யுவராஜ் சம்பத்
இன்று காலை வாட்ஸப்பில் அந்த புகைப்படத்தை நண்பர் அனுப்பி இருந்தார்.
அதில் ,திருச்சியில், திருவானைக்காவல் போகிற காவிரி ஆற்றின் மேம்பாலத்தின் மீது ,இருபுறமும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மக்கள் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தார்கள்.
யாரையோ எதிர்பார்த்து.
அவர்கள் யார் எந்த ஊரைச் சார்ந்தவர்கள்,
எந்த ஜாதி, மதம் எதுவும் தெரியாது எனக்கு..
ஆனால் ,அவர்கள் எதற்கு அமர்ந்திருந்தார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரியும். எதற்கு??
ஒருவேளை உணவுக்கு. அதுகூட நிச்சயமில்லாத ஒரு நேரத்தில்.
அவர்களுக்கு அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் சென்று சேராது.
இலவச அரிசி பருப்பு வகைகளை வாங்குவதற்கு அவர்களிடம் குடும்ப அட்டை கிடையாது. அவர்கள் பிச்சைக்காரர்களா? இல்லை .
ஏழைகளா? அதுவும் இல்லை .
ஆனால் அவர்களுக்குள்ள ஒரு அடையாளம் இருக்கிறது.
அது மீள் அகதிகள்.
இவர்கள் இங்கு பல்வேறு சிறு சிறு வேலைகளை செய்து குடும்பம் நடத்துகிற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்.
.இவர்கள் புலம் பெயர்ந்த சிறு வியாபாரிகள். அன்றாடம் சம்பாதிக்கிற பணத்தில் அன்றாடம் குடும்பம் நடத்திக்கொண்டு மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்கள்.
இந்த கோறோனா அவர்களை இன்று தெருவில் நிறுத்தி இருக்கிறது
இப்படிப்பட்டவர்களுக்கு கோறோனா தொற்று இருந்தால் அது அவர்களை எங்கு கொண்டு போய் நிறுத்தும்?
அவர்களால் மருத்துவ வசதிக்கு பணம் ஏற்பாடு செய்ய முடியுமா? அல்லது அவர்களுக்கு உதவ யாராவது இருக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் பதில் வரும்.
அப்படியானால் அவர்கள் சாக வேண்டியதுதானா?
ஆதுவும் அனாதயாய்? சாக மாட்டார்கள் என்று நம்புவோம்.
இது அவர்களுக்கு மட்டுமல்ல.
உலகம் முழுவதும் 65 வயதிற்கு மேற்பட்ட எல்லோருக்கும் இதுதான் நிலைதான் இன்று.
ஆனால் நமக்கு மகிழ்ச்சியான செய்தி இந்தியாவில் இந்த நிலை இன்னும் வரவில்லை என்பதுதான்.
சற்றேறக்குறைய 12 கோடி மக்கள் முதியோர்களாய் இருப்பினும்..
ஒரு கோடி மக்கள் மட்டுமே ஓய்வு ஊதியம் பெறுகிற நிலையில் இருக்கிறார்கள்.
நம்மிடம் இலவச மருத்துவ வசதிகள் அல்லது குறைந்த செலவில் மருத்துவம் பார்க்கிற வசதிகள் இன்னும் உள்ளன
இந்த நிலை மாறாத வரை, யாரோ புண்ணியத்தில், மீள் அகதிகள் வாழத்தான் போகிறார்கள்.
அதே நேரத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்களை பார்க்கிற பொழுது, உலகம் முழுவதிலும் ,குறிப்பாக அமெரிக்கா, ஸ்பெயின் ,பிரிட்டன் போன்ற நாடுகளில் அதிகமாக மரணிக்கிறார்கள் முதியோர்களாகவோ அல்லது வறியவர்களாக இருக்கிறார்கள்
உலகத்தின் மிகப் பணக்கார நாடான , அறிவு ஜீவிகள் நிறைந்த நாடு என்று பறைசாற்றிக் கொள்ளுகிற அமெரிக்காவில் சென்ற வாரம் டோனி அக்கினி என்கிற ஒரு பெண் தன்னுடைய ட்விட்டரில் செய்தியை பதிவிட்டிருந்தார்.
அவர் அமெரிக்க அரசாங்க ஊழியர்
பொது நலத் துறையில் வேலை செய்கிறார்
அவருக்கு கோரோனா தொற்று ஏற்பட்டது. முதல்நாள் நோய் அறிகுறியை வைத்து அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்று மருத்துவரை ஆலோசிக்க அதற்கு 1804.00 டாலர் செலவு செய்கிறார் அதைத்தொடர்ந்து பல்வேறு பரிசோதனைகளும் முதலுதவியும் செய்யப்படுகிறது அதற்கு 1841.00 டாலர் செலவு செய்கிறார் அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்ற பொழுது செலவு 29,282.00 டாலர் ஆக மொத்தம் 34 ஆயிரத்து 927 டாலர் செலவு செய்கிறார்.
இந்திய ரூபாயில் (தேவையில்லை என்றாலும் கூட) மதிப்பு 26 லட்சம்
அதற்கு அவரே பதில் சொன்னார். என்னால் முடியும். முடிந்தது .ஆனால் அமெரிக்காவில் இருக்கிற முதியவர்களுக்கும் வறியவர்களுக்கும் இது கட்டாயம் முடியாது என்று சொன்னார் அமெரிக்காவில் 50 லட்சம் பேர் வறியவர்கள். இது முதியவர்களின் மொத்தத் தொகையில் 9.1%.
இந்த முதியவர்கள் 5 கோடி பேரின் சராசரி மாத வருமானம் ஆணாக இருந்தால் 3 ஆயிரம் டாலர், பெண்ணாக இருந்தால் 2000 டாலர். இது அரசு தருகிற முதியோர் ஓய்வு ஊதியம் .இவர்களுக்கு முழுமையான காப்பீடு பாதுகாப்பு இருக்கிறது என்றாலும் கூட அங்கே மாகாணத்திற்கு மாகாணம் ஊருக்கு ஊர் காப்பீடு நிறுவனங்கள் மருத்துவ செலவுக்கு தருகிற பங்களிப்பு வேறுபடும்.
எப்படி இருந்தாலும் மருத்துவச் செலவில் 50 சதவீதம் தனிமனிதன் செலவு செய்யவேண்டும்.
வயது முதிர்ந்தவர்கள் வறியவர்களும் செலவு செய்ய முடியாத காரணத்தினால், உயிர் இழப்பு ஏற்படுவதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.
கோறோனா விடுமுறையின் காரணமாக அமெரிக்க அரசு தற்போது பணியில் இருப்பவர்களுக்கு மாதம் ஆயிரம் டாலர் இலவசமாக தந்தாலும், இந்த பணி இழப்பின் காரணமாக அவர்களுக்கு காப்பீடு கிடைக்காது. அவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் அவர்களும் மருத்துவமனையை நாடுவதற்கு தயங்குவார்கள்.
அமெரிக்காவில் மிக அதிக அளவில் வருமானம் ஈட்டுபவர்கள் ஆசியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். வருடம் 80 ஆயிரம் டாலர் தோராயமாக சம்பாதிக்கிறார்கள். அதற்கடுத்து வெள்ளையர்கள் 70 ஆயிரம் டாலர் சம்பாதிக்கிறார்கள் .ஆனால் கறுப்பு இனத்தவர்கள் வெறும் 40 ஆயிரம் டாலர் மட்டுமே சம்பாதிக்கிறார்கள். இவர்கள
எவ்வாறு நவீன மருத்துவத்தை பெற இயலும்?
அதைவிட கிரேட் பிரிட்டன் என்று சொல்லுகிற இங்கிலாந்தில் வயதானவர்கள் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது. ஸ்பெயினிலும் இதே நிலை. இத்தாலியில் மட்டும் சற்று மாறுபாடு காணப்படுகிறது. அங்கு வயதானவர்கள் பணக்காரனாக இருக்கிறார்கள்
இது இன்றைய நிலை.
முகவரி இல்லா இந்த கொடூர நோய் யாரை எவ்வாறு தாக்கும் என்பது யாராலும் கணிக்க முடியாததாக இருக்கிறது
ஆனால் காவு வாங்குவது மட்டும் முதியோர்களையும்,ஏழைகளையும்,,வறியவர்களையும் மட்டுமே என்றால்,
இதை எதிர்த்து போராடுகிற வல்லமை அவர்களுக்கு கிடைக்காதா? அதை
நாமம் கைகட்டி, வாய் பொத்தி, வாய்மூடி மௌனி களாகவே வேடிக்கை பார்த்து மடிய போகிறோமா?
தேவ தூதனே எங்க இருக்கிறாய்?
எங்களை காப்பாற்ற வருவாயா?
காத்திருக்கிறோம்..
29.04.2020
email. sam@p2clothing.in
- ஆட்கொல்லி வேட்டை ஆடுது
- டகால்டி – சில கேள்விகள்
- தேவையற்றவர்கள்
- அஸ்தி
- நூல் அறிமுகம் : பா. சேதுமாதவன் எழுதிய ‘ சொற்குவியம் ‘
- வீட்டில் இருப்போம்
- எனக்குக் கேட்கல… உங்களுக்கு கேக்குதா
- கொரோனா சொல்லித் தந்த தமிழ்
- இனியாவது சிந்திப்போமா?
- என்னுடைய நூல்கள் அமேஸான் கிண்டில் பதிப்பாக
- குறளில் கல்வியியல் சிந்தனைகள் – ஒரு பார்வை
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- புலியோடு வசிப்ப தெப்படி ?