன் என்று நீ கோபிக்க வேண்டும்?
மற்றும் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று கருதுகிறவனுக்குத் தானே கோபம், ஆத்திரம் வரவேண்டும்!
நீ கோபிப்பதால் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்பதை நீ ஒப்புக்கொள்கிறாய் என்றுதானே அர்த்தம்?
அது மாத்திரமல்லாமல், நீ கோபிப்பதால் கடவுளையும் அவமதிக்கிறாய் என்றுதானே கருத்தாகிறது?
இப்போது நீ நினைத்துப் பார்! கடவுள் உண்டாக்கப்பட்டதா? (கிரியேஷனா?) (Creation) அல்லது கடவுள் கண்டுபிடிக்கப் பட்டதா? (இன்வென்ஷனா?) (Invention) அல்லது கடவுள் இயற்கையாய்த் தோன்றினதா? (நேச்சரா) (Nature) இதை முதலில் முடிவு செய்து கொள்.
நான் சொல்வதன் கருத்து – கடவுள் கண்டு பிடிக்கப் பட்டதுமல்ல; தானாகத் தோன்றியதுமல்ல; முட்டாளால் உண்டாக்கப்பட்டது என்பதாகும். அதை, அதாவது கடவுளை, ஒரு மனிதன் உண்டாக்கினான் என்பதாக நீ நினைத்தாலோ அல்லது அதை நீ ஒப்புக்கொண்டாலோதானே கடவுளை உண் டாக்கியவன் முட்டாள் என்றால் நீ கோபித்துக் கொள்ள வேண்டும்?
நீ இருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கும் கடவுள் ஒருவராலும் உண்டாக்கப்பட்டதல்ல; தானாக சுயம்புவாகத் தோன்றியிருக்கிறது என்பதுதான் இன்று கடவுள் நம்பிக்கைக் காரர்களின் கருத்து ஆக இருக்கிறது.
ஆகையால், நான் கடவுளை உண்டாக்கியவனை முட்டாள் என்பதோடு அதற்காகக் கோபிப்பவனை இரட்டை முட்டாள் என்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்.
இப்படி நான் சொல்வதால், கடவுளால் எவன் பெரிய ஜாதியாய் இருக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறானோ அவனுக்கும், கடவுள் பேரால் பொறுக்கித் தின்ன வேண்டுமென்று கருதிக் கொண்டிருக்கிறவனுக்கும், கடவுளால் தனது அயோக் கியதனங்களை மறைத்துக் கொள்ள வேண்டியவனுக்கும்தான் கோபம் வரவேண்டும் – அதை நான் சமாளித்துக் கொள்கிறேன்.
– ஈ.வெ.ரா
– ‘உண்மை’, 14.3.1970
பல்லாயிரம் ஆண்டு காலம் இந்திய மண்ணில் பிறந்து, வளர்ந்து, வசிக்கும் தமிழரை வந்தேறிகள் என்று இழிவு செய்வது மாபெரும் தவறு.
தமிழினம் இப்போது உலகிலே சுமார் 200 நாடுகளில் புலம்பெயர்ந்து உள்ளது.
அவர்களே தங்களை அன்னியர்கள் என நினைத்து, தனிக் கலாச்சாரம், தனி பாஷை என்று பொது சமூகத்திலிருந்து தங்களைத் தாங்களே பிரித்துக்கொண்டு தங்களுக்குள்ளேயே வாழ்ந்தால்…? இங்குமட்டுமல்ல சிக்காகோவிலும், அவர்கள் பாசையிலேயே நாடகங்கள் அவர்கள் இரசிக்க அரங்கேற்றுகிறார்கள் என்று தெரியுமா சார்? புலம் பெயர்ந்த பின்னும் தமிழன் என்று ஒன்று சேரவில்லை.
பெரியார் ஒரு
சோசியல் டைனாமிக்ஸ் விஞ்ஞானி.
அவர்
வகுப்பு வாரியம்
பேசவில்லை என்றால்
கருப்புத்தமிழன்
காணாமல் போயிருப்பான்.
பெரிது பெரிதுமானிடம் பெரிது.
மனித நியாயத்தின் சரித்திரம்
மண்ணுக்குள் போய்விடாமல்
இருக்க
மண் வெட்டி தந்தவர் பெரியார்.
நூல் போட்டுக்கொண்டவர்கள் எல்லாம்
நூல் படித்தவர்கள் என்று
நூல்விட்டு செய்த சாணக்கியத்தில்
தமிழர்களே தமிழ் நாட்டில்
மிலேச்சர்கள் எனும் அன்னியர்கள் ஆனார்கள்.
வெள்ளைக்காரன்
இன்னொரு வெள்ளைக்காரனுக்குத்தான்
சுதந்திரத்தைக்கொடுப்பான்
என்று
சுதந்திரத்துக்கு போராடவில்லை
பெரியார்.
கருத்து சுதந்திரம் இல்லாமல்
சாதிகள் காட்டி
கடவுள் என்னும் கல்லைக்கட்டி
தமிழனை
அறியாமைக் கடலுக்குள் எறிந்துவிடும்
அபாயத்தை தடுத்த
சமுதாய அறப்போரட்டத்தின்
தந்தை பெரியார்.
அவரைக்
கொச்சைப்படுத்தி
மகிழ்ந்து பார்க்கும் அறிவுஜீவிகளுக்கு
அறிவும் இல்லை
ஜீவனும் இல்லை.
========================================ருத்ரா இ பரமசிவன்
பெரியார் மட்டும் இல்லையென்றால் இன்று காலை நான் காலை கடன் முடித்திருக்கவே முடியாது
இதிலும் ஒரு பேருண்மை இருக்கிறது. அது பெரியாரைத்தான் காட்டும். நீங்கள் காலைக்கடன் களை கழிக்க சிரமப்பட்டால், சாமி கும்பிட்டால் சிரமம் போயிவிடும் என்று உங்கள் சாமியார்கள் சொல்வார்கள். ஆனால் பெரியார் எச்சரிப்பார்: ”வெங்காயம்! அவர்களை நம்பினால் சீக்கிரம் செத்துவிடுவாய் உடனே டாக்டரைப் பார்!” என்று கட்டாயப்படுத்துவார். டாக்டர், ஆபரேசன் பண்ண வேண்டுமென்பார். சரியென்றால், ஆப்ரேசன பண்ணப்படும். கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிவிடும். பெரியாரின் முக்கியம் தெரிகிறதல்லவா? நான் பெரியார் என்ற சொல்லை ஒரு ரெப்ரசென்டேசனாகவே இங்கு எழுதுகிறேன். அதாவது அவர் விஞ்ஞானத்தின் சார்பாக சமூகத்தில் நிலையெடுத்து வாழ்ந்தவர் என்பதே அந்த ரெப்ரசென்டேஷன். விஞ்ஞானத்தை நம்பினால் வாழ்வு. அதைத்தான் இன்றைய க்ரோனா உலகம் நம்புகிறது.
