உடுமலை நாராயண கவி இலக்கிய விருது

author
0 minutes, 2 seconds Read
This entry is part 6 of 9 in the series 18 ஏப்ரல் 2021

 

இவ்வாண்டுக்கான உடுமலை நாராயண கவி இலக்கிய விருது எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு உடுமலையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

இந்த விருது பத்தாயிரம் ரொக்கப்பரிசும் , கேடயமும் கொண்டது

 

உடுமலை நாராயண கவி இலக்கிய விருதை மேனாள் பல்கலைக்கழகத்துணை வேந்தர் ப. க. பொன்னுசாமி ( படுகளம், திருமூர்த்திமலை, நெடுஞ்சாலை விளக்குகள் நாவல்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட அறிவியல் தமிழ் நூல்கள் எழுதியவர் )வழங்கினார்.

இதுவரை உடுமலை நாராயண கவி இலக்கிய விருது பெற்றோர் சுளுந்தி நாவலாசிரியர் முத்து நாகு, கீரனூர் ஜாகீர்ராஜா, கவிஞர் ஆண்டன் பென்னி, மேற்குத்தொடர்ச்சிமலை இயக்குனர் லெனின் பாரதி, பேராண்மை ஒளிப்பதிவாளர் ஈஸ்வர் போன்றோர்

உடுமலை நாராயண கவி இலக்கிய விருதை மேனாள் பல்கலைக்கழகத்துணை வேந்தர் ப. க. பொன்னுசாமி ( படுகளம், திருமூர்த்திமலை, நெடுஞ்சாலை விளக்குகள் நாவல்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட அறிவியல் தமிழ் நூல்கள் எழுதியவர் )வழங்கினார். உடுமலை ஆய்வு நடுவத்தைச்சார்ந்த குமாரராஜா, அருட்செல்வன், பேரா ஜெயசிங், பேரா. கிருஷ்ணன், பேரா. கற்பகவள்ளி,சிவகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்

சுப்ரபாரதிமணியனின் படைப்புலகம் பற்றி மேனாள் பல்கலைக்கழகத்துணை வேந்தர் ப. க. பொன்னுசாமி ( படுகளம், திருமூர்த்திமலை, நெடுஞ்சாலை விளக்குகள் நாவல்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட அறிவியல் தமிழ் நூல்கள் எழுதியவர் ), கிருஷ்ணன்( முதல்வர் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கலூரி), வேலுமணி ( தமிழ்த்துறைத்தலைவர் உடுமலை ஆகியோர் பேசினர். எழுத்தாளர் குமாரராஜா வரவேற்பு நல்கினார்

1

‘சங்க கால வரலாற்றில் பெரும் மாற்றங்களை உருவாக்கியது, ‘தினமலர்’ ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் ஆய்வுகள்,” என சென்னை அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமி பேசினார்.திருப்பூர் மாவட்டம், உடுமலையில், கல்வியாளர்கள், படைப்பாளர்கள் சார்பில், எழுத்தாளர்சுப்ரபாரதிமணியன் மற்றும் ‘உடுமலை வரலாறு’ நுால் வெளியிட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினருக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது.சென்னை அண்ணா பல்கலை மற்றும் மதுரை பல்கலை முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமி தலைமை வகித்து பேசியதாவது:

சமூகத்தின் கண்ணாடியாக இலக்கியங்கள் அமைகின்றன. வரலாறு என்பது, பல ஆண்டுகளாக இருப்பதை உண்மையாக, ஆதாரங்களுடன் எழுத வேண்டும். எழுத்து, பொருள் மாறக்கூடாது. இலக்கியம் கற்பனையாக இருக்கலாம். தங்கத்தை கட்டியாக பயன்படுத்த முடியாது; ஆபரணமாக மாற்றினால் பயன்படுத்தலாம். அது போல், இலக்கியம் இருக்கலாம்.வரலாற்று ஆசிரியர்கள் உண்மையை நிலைநிறுத்த வேண்டும். ஆனால், முதலில் அங்கீகாரம் கிடைக்காது. ‘தினமலர்’ ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கொடைக்கானலில் அமர்ந்து சிறிய நுால் படித்து, பழங்கால நாணயங்கள் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்திக்கொண்டு, தேடி, தேடி ஆய்வு செய்து, உண்மையை வெளிக்கொண்டு வந்தார்.உலகம் முழுவதும் நாணயங்களை தேடினார். அமராவதி ஆற்றங்கரை நாகரிகத்தில் கிடைத்த நாணயங்களையும் ஆய்வு செய்துள்ளார். பாண்டியர், சேரர், சோழர் மற்றும் சங்க கால வரலாறு குறித்து பல ஆய்வுகள் மூலம்நிரூபித்தார்.நாணயவியல் ஆய்வில் துணிந்து, கடும் முயற்சியால் சிறப்பான வரலாற்றை வெளிக்கொண்டு வந்தார். முதலில் ஏற்றுக்கொள்ளாதவர்கள், நாணயவியலின் தந்தையாக ஏற்றுக்கொண்டனர். வரலாற்று ஆய்வாளர்கள் தனி மரியாதை கொடுத்தனர்.ஏராளமான வரலாற்றுச்சுவடுகள் புதைந்து கிடக்கின்றன. அவற்றை வெளிக்கொண்டு வர வேண்டும்

சுப்ரபாரதிமணியன் அவர் வாழும் பகுதி சார்ந்த மக்களின் அனுபவங்களை இலக்கியமாக்கியிருப்பதில் வெற்றி கண்டிருப்பவர். இந்த வெற்றியை அவரின் தொடர்ந்த இலக்கிய முயற்சிகளுக்கான வெற்றி எனக்கொள்ளலாம்

இவ்வாறு, பொன்னுசாமி பேசினார்.உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தலைவர் குமாரராஜா, வித்யாசாகர் கல்லுாரி முன்னாள் முதல்வர் பொன்னரசனார், முதல்வர் பிரபாகர், உடுமலை அரசுக்கல்லுாரி பேராசிரியர் வேலுமணி, பல்லடம் அரசுக்கல்லுாரி பேராசிரியர் ஜெயசிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் கருத்துரை வழங்கினார். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ஏற்புரையாற்றினார்.

Series Navigationகடலின் அடியே சென்று தாக்கி பேரழிவை ஏற்படுத்தும் ரஷ்யாவின் புதிய அணு ஏவுகணை. செயற்கைச் சுனாமியை ஏற்படுத்துமா ..? அதிர்ச்சியில் உலக நாடுகள்.வெறுக்காத நெஞ்சம் – ஜனநேசன் கதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *