வாலஸ் ஸ்டீவென்ஸ்.
தமிழில். எஸ். ஆல்பர்ட்.
- இருபது பனிமலைகளில்
அசையும் ஒன்று
கரும்பறவையின் கண்ணே. - மூன்று மனமெனக்கு
மூன்று கரும்பறவைகள்
ஒரு மரத்திலிருந்தது போல் - இலையுதிர் காலத்தில்
கரும்பறவை சுழன்றது
ஊமைநாடகத்தில்
ஒரு சிறுபகுதி. - ஒருமனிதனும் ஒருபெண்ணும்
ஒன்று
ஒருமனிதனும் ஒருபெண்ணும் ஒருகரும் பறவையும்
ஒன்று. - நெளிவுகளின் அழகா,
மறைமுகக் குறிப்புகளின் அழகா-
கரும்பறவை கீச்சிடும் போதே
உடன் பிறகா- - நீண்ட ஜன்னலை
பண்படாத கண்ணாடியால்
நிறைத்தன பனித்துகள்கள்
முன்னும் பின்னும்
அதன் குறுக்கே சென்றது.
கரும்பறவையின் நிழல்
கண்டு விவரிக்காத காரணமொன்றினை
நிழலில் வரைந்தது
மனநிலை. - ஓ, ஹாடம்-மின் மெலிந்த மனிதர்களே,
நீங்கள் பொன் பறவைகளைக் கற்பனை செய்வதேன்?
உங்களுக்கிருக்கும் பெண்களின்
கால்கசை; சுற்றிநடக்கும்
கரும்பறவை உங்கள் கண்ணில் படவில்லையா? - பண்பட்ட மொழிகளும்
தெளிவான கவனந்தருச் சந்தங்களும் எனக்குத் தெரியும், ஆனால்
என்னறிவில் கரும்பறவை
அடங்கியிருப்பதும் அறிவேன். - பார்வைக்கப்பால் கரும்பறவை பறந்தபோது
பல வட்டங்களில் ஒன்றின்
வினிம்பைக் குறித்தது. - ஒரு பசுமையொளியில்
கரும்பறவைகள் பறப்பதைக் காண
இசைவழகின் தூதரெல்லாம்
வீச்சிட்டுக் கத்துவர். - அவன் கனெக்டிக்கட்டைக் கடந்து
ஒரு கண்ணாடிக் கோச்சில் போனான்.
ஒரு பயிர் அவனை ஊடுருவியபோது
ஒருமுறை தன் பரிவாரங்களின் நிழலையே
கரும்பறவைகளெனத் தவறிக்கண்டான். - ஆறு அசைந்து கொண்டிருக்க
கரும்பறவை பறந்து கொண்டிருக்கவேண்டும். - பிற்பகலெல்லாம் மாலையாயிருந்தது.
பனிபெய்து கொண்டிருந்தது. இன்னும்
பனிபெய்யப் போகிறது.
சீடர் மரக்கிளையில்
கரும்பறவை அமர்ந்தது.
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 228 ஆம் இதழ்
- வேண்டாம் என்றொரு சொல் பிறக்கும்
- ஒரு சொல்
- மூட்டம்
- பரகாலநாயகியின் பரிதவிப்பு
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- கட்டைப் புகையிலை சிறுகதை – முதல் பாகம்
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 6
- எனது யூடூப் சேனல்
- ஒரு கரும்பறவையைக் காணும் பதிமூன்று வகைகள்
- வெகுண்ட உள்ளங்கள் – 12
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- குளியல்
- சொல்லத்தோன்றும் சில…..