திராவிடத் தந்தை
சி. ஜெயபாரதன்
பெரியார்
மெட்ராஸ் மாகாணத்தில்
வாழ்ந்த
தெலுங்கு, கன்னட
கேரள, தமிழர் யாவரும்
திராவிடர்
என்று சொல்லி
தனித் திராவிட நாட்டுக்கு
பிரிவினை நாள்
உரிமை கொண்டா டியவர் !
மொழிவாரி
மாநிலங்கள் நிரந்தரமாக
” திராவிடநாடு ”
புதைக்கப் பட்டது !
இந்திய வரைப்படத்தில்
இல்லாத
திராவிட நற்றிருநாடு,
தினமும்
தமிழகத்திலே
நாட்டுப் பாடலாக
ஒலிப்ப தெப்படி ?
தமிழர் இடது கையில்
“திராவிடன் நீ”
“சூத்திரன் நீ” என்று
பச்சை குத்தியவர்
பகுத்தறிவுப் பெரியார் !
இந்தி மொழியைப்
படிக்காதே !
இந்தியன் இல்லை நீ
என்று
தமிழரைத்
தனித் தீவில் அடைத்து
தவிக்க விட்ட
புவித் தலைவர்
பெரியார் ! பெரியார் !
பெரியார் !
சி. ஜெயபாரதன்
//மொழிவாரி
மாநிலங்கள் நிரந்தரமாக
” திராவிடநாடு ”
புதைக்கப் பட்டது !
இந்திய வரைப்படத்தில்
இல்லாத
திராவிட நற்றிருநாடு,
தினமும்
தமிழகத்திலே
நாட்டுப் பாடலாக
ஒலிப்ப தெப்படி ?//
உண்மைதான்! இந்திய வரை படத்தில் இல்லாத திராவிட நாடு தமிழத்தில் நாட்டுப் பாடலாக ஒலிப்பது தவறுதான்.ஆனால் உண்மையென்ன? இந்திய வரை படத்தில் உள்ள கன்னடமும்,களி தெலுங்கும்,கவின் மலையாளமும் துளுவும் மனோன்மணி சுந்தரனார் முழுப்பாடலில் இருக்கத்தான் செய்கிறது.பாதிப்பாடலை மட்டும் பாடி குற்றம் சுமத்துவானேன்? முழுப்பாடலையும் தாராளமாகப் பாடலாமே! யார் தடுத்தது?
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!,..
“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்”
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!..
அன்று சென்னை மாகாணத்தில் தென் திராவிட மாநிலங்கள் ஒன்றாக இணைந்திருந்தன.ஆனால் இன்று இல்லை. “நீராரும் கடலுடுத்த” பாடலும் இதைத்தான் சொல்கிறது.அன்று திராவிடத் திருநாடு இருந்தது….இன்று இல்லை என்பதாலே..கடந்த கால சொல்லான (Past tense)…”´இருந்த”….பெரும் தமிழணங்கே! என்று சொல்லி இன்று இல்லை என்கிறது.ஆகவே பாடல் சரியாகவே பாடப்படுகிறது.
எல்லாம் அறிந்த ஷாலி அவர்களே,
பெரியார் காலத்திலே புதைக்கப்பட்ட திராவிட நாட்டைத் தமிழர் ஏன் நாட்டுப் பாடலில் பாட வேண்டும் ??? திராவிடர் யார் ??? நீங்கள் தெலுங்கரா, தமிழரா, கன்னடரா ? கேரளரா ? துளுவரா ? உங்கள் பேரப் பிள்ளைகள் இந்திய வரைப்படத்தில் திராவிட நற்றிருநாடு எங்குள்ளது, திராவிடர் யாரென்று கேட்டால் என்ன சொல்வீர் ???
சுந்தரனார் பாடல் பிரிட்டிஷ் இந்தியாவுக்கு எழுதப் பட்டது. பாரதியார் பிரிட்டிஷ் ஆண்ட காலத்திலே “தமிழ்த்திரு நாடுதனைப் பெற்ற தாய் என்று வணங்கு” என்று இளைய தலைமுறைக்கு எழுதி வைத்துள்ளார். பாரதியார் திராவிட நாட்டைத் தன் இலக்கியப் படைப்புகளில் காட்ட வில்லை.
///தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்///
குழப்பம் செய்யும் வரிகள் – தெக்கணமும் அதிர் சிறந்த <> என்று மாற்றப்பட வேண்டும்.
சி. ஜெயபாரதன்
//தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்///
குழப்பம் செய்யும் வரிகள் – தெக்கணமும் அதிற் சிறந்த “செந்தமிழ் நற்றிருநாடு” என்று மாற்றப்பட வேண்டும்.
சி. ஜெயபாரதன்
Reply
///தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்//
தக்காணம் என்பது ஒரு இந்திய தீபகற்பத்தில் தென்பகுதியில் இருக்கும் நிலப்பரப்பு. அதிலடங்கிய பகுதி; எனவே, சுந்தரனார் ‘திராவிட நல்திருனாடு” என்று தெளிவாகச் சொல்கிறார். ‘திராவிட’ என்ற சொல், அசோகன் கல்வெட்டுக்களிலேயே இருக்கிறது. அதில் ஒன்று தில்லியில் நேசனல் ம்யூசியத்தில் இருக்கிறது. அது போக, 7ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும், சங்கரர், சிதம்பரத்தில் வாழ்ந்த சைவ சமய குரவரான சம்பந்தரை, ‘திராவிட சிசு” என்றழைத்ததாக இந்துக்களே சொல்கிறார்கள். எவருமே மறுக்கவில்லை.
இதுமட்டுமா? 6ம் நூற்றாண்டிலிருந்து, 9ம் நூற்றாண்டுவரை வாழ்ந்த, 12 ஆழ்வார்கள் பாடிய பாடல் தொகுப்பான நாலாயிர திவ்ய பிரபந்தத்தை, பின்னாளில் வந்த வைணவ பூர்வாச்சாரியர்கள் (இராமானுஜர், தேசிகன், நம்பிள்ளை, நஜ்ஜீயர்), திராவிட வேதம் என்று அழைத்தது இன்று வரை பயனபடுத்தப்படுகின்றது. வேதங்கள் சமஸ்கிருதத்தில்தானே இருக்கின்றன? அதற்கு மாறாக (‘மாறாக’ என்பது தவறு…அவைகளின் சாராம்சத்தை கொடுக்கும் என்று இருக்கவேண்டும்) தமிழில் எழுதப்பட்ட பாடல் தொகுப்பை, தமிழ்வேதம் என்றுதானே அவர்கள் அழைத்திருக்க வேண்டும்? ஏன் திராவிட வேதம்? (தமிழ் வேதம் என்றும் சிலர் குறிப்பிட்டாலும் பூர்வாச்சாரியர் திராவிட வேதம் என்பதால் அச்சொல் தெய்வீகத்தன்மையைத் தருகிறதாக வைணவர்கள் எடுக்கிறார்கள்)
திராவிடம் என்ற சொல் தமிழ் மொழியை மட்டும் குறிக்கும் சொல்லாக இல்லாமல், தக்காணத்தில் தென்பகுதியைக் குறிக்கும் சொல்லாகவே பயன்பட்டது. அப்பகுதி வெர்சஸ் வடைந்தியப் பகுதி என்ற எண்ண நிலைபாடே காரணம். இந்த எண்ண நிலைபாடே சங்கரர், தமிழரான சம்பந்தரை, தமிழ்ச் சிசு எனாமல், திராவிட் சிசு என்றார். இனி பாரதியாருக்கு வருவோம்…
//பாரதியார் திராவிட நாட்டைத் தன் இலக்கியப் படைப்புகளில் காட்ட வில்லை.
//தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்///
குழப்பம் செய்யும் வரிகள் – தெக்கணமும் அதிற் சிறந்த “செந்தமிழ் நற்றிருநாடு” என்று மாற்றப்பட வேண்டும்.
சி. ஜெயபாரதன்…//
தமிழ் நாட்டில் பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் திராவிடம் வருவதால்….அதை எதிர்த்து கலகக்குரல் எழுப்பும் திரு.ஜெயபாரதன் அவர்கள்…. இந்திய தேசீய கீதத்தில் இடம்பெறும் “திராவிட”த்தை ஏன் கண்டு கொள்ளவில்லை.?
ஜனகண மன அதி நாயக ஜெயஹே…..தொடர்ந்து வரும் பஞ்சாப சிந்து குஜராத்த, மராட்ட…”திராவிட” உத்கல வங்கா!…
இந்திய தேசிய கீதம் பாடும் அவரது பேரபிள்ளைகள்….திராவிடத்தை இந்திய வரை படத்தில் காட்டச் சொன்னால்…திரு.ஜெயபாரதன் எதைக் காட்டுவார்?
ஆகவே தமிழ்த் தாய் வாழ்த்துப் பாட்டை அவர் மாற்றியது போல இனி தேசிய கீதத்தையும் மாற்றி விடுவோம்…
“பஞ்சாப சிந்து குஜராத்த மராட்ட …செந்தமிழ் நற்றிரு நாடு வங்கா!
ஜெயஹே…ஜெயஹே..ஜெய ஜெயபாரதன் ஜெயஹே!”
பாரதிக்கு ஆரியம் மட்டுமே தெரியும்…திராவிடம் தெரியாது.இரவீந்திரநாத் தாகூர் அவர்களுக்கு திராவிடமும் தெரிந்துள்ளது.
///ஜனகண மன அதி நாயக ஜெயஹே… தொடர்ந்து வரும் பஞ்சாப “சிந்து” குஜராத்த, மராட்ட…”திராவிட” உத்கல வங்கா!…///
ஷாலி அவர்களே,
“சிந்து” பாகிஸ்தானில் உள்ளது. “திராவிடம்” இந்திய வரைப்படத்தில் இல்லை. தாகூர் பிரிட்டிஷ் இந்தியாவுக்கு எழுதிய தேசீயப் பாடல் திருத்தப்பட வேண்டும்.
அதுபோல் சுந்தரம் பிள்ளை எழுதிய நாட்டுப் பாடலில் “திராவிட நற்றிருநாடு” நீக்கப் பட்டு “செந்தமிழ் நற்றிருநாடு” என்பது சேர்க்கப் பட வேண்டும்.
சி. ஜெயபாரதன்
ஆகவே தமிழ்த் தாய் வாழ்த்துப் பாட்டை அவர் மாற்றியது போல இனி தேசிய கீதத்தையும் மாற்றி விடுவோம்…
“பஞ்சாப சிந்து குஜராத்த மராட்ட …செந்தமிழ் நற்றிரு நாடு வங்கா!
///ஜெயஹே…ஜெயஹே..ஜெய ஜெயபாரதன் ஜெயஹே!”
பாரதிக்கு ஆரியம் மட்டுமே தெரியும்…திராவிடம் தெரியாது.இரவீந்திரநாத் தாகூர் அவர்களுக்கு திராவிடமும் தெரிந்துள்ளது.////
தமிழகப் பாரதியாருக்குத் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்றால் என்னவென்று நன்கு தெரியும். ஆனால் ஆங்கிலக் கால்டுவெல் வகுத்த திராவிடம் தெரியாது.
வங்காலத் தாகூருக்கு ஆங்கிலக் கால்டுவெல் வகுத்த திராவிடம் மட்டும் தெரியும். ஆனால் பூர்வீகத் தமிழகத்தின் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்றால் என்ன வென்று தெரியாது.
சி. ஜெயபாரதன்
வன்முறைவாதி !
சி. ஜெயபாரதன், கனடா
திட்டித் திரிந்தவர்,
திராவிடத் தந்தை பெரியார்.
பிள்ளையார் சிலையை
உடைத்தால்
கடவுள்
இல்லாமல் போகுமாம் !
செருப்பால் அடித்து
சிலையை
தெருவெல்லாம்
கழுதை மேல் வைத்து
இழுத்துச் சென்றால்
கடவுள்
இல்லாமல் போகுமாம் !
என்ன பெரும்
உன்னத பகுத்தறிவு ?
கடவுளை நம்பியோர்
யாவரும்
முட்டாள், முட்டாள்
என்று சொல்லால், பன்முறைச்
சுட்டவர் பெரியார் !
முட்டாள் யார் ?
மூடர் யார் ?
பட்டாசு போல் தொடர்ந்து
வெடித்தவர்
வெண்தாடி வேந்தர்
பெரியார் !
சுட்ட பெரியார் தான்
நாமறிவோம்.
சுடாத பெரியார்
ஒருவரை
நாமென்றும் அறியோம்
பூமிதனில் !
சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++++++
கலிலியோ, நியூட்டன், கெப்ளர், ஐன்ஸ்டைன், வள்ளுவர், கம்பர், இளங்கோவடிகள், ஆண்டாள், அப்பர், சம்பந்தர், சுந்தரர், வாசகர், பாரதியார், அன்னை தெரேசா, அப்துல் கலாம் போன்றோர்
கடவுளை நம்பியோர்,
யாவரும்
முட்டாள், முட்டாள்
என்று சொல்லால், பன்முறைச்
சுட்டவர் பெரியார் !
முட்டாள் யார் ?
மூடர் யார் ?
பெரியாரின் சிறு
மூளைக்கு எட்டியது இந்த
வெங்காய விதி !
பெரு மூளையைக்
கேட்க
நேரமில்லை !
+++++++
சி. ஜெயபாரதன், கனடா
//கலிலியோ, நியூட்டன், கெப்ளர், ஐன்ஸ்டைன், வள்ளுவர், கம்பர், இளங்கோவடிகள், ஆண்டாள், அப்பர், சம்பந்தர், சுந்தரர், வாசகர், பாரதியார், அன்னை தெரேசா, அப்துல் கலாம் போன்றோர்//
ஆன்மிகவாதிகளையும் விஞ்ஞானிகளையும் சேர்த்து பேசக்கூடாது. சில விஞ்ஞானிகளுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தாலும் அது மூடனம்பிக்கைகளை ஏற்காது. கலிலியோ மதவாதிகளை எதிர்த்தார். கட்டிவைத்து எரிக்கப்பட்டார். அவரை எப்படி கடவுள் வந்து என்னை கலியாணம் செய்து கொள்வார் என நம்பிய ஆண்டாளுடன் இணைக்க முடியும்? ஐன்ஸ்டைன் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். வள்ளுவர், கடவுள் நம்பிக்கையை ஒரு கடவுளுக்குள் திணித்து மூடனம்பிக்கைகள் மேல் கட்டி விட வில்லை. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது விடின் என்றவர். அவரது மதம் பகுத்தறிவின் மேல் கட்டப்பட்டதே. பாரதியாரின் இறுதிக்கவிதை, நாத்திகத்தை பறை சாற்றியது. ஏன் அப்படி என்று கேட்டவருக்கு இந்து பற்றாளர் சொல்வது: ஆன்மிகத்தின் உச்சம் நாத்திக நிலையே என்கிறார்கள். பாரதியாரும் பகுத்தறிவின் மேல் கட்டிய கடவுள் நம்பிக்கையாளர். கந்தபுராணத்தில் இல்லாத புரட்டா என்றார் என் அப்பா என்று எழுதுகிறார் சகுந்தலா பாரதி. எனவே, எல்லார் பெயர்களையும் போட்டுக்குழப்பவேண்டாம்.
கடவுள் நம்பிக்கையாளர்களை இருவகையாகப் பிரிக்கலாம். 1. க்ரோனா வைரஸ் இறைவனே அனுப்பினான். அதை அவனே எடுப்பான் என நம்புவோர். 2. மனிதனின் அடாச் செய்லகளால் இயற்கை கொள்ளும் சீற்றமது. மனிதன் செய்த தவறை மனிதனே முயற்சி செய்து சரிக்கட்ட வேண்டும் என்பது. எனவே கண்மூடித்தனமாக, இருவகையினரை ஒன்று சேர்த்து பார்ப்பது, கடவுள் நம்பிக்கை என்றால் என்ன எனத்தெரியாதவர் செய்யும் அழிச்சாட்டியம்.
//கலிலியோ மதவாதிகளை எதிர்த்தார். கட்டி வைத்து எரிக்கப்பட்டார். ///
இல்லை. மத எதிர்ப்பாளி புருனோதான் உயிரோடு எரிக்கப் பட்டார். கலிலியோ ரோமா புரி கத்தோலியக் கொள்கைக்கு எதிரான வாதம் செய்ததால், வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்டார்.
சி.ஜெயபாரதன்
ஆம் வீட்டுச்சிறையில்தான் வைக்கப்பட்டார். I was wrong. ”பூமி பிரபஞ்சங்களுக்கு நடு. எனவே கதிரவன் பூமியைச் சுற்றுகிறது” என்ற கத்தோலிக்க கொள்கைக்கு மாறாக, ”சூரியனை பூமி சுற்றுகிறது” என்ற உண்மையைச் சொன்னதால்! அவர் காலத்தில் கத்தோலிக்கமே மதம். அதை எதிர்த்தவர். இந்தியாவில் இருந்தால், இராகு கேதுவை விழுங்குகிறது என்பதை ஏமாற்று என்று சொல்லி மாட்டிக்கொண்டிருப்பார். ஆனால், ”இராகு கேதுவை விழுங்குகிறது எனவே கிரகணங்கள் வருகின்றன ”என்று மதம் சொல்லும் அனைத்தையும் முதலை விழுங்குவதைப் போல விழுங்கி வாழ்ந்த, வாழும் மனிதர்களோடு ஒப்பிட்டீர்களே அதைத்தான் சொன்னேன்.
பெரியாரின் கொள்கைகளில் பிரதானமாகச் சொல்லப்படும் கடவுள் மறுப்பு என்பது பெரியாரின் கொள்கையே அல்ல என்பது அதிகம் கவனிக்கப்படாத உண்மை.பெரியார் கூறுகிறார்.
“ சாதி ஒழிப்பே எனது குறிக்கோள். ஆனால் சாதி அமைப்பு கடவுளின் மேல் கட்டப்பட்டிருப்பதால்…நான் அந்தக் கடவுளையும் மறுக்கிறேன்!”
பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு போட்டபோது,சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு அளித்த 68 பக்க தீர்ப்பில்….
“ கடவுள் உண்டு என்று கூற ஒருவருக்கு உரிமை உள்ள போது, அதை மறுத்துக் கூறும் கருத்துக் சுதந்திரம் மற்றவருக்குமுண்டு.இந்திய அரசியல் சாசனத்தின் கருத்துரிமை 19 வது பிரிவு,அடிப்படை ஜீவாதார உரிமையாகும்.அதைப் பறிக்க முடியாது.
தந்தை பெரியாரின் கொள்கைகளை ஒவ்வொருவரும் அறிவர். அவர் சுய மரியாதை இயக்கத்தை துவக்கி, ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, சமூக நீதி, இவைகளுக்காகப் பாடுபட்டு வந்தார்.
கடவுளும், மூட நம்பிக்கைகளும், ஜாதிகளும், பெண்னடிமையும், சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிராக,இருப்பதால் கடவுள் மறுப்பையும் சொல்ல அவர்களுக்கு அந்த உரிமையுண்டு.”
பெரியாரின் கடவுள் மறுப்பு, பிராமண வெறுப்பிற்குக் காரணம்,வேதம் கூறுகிறது.
தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ரா தீனம் தூ தைவம்
தன் மந்த்ரம் பிராமணாதீனம்
தங் பத பிராமணம் பிரபு ஜெய.!
உலகம் கடவுளுக்கு கட்டுப்பட்டது.கடவுள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர்,மந்திரம் பிராமணருக்கு கட்டுப்பட்டது. எனவே பிராமணர்களை நீங்கள் வணங்க வேண்டும்.எளிமையாகக் சொன்னால்…மனிதர்களில் பிராமணர்களே உயர்ந்தவர்கள்.
பெரியார் அவர்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி துறவியாகிவிடலாம் என்ற எண்ணத்தில் காசி நகர் செல்கிறார்.அங்கிருந்த அன்ன சத்திரங்களில் பிராமண அல்லாதாரை உள்ளே அனுமதிக்க மறுத்ததால்……அவர் பசியில் வாடி ……சத்திரத்திலிருந்து வீசி எறிந்த எச்சில் இலைகளிலிருந்த உணவை எடுத்துண்ண நேரிட்டது.இது அவரது மனதில் நீங்கா வடுவை ஏற்படுத்தியது.
அடுத்து ஒரு சம்பவம்….பெரியார் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த போது,… வ.வே.சு.அய்யரால் சேரன் மாதேவியில் “பரத்வாஜ குருகுலம்” எனும் பள்ளிக்கூடம் நடத்தப்பட்டு வந்தது.எல்லா சாதி மாணவர்களும் அங்கு படித்தனர்.காங்கிரஸ் சார்பாக மானியம் அப்பள்ளிக்கு அளிக்கப்பட்டு வந்தது.ஒரு முறை பெரியார் அவர்கள் அப்பள்ளியை பார்வையிடச் சென்றார். அப்போது உணவு இடை வேளையில் பிராமண மாணவர்களுக்கு என்று தனியான இடத்திலும்,மற்ற சாதி மாணவர்களுக்கு வேறொரு இடத்திலும் உணவளித்தனர்.
மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் சாதிப்பாகுபாடு,பிரிவினை காட்டக்கூடாது என்று பெரியார் கண்டித்தார்.பண உதவியையும் உடனே நிறுத்தினார்.ஆயினும் பெரியார் பேச்சையும்,இப்படி செய்யக்கூடாது என்று காந்திஜி தடுத்ததையும் வ.வே.சு.ஐயர் ஏற்கவில்லை.இதுதான் பிராமண தர்மம் என்று கூறி விட்டார்.காங்கிரசில் இருந்து கொண்டு சாதி ஒழிப்புக்கு போராட முடியாது என்பதால்…காங்கிரசை விட்டு பெரியார் விலகினார். ஆகவே பெரியாரின் அசல் கொள்கை கடவுள் மறுப்பல்ல. சாதி ஒழிப்பே!
பெரியாரை எந்தத்தளத்திலும் எதிர்க்கத் துணியாதவர்கள்…அவர் எழுப்பிய கேள்விகளுக்கு இன்னும் விடை தேடிக் கொண்டிருக்கும் அறிவு ஜீவிகள்…அவர் கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்ய….அவரை இறை மறுப்பாளராக மட்டுமே நிறுவுவதுதான் ஒரே வழி என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது பரிதாபமே!
மக்கள் சமுதாயம்
ஒரு திறந்த புத்தகம்
ஆனது
ஒரு பெரியார் என்பவரால் தான்.
இதை
சாதி மதங்கள் கொண்டு
மூடப்பார்த்தது
மூடநம்பிக்கைகளின் ஒரு
குருட்டு யுகமே.
திராவிட சிந்தனையும்
தமிழின் எழுச்சியுமே
அந்த பூட்டுகளை உடைக்கவந்த
அறிவின் ஆயுதம்.
பொய்மையும் புரட்டும் நிறைந்த
கடவுள் புராணங்களுக்கு கிரீடம் சூட்டும்
விஞ்ஞானத்தை கொண்டா
இந்த அறிவின் விஞ்ஞானத்துக்கு
நீங்கள் முலாம் பூச வந்தீர்கள்?
==============================================ருத்ரா
//முட்டாள் யார் ? மூடர் யார் ? பெரியாரின் சிறு
மூளைக்கு எட்டியது இந்த வெங்காய விதி !
பெரு மூளையைக் கேட்க நேரமில்லை !//
இச்சொற்கள் தன்னை விஞ்ஞானம் அறிந்தவர் என்பவரிடமிருந்து வருவதுதான் வருந்தத்தக்கது. பெரியாரின் வெங்காய விதியைத்தான் இன்றைய உலகம் நம்பி வாழ்கிறது. எவனாவது எங்கேயாவது கரோனாவிற்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்து விடமாட்டானா என ஏங்கித்தவிக்கிறது. ஜோசியர்கள் கிரகங்களைப் பற்றி பேசுகிறார்கள். அவர்களையா நம்புகிறார்கள்? தடுப்பூசி அது வரும் வரை தடுக்கும் நிலைபாடுகளைத்தான் நம்புகிறார்கள். அனைத்து வழிபாட்டுத்தளங்களையும் அரசு மூடச்சொல்லிவிட்டது. அதாவது பெரியாரின் வெங்காய விதிதான் சிறந்தது என உலக அரசுகள் எடுத்துக்கொண்டன. மனிதன் வாழவேண்டும். கடவுளும் கோயிலும் யாகங்களும் என்றால், மனிதர்கள் கொத்து கொத்தாக மடிவார்கள். எனவே தற்போது ”கடவுளை மற; மனிதனை நினை!” என்பதுவே இப்போது வேண்டும். இந்த வெங்காய விதி வந்தது பெரியாரின் பெரிய மூளையிலிருந்துதானே? அவரை மூடன், முட்டாள் என்பவரா வந்து க்ரோனாவிலிருந்து மனிதனைக் காப்பாற்ற போகிறார்?
// ஷாலி அவர்களே,
“சிந்து” பாகிஸ்தானில் உள்ளது. “திராவிடம்” இந்திய வரைப்படத்தில் இல்லை. தாகூர் பிரிட்டிஷ் இந்தியாவுக்கு எழுதிய தேசீயப் பாடல் திருத்தப்பட வேண்டும்.
அதுபோல் சுந்தரம் பிள்ளை எழுதிய நாட்டுப் பாடலில் “திராவிட நற்றிருநாடு” நீக்கப் பட்டு “செந்தமிழ் நற்றிருநாடு” என்பது சேர்க்கப் பட வேண்டும். //
சி. ஜெயபாரதன்
தஞ்சை பல்கலைகழகத்தின் முதல் துணைவேந்தராக இருந்த டாக்டர். வ. அய். சுப்பிரமணியம் அவர்கள், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சராக இருந்த திரு.முரளி மனோகர் ஜோஷி அவர்களை சந்தித்து “ திராவிடர் என்சைக்ளோபீடியா” என்னும் நூலை அன்பளிப்பாக கொடுத்தார். அதைப்பார்த்த அமைச்சர்., இதிலுள்ள “ திராவிடியன்” என்ற சொல்லை நீக்கி விடலாமே?” என்று சொன்னார்.
அதற்கு டாக்டர்.வ. அய். சுப்பிரமணியம் சொன்ன பதில், “ தேசீய கீதத்தில் உள்ள “திராவிட’ என்ற சொல்லை நீங்கள் நீக்கி விடுங்கள்.நானும் இதை நீக்கி விடுகின்றேன்.”( ஆதாரம்: DLA NEWS.-மார்ச்.2003.)
டாக்டர்.முரளி மனோகர் ஜோஷியும். திரு.ஜெயபாரதன் அவர்களும் “இந்துத்வா” எனும் ஒற்றைப் புள்ளியில் இணைவதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அன்று காங்கிரசில் இருந்த பெருந்தலைவர்கள் அநேகர் உயர் பிராமண சிந்தனையாளர்கள். இந்துத்வா கொள்கையை இயல்பாக கொண்டவர்கள். சாவர்கர்,கோல்வால்கர் போன்றவர்களின் அகண்ட பாரத ஆசை மிகுந்தவர்கள்.காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து கொண்டே தம் உயர்குல மேன்மைக்குப் பாடுபட்டவர்கள்.நமது பாரதப்பிரதமர் நரசிம்மராவ்,குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் ஆரம்பத்தில் ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் இருந்தவர்கள்.
பாபரி மஸ்ஜித் இடித்து முடிக்கும் வரை பிரதமர் நரசிம்மராவ் வெளியே வரவில்லை.எங்கே இருந்தார் என்றே தெரியவில்லை.தரை மட்டம் ஆன பின்பே அவரது கண்டன குரல் கேட்டது.பிரணாப் முகர்ஜியின் சேவைக்கு பாஜக வினால் “பாரத ரத்னா” கொடுக்கப்பட்டது.பாஜக – காங்கிரஸ் கொள்கை ஒன்றே .பெயர் வேறு.
இன்றைய தேசியப்பாடல் என்பது ஒரு கட்டிடத்திற்கான வரை படம் (புளு பிரின்ட்) போன்றது….இந்த வரை பட மாதிரியை வைத்தே அகண்ட பாரதம் கட்டி முடிக்கப்படும்.இந்த அகண்ட பாரதத்திற்காக தம் இன்னுயிரை ஈன்ற தேச பக்தர்களின் ஆசைகள் அன்று தான் நிறைவு பெரும்.
காந்தியை கொன்ற கோட்சேவை தேச பக்தர் என்று பாராட்டிய பாராளுமன்ற உறுப்பினர்களால் நாடு ஆளப்படுகிறது. எனவே திரு.ஜெயபாரதன் சொல்வது போல் “ சிந்து” நீக்கப்பட வேண்டிய ஒன்றல்ல….சேர்க்கப்பட வேண்டிய ஒன்று.கோட்சேயின் இறுதி வேண்டுகோள்!
“ அகண்ட பாரதத்தில் சிந்து நதி பாயும். அதில் தான் தனது பிணம எரித்த சாம்பல் அஸ்தி கரைக்கப்பட வேண்டும்.” இவரது அஸ்தி கலசம் இன்றும் பாதுகாப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது அந்த நாளுக்காக….திரு.ஜெயபாரதன் அவர்கள் இதையும் புரிந்து கொள்ளவேண்டும்.
//சுந்தரனார் பாடல் பிரிட்டிஷ் இந்தியாவுக்கு எழுதப் பட்டது. பாரதியார் பிரிட்டிஷ் ஆண்ட காலத்திலே “தமிழ்த்திரு நாடுதனைப் பெற்ற தாய் என்று வணங்கு” என்று இளைய தலைமுறைக்கு எழுதி வைத்துள்ளார். பாரதியார் திராவிட நாட்டைத் தன் இலக்கியப் படைப்புகளில் காட்ட வில்லை.//
இது என்ன வாதமே எனக்குப் புலனாகவில்லை.
இவருக்குப் பிடித்தவண்ணம் இவர் எழுதுகிறார்; அவருக்குப் பிடித்த வண்ணம் அவர் எழுதுகிறார். விஞ்ஞானி ஜயபாரதன் அவர்களோ, இவருக்குப் பிடித்தபடிதான் அவர் எழுதவேண்டுமென்கிறார்.
பிரிட்டிஷ காலமோ, நம் காலமோ, இந்திய பூகோளத்தை யாராலும் மாற்றவே முடியாது. தக்காணம், தமிழ்னாடு, வடவிந்தியா ஆயிரமாண்டுகளுக்கும் முன்பும் இருந்தன. பின்னும் இருக்கும். ஏன் சுந்தரனார், விடுதலைக்கும் முன் ஒரு மாதிரி; பின் ஒரு மாதிரி எழுதவேண்டுமென்று எனக்குப் புரியவில்லை. அவர் எழுதியது சரி.
//திராவிடர் யாரென்று கேட்டால் என்ன சொல்வீர் ???//
ஏன் உங்க ஊருக்குப் பக்கத்தில் வாழ்ந்து மடிந்தவரிடமே கேட்டுவிட்டால் போச்சு. இடையங்குடி கால்டுவெல் பாதிரியார் எழுதிய திராவிட மொழிகளில் ஒப்பிலக்கணத்தில் முன்னுரையில் உங்களுக்குப் பதில் சொல்கிறார்.
அது போக, திராவிடர் எனப்து ஆந்த்ரோபாலஜிகல் அடையாளச் சொல். மங்கோலியர், ககாசியர், ஹிஸ்பானியர், நீக்ரோ, அந்தமானீஸ், மாக்ரோனீஸ், சென்டிலனீஸ் (நிகோபார் தீவுகள்) – இப்படி இனங்களைக் குறிக்கும் சொல் இது. சில பல உடற்கூறுகளை காலங்காலமாக கொண்டிருக்கும் மக்களை, ஆந்த்ரோபாலாஜிஸ்ட் இப்படிப்பட்ட அடையாளச் சொற்களினால் குறிக்கிறார்கள். அஃதிலொன்று, திராவிட.
பாதிரியார், அதை நிலப்பரப்புக்கு கொண்டு காட்டினார். தமிழ், தெலுங்கு, துளு, மலையாளம், கன்னடம் பேசும் மக்கள் திராவிடர்கள். அவரின் கூற்றின்படி, அம்மொழிகள் ஒரே மரத்தில் இருந்து வந்த கிளைகள். Because he was not an anthropologist. He was a philologist.
//… ஆனால் பார்ப்பன நாய் என்று சொல்லுவது பார்ப்பன குலத்தில் பிறந்தவர்கள் மீது எறியப்படும் பொதுவான பகிரங்கமான வசைச் சொல்….//
கட்டுரையாளர் திரு.சின்னக்கருப்பன் அவர்கள் இந்து மத மேன்மைகளையும், அதன் சிறப்புகளையும் நன்கு அறிந்தவர்.எல்லா உயிர்களிடத்திலும் இறைவனைக் காணும் இந்துமதத்தில் எந்த ஒரு பிராணியும் இழிவல்லவே. மனிதர்களை சூத்திர இழி குலத்தில் வைக்கப்பட்டாலும். எல்லா பறவை,மற்றும் மிருகங்கள் எல்லாம் இறைவனின் நெருக்கத்திலே தெய்வ வாகனமாகவே வலம் வருகின்றன.
பார்ப்பன நாய் என்பதன் உள்ளர்த்தம் விளங்காத சாமான்ய மக்களுக்கு அது வசைக் சொல்லாகத் தெரிந்தாலும்….சின்னக்கருப்பன் போன்ற சித்தாந்திகளுக்கும் அதன் உட் பொருள் புரியவில்லை என்பது வினோதமே! .நான்கு வேதம் படித்து…அதனை உள்வாங்கி வேதியனாக,வேதமாகவே வாழ்பவனே பார்ப்பனர் என்னும் பிரம்மம் அறிந்த பிராமணர்கள்.உயர்ந்த நால் வகை வேதமும் நாயாகவே உருமாற்றிப் போற்றப்படுகிறது.
