ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
அந்தப் பாட்டியின்
மனக்காயங்கள்
இப்போது ரணமாகிவிட்டன
புலம்பல்களில்
தத்தளித்துக் கொண்டிருக்க
ஆறுதல்
திசை தேடி அலைகிறது
” ரெண்டு காலும் போச்சு …
ரெண்டு கையும் போச்சு …
ரெண்டு கண்ணும் போச்சு … ”
என்ற ஆதங்கம்
பேரன் ரவி திலகனுக்கு
பெரிய காமெடி ஆகிவிட்டது
பாட்டியைப் போல்
பேசி நடித்துக் காட்டுகிறான்
பழங்காலத் தேய்ந்த
இசைத் தட்டாக
சோபை இழந்தது அவள் நிலை
—- எல்லா கோலங்களையும்
அழித்து அழித்து
வேடிக்கை பார்க்கிறது காலம் !
++++++++++
- கண்காட்சிப்புத்தகங்கள்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 241 ஆம் இதழ்
- அறங்தாங்கி
- மாயவரம் பாட்டி
- கவிதையும் ரசனையும் – 12 – க.வை.பழனிசாமியின் ‘காற்றில் கரையும் கணினி’
- சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இலங்கை எழுத்தாளரின் நூல்கள்
- நீறு பூத்த நெருப்பு
- வடக்கிருந்த காதல் – இரண்டாம் பாகம்
- அஞ்சலிக்குறிப்பு: விடைபெற்ற தோழர் தா. பாண்டியன் ( 1932 – 2021 )
- கதை சொல்லல் -சுருக்கமான வரலாறு
- ஆக வேண்டியதை….
- போதை