சி. ஜெயபாரதன், கனடா
தெய்வீகத் திருக்குரல்
பைபிள் மீது
கைவைத்துப் படையினர்,
துப்பாக்கி தூக்குவர்
தோள்மேல் !
அணிவகுக்கும்
அறப்படை முன்னால்,
பறக்குது கொடி
பாதி உயரத்தில் பாரீர் !
வியட்நாம் மீது
வீணாய்
அமெரிக்கா
போர் தொடுத்த
அன்று முதல் !
அதன் பிறகு கொடி
ஏற வில்லை !
இறங்க வில்லை !
உறங்குது
நிரந்தரமாய் !
அடுத்த போர்க்களம்
ஈராக்கு, சிரியா, நடுமை
ஆசியா !
குடியரசு எல்லாம் கூனிக்
கூர்மை மழுங்கி
தடி அரசாய்
இடி நகை புரியும்
கலியுகம் !
முடி அரசாய் மீளும்,
முன்னிருந்த
தடத்தில் கால் வைத்து
தொடர்ந்து விட்டது,
மூன்றாம்
புவனப் போர்
மடிவெடி
ஆயுதப் போராய்.
=============
- இதுவும் ஒரு காரணமோ?
- இங்கு
- (அல்லக்)கைபேசி !
- வெற்றுக் காகிதம் !
- ஒரு கதை ஒரு கருத்து மா. அரங்கநாதனின் பூசலார்
- தக்கயாகப் பரணி [ தொடர்ச்சி]
- ரவிசுப்பிரமணியன் “நினைவுக்கடலில் சேகரித்த கவி முத்துகள்” – நூல்மதிப்பீடு
- திரைகடலோடியும்…
- பாதி உயரத்தில் பறக்குது கொடி !
- வடக்கிருந்த காதல் – முதல் பாகம்
- மாசில்லாத மெய்
- நாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது
- கண்ணிய ஏடுகள்