ஆதி சங்கரரின் கர்வத்தை அடக்க பரமேஸ்வரன் புலையன் உருவில் நான்கு நாய்களுடன் எதிரே வந்து “ஒதுங்கிப் போ!” என்று சொன்ன சங்கரரிடம் கேள்விகளை எழுப்பி..உண்மையை உணர வைத்தவன் ஆதி சிவன்.நான்கு நாய்களும் நான்கு வேதங்கள். ஆகவே வேதம் என்னும் நாய்களை தம்முடன் வைத்திருக்கும் வேதியர்களை எந்த சொல்லும் வசை பாட முடியாது. “வேதம் அறிந்த பார்ப்பனர்கள்” என்று பொருள் எடுக்கும் போது வசைக் சொல் இசைக் சொல்லாக மாறி விடுகிறது.
இது போன்றே சோமாஸி நாயனார் கதையிலும் ஆதி சிவன் புலையன் மற்றும் நான்கு நாய்களுடன் காட்சி தந்தது.கால பைரவ சிவனின் வாகனமே நாய்தான் என்று கூறப்படுகிறது.
ரிக் வேதம் இற்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன் உலகில் எழுந்த முதல் வேத நூல். அதில் ‘சரமா’ என்ற நாய் இந்திரன் வளர்த்த நாய். அதற்கு சரமேயஸ் என்ற பெயரில் இரண்டு குட்டிகளும் உண்டு. அவை ஒவ்வொன்றுக்கும் 4 கண்கள். அதாவது அவற்றின் சக்தியைக் குறிப்பிட இப்படி சங்கேத மொழியில் வேத காலப் புலவர்கள் மொழிவர். பாணிக்கள் இந்திரனின் பசுக்களைத் திருடிய போது சரமாதான் அவைகளைக் கண்டுபிடித்தது. அதன் குட்டிகளான சரமேயஸ் யம தர்ம ராஜனின் காவலர்கள். அதாவது சாவு வருவதை முன் கூட்டி அறிவிக்கும் சக்தி படைத்தவை!
சீ…என நாயை விரட்டுவதை நாய் விரட்டு மந்திரம், “நாயோட்டும் மந்திரம் நாதனிருப்பிடம்” என்கிறார் திரு மூலர்.(2672)
பாண்டவர்கள் தங்கள் இறுதிக் காலத்தை புனித திசையான வடக்கில் இருக்கும் மேரு மலையை நோக்கி நடந்தே கழிக்க எண்ணுகின்றனர். தர்மபுத்திரனை ஒரு நாய் பின்தொடர்ந்து செல்கிறது. இப்படிப் போகும் வடதிசைப் பயணத்தை மகா பிரஸ்தானம் என்பர். பாண்டவர்கள் ஒவ்வொருவராக சுருண்டு விழுந்து இறந்தனர். கடைசியாக மிஞ்சியது தர்மனும் நாயும்தான். சொர்க்கத்துக்குப் போனபோது நாயை உள்ளேவிட முடியாது என்று சொல்லிவிட்டனர். நாய்க்கு அனுமதி இல்லாவிடில் எனக்கு சொர்க்கமே வேண்டாம் என்று சொன்னார் தர்மர். உடனே அந்த நாய் தான் தர்ம தேவதை என்று சுய ரூபத்தைக் காட்டி இறுதிக் காலத்திலும் தர்மன் கடைப்பிடித்த தர்மத்தைப் பாராட்டியது.
ஆகவே அனைத்து வேதங்களிலும்,இராமாயண,மற்றும் மகாபாரதத்தில் உயர்ந்த வேதங்களாக,தர்ம தேவதையின் குறியீடுகளாக காட்டப்படுகின்றன. நாய்கள். “பார்ப்பன நாய்” என்பதற்கு பதைபதைக்கும் சின்ன கருப்பனார் …..சூத்திரன், என்றும் பஞ்சமன்,சண்டாளன் என்றும் விளிக்கப்படும் விளிம்பு நிலை மனிதர்களின் குலத்தைப்பற்றி என்றேனும் கனவிலாவது கவலைப்பட்டிருக்கிறாரா?
// தமிழகப் பாரதியாருக்குத் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்றால் என்னவென்று நன்கு தெரியும். ஆனால் ஆங்கிலக் கால்டுவெல் வகுத்த திராவிடம் தெரியாது…..திரு.ஜெயபாரதன்.//
.
ஆனாலும்…. பாரதி பேசிய திராவிடர் யார் என்பதையும் நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
“ தமிழ்நாட்டின் மாதராகிய அன்புக்குரிய சகோதரிகளே! இத்தனை பழமையும், மேன்மையும் சான்றாக, இரண்டு பகுதிகளின் கலப்பாகுந் தன்மையால் பாரத தேசத்திலேயே மற்ற பிரதேசங்களிலுள்ள நாகரீகத்தை காட்டிலும் கூட ஒருவாறு சிறப்புடையதாகக் கருதுவதற்குரிய, ஆரிய, திராவிட, நாகரீகம் உங்களுடைய பாதுகாப்பிலிருக்கிறது இதனை மென்மேலும் போசித்து வளர்க்கும் கடமை உங்களைச் சார்ந்தது.” – பாரதியார் கட்டுரைகள். பக்கம்.265.
பாரதிக்கு கால்டுவெல் வகுத்த திராவிடம் தெரியாது….தமிழ் திராவிடம் தெரியாது,.அவர் அறிந்ததெல்லாம் ஆரியத் திராவிடர்கள் மட்டுமே. அபிதான சிந்தாமணி கூறும் “பஞ்ச திராவிடர்கள்” எனும் பிராமணர்களை….இராஜ தரங்கிணி பேசும்…
கர்நாடக ஆஸ்ச்ச தைலங்கா திராவிட மகாராஷ்டிரஹா
குஜ்ராஷ் சேத்தி பஞ்சைவ திராவிட வித்திலேதஷ ஜீனே!….
தென்னக திராவிட பிராமணர்களை தெளிவாக அறிவார்.மேலும் வேதாந்த சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதிய திராவிடாச்சாரி பிராமணரையும் அறிவார்.திராவிட வேதம் என்று புகழப்படும் திவ்ய பிரபந்தத்தையும் அறிவார்.
தவ ஸ்தன்யம் மன்யே தரணிதரகன்யே ஹ்ருதய
பவ பாராவார பரிவஹதி ஸாரஸ்வத மிவ
தயாவத்யா தத்தம் த்ரவிட சிசு – ராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரெளடான –மஜநீ கமணீய கவயிதா.
அம்பாளின் ஸ்தனங்களிலிருந்து ஞானப்பால் உண்டதால்….சரஸ்வதியின் சாரம் தமக்குள்ளே கவிதையாக ஊறியதாகக் கூறிய “திராவிட சிசு” திருஞானசம்பந்தரையும் அறிவார்.ஆனால் கால்டுவெல் கூறிய திராவிடர் மட்டும் அவருக்கு தெரியாததில் வியப்பில்லை.
ஆதி சிவன் பெற்று விட்டான்….என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்.”
ஆன்ற மொழிகளினுள்ளே – உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்!…
அன்னை பயங்கரி பாரததேவி நல் ஆரியராணியின் வில்…”
வாழிய நல் ஆரிய தேவியின் மந்திரம் வந்தே மாதரமே!….
.இப்படி ஆரியப்புகழ் பாடும் பாரதியிடம் திராவிடத்தை தேடலாமோ.
பாரதியாருக்கு தமிழ் என்னவென்று நன்றாகத் தெரியுமாம்.திரு.ஜெயபாரதன் சொல்கிறார். உண்மைதான். ஆயிரம் பொற்காசு அன்பளிப்புக்காக மண்டபத்தில் எழுதிக்கொடுத்தவரிடம் கவிதை பாடிய தருமியைப் போலவே……பாரதியும் தமிழ் பாடினார். தமிழ்.தமிழ்நாடு குறித்து சிறப்பாக எழுதப்படும் கவிதைக்கு பரிசு ரூபாய் நூறு கொடுக்கப்படும் என்று மதுரை தமிழ்சங்கம் அறிவித்தது. சுதேசமித்திரன் நாளிதழில் வெளியான இவ்விளம்பரத்தைப் பார்த்த பாரதியின் புதுவை நண்பர் சுப்பிரமணி அய்யர் தூண்டுதலின் பேரில் எழுதிய கவிதையே ….” யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்….”
பாரதியார் எழுதிய கவிதைகளில் 700 பக்கங்கள் கொண்ட கவிதை நூலில், தமிழ்,தமிழ்நாடு பற்றி 11 பக்கங்கள் மட்டுமே உள்ளது.( நியூ-செஞ்சுரி புத்தக நிறுவனம்)ஏன் திராவிடத்தின் மீது பாரதிக்கு வெறுப்பு?இதோ காரனத்தை கால்டுவெல்லே கூறுகிறார்.
“ திராவிட மொழிகள் வட இந்திய மொழிகளிலிருந்து பற்பல இயல்புகளில் வேறுபடுகின்றன.அவ்வாறிருந்தும் அத்திராவிட மொழிகள் ,வட இந்திய மொழிகளைப் போலவே, சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தவையாகச் சம்ஸ்கிருத பண்டிதர்களால் (பாரதியார்) கருதப்பட்டன. தாங்கள் அறிந்த எப்பொருளுக்கும் பார்ப்பன மூலம் கற்பிக்கும் இயல்பினர் அப்பண்டிதர்கள்.”
– கால்டுவெல் ,திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம். பக்.60. தமிழாக்கம்.புலவர்.கா.கோவிந்தன்.வள்ளுவர் பண்ணை.சென்னை-1959.
பாரதியாருக்கு திராவிடம் “விடமாக” இருந்த காரணம் இதுதான். விடத்தை எவரும் விரும்புவாரோ?
//தமிழகப் பாரதியாருக்குத் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்றால் என்னவென்று நன்கு தெரியும். ஆனால் ஆங்கிலக் கால்டுவெல் வகுத்த திராவிடம் தெரியாது.// கால்டுவெல் எழுதிய நூல் ஆங்கில நூல். அக்காலத்தில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் மிகக்குறைவு. அது ஒரு புதினம் அல்ல. படிக்க. ஒரு highly technical book. பாரதியார் வாழ்ந்த காலத்தில் இப்படியொரு நூல் இருக்கிறது என்று தெரியாமல்தான் இருந்தார்கள். பின்னர் அண்ணாவின் காலத்தில் திராவிடர் என்ற சொல் புழங்க ஆரம்பித்து சிலர் கால்டுவெல்லின் தியரியைக் காட்ட ஆரம்பித்த போது பிரபலம் ஆனது. ஆனாலும் எல்லாருக்கும் கேள்வி ஞானம்தான். இன்று கூட அனூலைப் பற்றிப் பேசுபவர்களிடம் நீங்கள் படித்தீர்களா? அல்லது பார்த்திருக்கிறீர்களா? என்றால் ‘ஙே’ என்று விழிப்பார்கள். வெறும் அரசியல். அரசியலானதால் அன்னூல் பலகலைப்படிப்பில் வைக்க தய்ங்குகிறார்கள். Philology is not subject in any Unviersity here. தமிழில் மொழி பெயர்க்கப்படவில்லை. மொழி பெயர்க்க 5 மொழிகள் தெரிய வேண்டுமென்பதால். பாரதியார் ஒரு கல்வியாளர் இல்லை. He had no interest or concern for Philology. அவர் ஒரு சாதாரணர். அவருக்கு கால்டுவெல் தெரியும். உங்களுக்கு எப்படி தெரியுமே அப்படி. அவ்வளவுதான். பாரதியாருக்கு மொழி அறிஞர்களைக் கண்டால் ஒரு மிரட்சி இருந்தது. தன்னை ஒரு சாதாரணன் என்று எப்போதுமே நினைத்துக்கொண்டதால் அம்மிரட்சி. எப்படி கால்டுவெல்லைப் பற்றியெல்லாம் நினைத்திருப்பார்?
//வங்காலத் தாகூருக்கு ஆங்கிலக் கால்டுவெல் வகுத்த திராவிடம் மட்டும் தெரியும். ஆனால் பூர்வீகத் தமிழகத்தின் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்றால் என்ன வென்று தெரியாது.//
சரியில்லை. தாகூர் கால்டுவெல்லிடம் இருந்thu திராவிடம் என்ற சொல்லப்பெறவில்லை. நான் ஏற்கனவே சொன்னது போல கால்டுவெல்லின் நூல் மொழியியல் நூல். தாகூருக்கும் மொழியியலுக்கும் தொடர்பேயில்லை. வங்காலத்தில்,இந்தியாவில் கால்டுவெல் நூல academicians க்கும் தெரிந்திருக்கலாம். மற்றவர்களுக்குத் தெரியாது. தாகூர், எனவே, திராவிடம் என்ற சொல்லை கேள்வி ஞானத்தில் எடுத்து, நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, தென்னிந்திய நிலப்பரப்புக்கு (அவர் பாடலில்படி, அங்கு வாழும் மக்களைக் குறிக்க) பயன்படுத்தினார். பிரிட்டிஷ் இந்தியா என்ற சொல்லும் தவறு. உணமையென்றால் அவரேன் பர்மா, சிலோனைக் குறிப்பிடவில்லை? அவையும் பிரிட்டிஷ் இந்தியாதானே?சிந்துவைக்குறிப்பிட்டது அது இந்தியாதான். இன்று கூட அரசியல் பிரிவினால் மட்டுமே பாகிஸ்தான். எனவே சிந்துவைக்குறிப்பிட்டு பேசினார். சிந்துவில் தோன்றிய இந்துமதம்தானே (சனாதன தர்மம) இந்தியாவையே ஆக்கிரமித்து இருக்கிறது? அந்த கலாச்சாரம்தானே இந்திய கலாச்சாரமென்கிறார்கள்? இந்து ராஷ்ட்ரத்தை மீட்டெடுப்போம் என்றால் அதுதானே? அதாவது விதைகள்.
சிந்து இல்லாமல் இந்தியா இல்லை. எனவே தாகூர் சொல்லியது சரி.