சபா தயாபரன்
ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ள போஸிடான் 2M39 டோர்பெடோ( Poseidon 2M39 torpedo) என்னும் ஏவுகணையானது மணிக்கு 10,000 கிலோ மீட்டர் வேகத்துடன் கடலின் அடியில் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது. இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் கடலின் அடியே அணுகுண்டுகள் பொறுத்தப்பட்ட இந்த ஏவுகணையானது ஏவப்படும்போது இதில் இருந்து வெளிப்படும் ரேடியோ கதிர்வுகளின் அதிர்வுகள் பெரிய அலைகளை ஏற்படுத்தி செயற்கையான சுனாமியை ஏற்படுத்தும் என்று அறியப்படுகின்றது. பல மெகா தொன் போர்க்கப்பல் திறன் கொண்ட கடலோரப் பகுதியை அழிக்கும் போஸிடான் 2 எம் 39 டார்பிடோ கொடிய கதிரியக்க அலைகளால் நகரங்களை சதுப்பு நிலமாக மாற்றி மனித இனமே பல தசாப்தாண்டு காலத்திற்கு வாழ முடியாத பேரழிவை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகின்றது.
போஸிடான் Poseidon எனப்படும் இந்த பெயரானது ஒரு கிரேக்க கடல் தெய்வத்தின் பெயராகும் .தாடியுடன் கையில் ஒரு சூலாயிதத்துடன் இந்த தெய்வம் சித்தரிக்கப்படுள்ளது. பன்னிரண்டு ஒலிம்பியன்களில்( ஒலிம்பியன்கள்- கிரேக்க புராணங்களில், பண்டைய கிரேக்கர்கள் நம்பிய முக்கிய தெய்வங்கள்) ஒருவரான. இவரின் குதிரை கடலின் அடியில் ஓடும்போது நிலநடுக்கம் ஏற்படுமென்று கிரேக்க புராதனக் கதைகளில் விவரிக்கப்பட்டுள்ளது.இவரின் பெயரையே ஒரு குறியீடாக ரஷ்ய ஏவுகணைக்கு வைத்திருப்பதும் தெய்வ செயற்பாடுகளை ஒப்பிட்டு பேசப்படுவதும் சுவாரஷ்யமான ஓன்று.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சோதனைகளின் முக்கிய விபரங்கள் தனக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தல் வேண்டும் என்றும் 2022 கோடையில் ஆர்க்டிக்கில் (ஆர்க்டிக்உலகத்திலுள்ள ஐந்து பெருங்கடல்களுள் ஒன்றாகும் . புவியின் வடகோடியிலுள்ள வடமுனையைச் சுற்றி அமைந்துள்ள கடலே ஆர்க்டிக் கடலாகும்.) போஸிடானை நிறுத்த புடின் விரும்புவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
“கடலில் இருந்து கனதியான நீரின் அலை உயர்ந்து, நகரத்தின் வழியாக கிழிந்து, அதன் எழுச்சியில் அனைத்தையும் அழித்து, நச்சு கதிரியக்கத்தன்மையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது” என்ற தன் கனவை சில ஆண்டுகளுக்கு முன்பு விளாடிமிர் புடின் தனது இராணுவ கனவுக்கான திட்டங்களை வெளியிட்டபோது எல்லோரும் விளாடிமிர் புடின் மூளை மழுங்கடிக்கப்பட்டது என்றே நினைத்தனர்.ஆனால் அவரின் கனவு மெய்ப்பட்டதாகவே இந்த ஏவுகணை வெற்றியின் மூலம் விளாடிமிர் புடின் அறியப்படுகிறார்.
டார்பிடோக்களை torpedo ஏற்றிச் செல்ல குறைந்தபட்சம் மூன்று நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆர்க்டிக் பெருங்கடலில் ஏற்கனவே சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன, அங்கு புடின் ஆட்சி உலக நாடுகளையே அச்சுறுத்தும் இராணுவ இருப்பைக் கட்டமைத்து வருகிறது.குறிப்பாக அமெரிக்காவிற்கு இது ஒரு பலத்த அடியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான மாக்சர்( Maxar (செயற்கைக்கோள் படங்கள் தரை நிலைமைகளைக் காண்பதற்கான முக்கியமான கருவியாகும் ) சி.என்.என்-க்கு (CNN) வழங்கிய செயற்கைக்கோள் படங்கள் ஆர்க்டிக் கடற்கரையோரத்தில் ரஷ்ய இராணுவ தளங்கள் தொடர்ச்சியான கட்டமைப்பையும், போஸிடான் மற்றும் புதிய உயர் தொழில்நுட்ப ஆயுதங்களுக்கான நிலத்தடி சேமிப்பு வசதிகளையும் விவரிக்கிறது. ஹை நார்த் (High North ) பகுதியில் உள்ள ரஷ்ய வன்பொருளில்( hardware )குண்டுவீச்சு மற்றும் மிக் 31 பிஎம் ஜெட் விமானங்களும், அலாஸ்கா கடற்கரைக்கு அருகிலுள்ள புதிய ரேடார் அமைப்புகளும் அடங்கும்.
ரஷ்யாவின் ‘போஸிடான் 2 எம் 39 டார்பிடோ’ஏவுகணையை “சூப்பர்-ஆயுதம்” என்று குறிப்பிடும் பாதுகாப்பு நிபுணர்கள் .இது ஏவப்படும் நாளே உலக ஆயுதக் கலாச்சாரத்திற்கு கடைசி நாளாக இருக்கும் என்று எதிர்வு கூறுகின்றனர்.
2004 ஆண்டு எழுந்த சுனாமி பேரலை அமெரிக்கா கடலின் கீழே நடாத்திய அணுகுண்டு பரிசோதனையினாலேயே நடந்தது என்று ஒரு பரவலான கருத்து சமூக ஊடகங்களில் பரவலாக எழுந்திருந்தது. மேற்கொண்ட செய்திகளை பார்க்கும்போது அந்தக் கருத்தானது உண்மையாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தை மீண்டும் எழுப்பியுள்ளது நியாயம் என்றே எண்ணத் தோன்றுகிறது.
- இந்துத்துவம் என்பது ….
- ஏப்ரல் மாத ‘புத்தகம் பேசுது’ இதழ் குறித்து என் பார்வை
- என் மனம் நீ அறியாய்
- ஒரு கதை ஒரு கருத்து
- கடலின் அடியே சென்று தாக்கி பேரழிவை ஏற்படுத்தும் ரஷ்யாவின் புதிய அணு ஏவுகணை. செயற்கைச் சுனாமியை ஏற்படுத்துமா ..? அதிர்ச்சியில் உலக நாடுகள்.
- உடுமலை நாராயண கவி இலக்கிய விருது
- வெறுக்காத நெஞ்சம் – ஜனநேசன் கதைகள்
- உலக வர்த்தகப் போக்கு – வரத்தை ஆறு நாட்கள் தடை செய்த ஜப்பானிய கப்பல் உரிமையாளிக்கு எகிப்து 900 மில்லியன் டாலர் நட்டஈடு அபராதம்.
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்