மாசில்லாத மெய்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 11 of 13 in the series 21 பெப்ருவரி 2021
லதா ராமச்சந்திரன் 
 
எனது உயிரின் வலி
யாருக்குப் புரியும்
என்றிருந்த எனக்கு
எங்கிருந்தோ ஞானோதயம்
வலியின் ஊடே வாழும் இன்பம் 
புலம்பல் விடுத்து புன்னகை தவழ 
புதுப்புதுத் தேடல் வழியே
வாழ்வின் அர்த்தம் கண்டபின்
நரகம் சுவர்க்கமாய் மாறிய தருணம்
வாழ்க்கை எங்கே? இக்கணத்தில்
இன்பம் எங்கே? துன்பத்தில்
யாரை மட்டும் சார்ந்ததுன் வாழ்க்கை? உன்னை
யாரின் அன்பு உனை நிரப்பும்? 
யாரின் அன்பு என்றுமே பொய்க்காது? உன் மீதிருக்கும் உனதன்பு  
உன் மதிப்பு யாருக்குத் தெரிந்தால் போதும்? உனக்கு
உன் வாழ்வு உனைச் சுற்றி

உன் வாழ்வுக்கான பயன் எது?

உன்னால் அடுத்தவர் வாழ்வில் நல்மாற்றம் 
Series Navigationவடக்கிருந்த காதல் – முதல் பாகம்நாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *