வைரஸ் வராமலிருக்கும் அணியும் மருத்துவ உடைக்குள் வரக்கூடிய வெப்ப அபாயம்.

author
0 minutes, 4 seconds Read
This entry is part 15 of 20 in the series 19 ஜூலை 2020

கொரோனா வைரஸ் காரணமாக முழுவதும் மூடப்பட்ட உடைக்கு உள்ளே உட்கார்ந்துகொண்டு நோயாளிகளுக்கு சேவை செய்யும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அந்த உடை எவ்வளவு சூடாக ஆகும் என்று நன்கு தெரியும்.

அதுவும் வெப்பமாக பிரதேசங்களான சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, இலங்கை போன்ற இடங்களில் இருக்கும் மருத்துவ பணியாளர்கள் வெப்ப தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.

இவர்கள் மட்டுமல்ல. பலரும் விவசாய பண்ணைகள் மற்றும் கட்டிடத் தொழில் போன்றவற்றில் திறந்த வெளியில் கோடை வெயிலில் இருந்தே வேலை செய்யும்படிக்கு ஆளாகின்றனர்.

தற்போது முழுவதுமாக மூடப்பட்டதால் பல செவிலியர்களுக்கும், மருத்துவர்களுக்கும் உடல் வெகுவிரைவில் வெப்பமடைந்துவிடுகிறது. இது மிகவும் ஆபத்தான ஒன்று. heat stress என்னும் வெப்ப தாக்குதலுக்கு உடல் பலியானால், பல உடலுறுப்புகள் செயலிழந்துவிடும்.

பல மருத்துவர்கள், செவிலியர்களே இப்படி உடல் வெப்பமடைவதை கண்டுகொள்வதில்லை. தலைசுற்றுதல், வாந்தி வரும் உணர்வு ஆகியவை இதன் முதல் அறிகுறிகள். உடல் தாங்கும் சக்தியை தாண்டி வேலை செய்யும்போது இந்த வெப்பத்தினால் பலர் உயிரிழந்துள்ளனர்.

வெப்ப தாக்குதல் heat stress என்பது என்ன?

நமது உடல் சரியாக குளிர வாய்ப்பில்லாதபோது, உடலின் வெப்பம் அதிகரித்துகொண்டே செல்லும். இது ஒரு அளவுக்கு மேல் அதிகரித்துவிட்டால், உடலின் உறுப்புகள் செயலிழந்துவிடும்.

நமது உடலின் வெப்பத்தை குறைப்பதற்காக நமது உடல் வேர்வையை உற்பத்தி செய்கிறது. அந்த வேர்வை ஆவியாகும்போது அது உடலை குளிர வைக்கிறது. ஆனால், வெளி காற்றில் அளவுக்கு அதிகமாக வெக்கையும், ஈரப்பதமும் இருந்தால், அந்த வேர்வை ஆவி ஆக முடியாது. அப்போது உடல் சூடு ஆக ஆரம்பிக்கிறது.

வைரஸ் உள்ளே வரக்கூடாது என்று போடப்பட்ட இறுக்கமான வெளி ஆடைகள் (ppe personal protection equipment) உடலில் உருவாகும் வேர்வை ஆவியாவதை தடுக்கிறது. இதனால் பல மருத்துவர்கள் செவிலியர்கள் மயக்கமடைந்து சரிந்திருக்கிறார்கள் என்று கண்டிருக்கிறார்கள். இது அங்கங்கு சுளுக்குகளையும் பிறகு வயிற்று குடல் மற்றும் சிறுநீரகம் செயலிழப்புக்கும் இட்டுச் செல்கிறது.

இதை எப்படி கண்டறிவது?
Wet Bulb Globe Temperature (WBGT) என்னும் முறையை பல ராணுவங்கள் உபயோகப்படுத்துகின்றன. இது காற்றில் உள்ள ஈரப்பதம், வெப்பம் ஆகிய பல காரணிகளை உள்ளடக்கி ஒரு எண்ணை தருகிறது.

உடற்பயிற்சி செய்யும்போது இந்த எண் 29C ஐ தொட்டால், உடனே உடற்பயிற்சி செய்வதை நிறுத்த வேண்டும். (உடற்பயிற்சி செய்யும்போது உடல் சூடடையும்)

தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் நிறைய தண்ணீர் குடித்தால் பாத்ரூமுக்கு போகவேண்டுமே என்று பலர் தண்ணீர் குடிப்பதில்லை.

இனி வரும் கோடைக்காலங்கள் மனிதர்கள் வாழ தகுதியற்றதாக, மிகவும் சூடானதாக ஆகலாம்.

உலகம் தொடர்ந்து வெப்பமடைந்துகொண்டே செல்கிறது. இன்று கொரானாவால் மருத்துவ பணியாளர்கள் அடையும் மருத்துவ சிக்கல்களை நாளை எல்லோருக்கும் நேரலாம்.

உலகத்தில் வெப்பம் மிகவும் அதிகமானால், காற்றில் ஈரப்பதம் அதிகமானால், நாம் சிறு நேரம் கூட வெளியே வரமுடியாத சூழ்நிலை உருவாகலாம். நமது வீட்டை குளிர்விக்க உபயோகப்படுத்தும் ஏசிக்கள் இன்னும் அதிகமாக பொதுவெளியின் வெப்பத்தை அதிகரிக்கும். அதனால், வெளியே செல்வதே ஆபத்தானதாக மாறலாம்.

Series Navigationஏழை ராணிஇந்த வாரம் இப்படி (கனக்டிகட் தமிழ் சங்கத்தில் திண்ணை ஆசிரியர் நிகழ்த்திய புதுமை பித்தன் பற்றிய உரை, கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவு, ராஜஸ்தான் நிகழ்வுகள்)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *