பீதி

This entry is part 3 of 14 in the series 24 ஜனவரி 2021

அலங்கரிக்கப்பட்ட

மலர்ப் பாடையிலிருந்து

அறுந்து வீழ்ந்து

மிதிபட்டு

நசுங்கி-

வறிய

தெருநாய்

சாவினை முகர்ந்ததெனும்

நறுமாலைகள்

சிதறிக் கிடக்க-

நகர்ச்

சாலையில்

சுடலை நோக்கி

சாவதானமாய் நகரும்

சவ ஊர்வலத்தின் பின்

வழி

விட-

விடாது

ஒலி

ஒலித்து

இங்கிதமற்ற

பேருந்து

அவசரப்படுத்தும்

பதற்றத்தில்

பிணம் பயந்ததெனும் பயம்

பிணத்தினின்

பயமாயிருக்கும்-

விழி

இடுங்கிப்

பிணத்தை

வெறித்தபடி

ஊரும்

பேருந்துக்குள்

உறைந்து கடக்கும்

எனக்கு.

கு.அழகர்சாமி

Series Navigationடெனிஸ் ஜான்சன் கவிதைகள்படித்தோம் சொல்கின்றோம்: தனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்
author

கு.அழகர்சாமி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *