என்னை பற்றி

author
1
0 minutes, 15 seconds Read
This entry is part 19 of 22 in the series 18 ஜூலை 2021

 

அன்புடையீர்,

வணக்கம்..

தாங்கள் எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவதற்கு என் மனமார்ந்த நன்றியை இவண் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்..

“தோற்றம்” என்ற என் சிறுகதையை “தி£ண்ணை” இணைய இதழில் (9.5.21) பிரசுரம் செய்ததற்கு மீண்டும் ஒருமுறை என் நன்றி..
மேற்படி சிறுகதையை UNBELIEVABLE என்று ஒரு வாசகர் சொல்லியிருந்தார்..வாசகப்பெரு மக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வது
வழக்கமானதொன்றுதான்..அதுதான் என் போன்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்கும்..கதையில் எங்காவது தவறு செய்திருந்தாலும் திருத்திக் கொள்ள
வழி வகை செய்யும்..ஆனால் இந்த குறிப்பிட்ட சிறுகதையில் (தோற்றம்) நான் எழுதியிருந்த சம்பவங்கள் அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை சம்பவம்..
நெசப்பாக்கம், பல்லவன் சாலையில் வசிக்கும் நான், அகவை 80 கடந்தவன்..சென்னை தரமணியில் உள்ள “இந்திய தர நிர்ணய அமைவனம்” எனும்
Bureau of Indian Standardsல், (மைய அரசின் நுகர்வோர் துறை கீழ் வரும் தென் பிராந்திய அலுவலகம்) 1970ல் “இள நிலை சுருக்கெழுத்தராக”,
சேர்ந்து, பிறகு “முது நிலை சுருக்கெழுத்தர்”, “நேர்முக உதவியாளர்”,போன்ற பதவி உயர்வுகளை பெற்று கடைசியில் “Deputy Director General (South)
அவர்களின் “தனிச்செயலராக” சில ஆண்டுகள் பணியாற்றி 2000ம் ஆண்டு, டிசம்பர் மாதம், என் 60 வயதில் பணியிலிருந்து ஓய்வு பெற்றவன்..நிற்க,

எனக்கு பள்ளி பருவத்திலிருந்தே எழுத்துதுறை மீது ஒரு பாசம்..திருவிடைமருதூர் நான் பிறந்து, கல்வி பயின்ற ஊர்..ஒரு நாள் மாலை நான் பள்ளி விட்டு
வீடு திரும்புகையில், மழை பொத்துக்கொண்டு ஊற்ற, அங்கிருந்த ஒரு நூலகத்தில், மின் விளக்கொளியில் சிலர் ஏதோ படித்துக்கொண்டிருப்பதைப்
பார்த்து நான் உள்ளே ஒதுங்க, அங்கே என் வகுப்பு ஆசான் எதையோ படித்துக்கொண்டிருந்தவர், என்னைப் பார்த்து “மழையில் நனைஞ்சுட்டியா? உள்ளே
வந்து இங்கே இருக்கிற ராக்குகளிலிருந்து ஏதையாச்சும் எடுத்துப் படி..மழை விட்டதும், நானே உன்னை உன் வீட்டில் விட்டுட்டு போறேன்” என்று
சொன்னதை தட்ட முடியாமல், (அப்போது எனக்கு படிப்பிலேயே அவ்வளவாக ஆர்வம் இல்லை)அங்கிருந்த ராக்கிலிருந்து எடுத்த ஒரு புத்தக அட்டையில்
கருப்பு கண்ணாடி அணிந்த ஒருவர் புகைப்படம், உடன் “சங்கர்லால் துப்பறிகிறார்” என்ற தலைப்பு பார்த்து அதை எடுத்து படிக்க அன்று முதல் நான்
அமரர் தமிழ்வாணனின் பரம ரசிகனானேன்..பிறகு தினமும் மாலை பள்ளி விட்டதும் (பள்ளி விடுமுறை நாட்களிலும்)  அந்த நூலகம் வந்து ஏராளமான
தமிழ்வாணன் புத்தகங்களை படித்து, பிறகு நான் அமரர் தேவனின்” துப்பறியும் சாம்பு” “ராஜத்தின் மனோரதம்”, “ஸ்ரீமான் சுதர்சனம்”, “மிஸ்டர்
வேதாந்தம்” போன்ற புத்தகங்களை, மறுபடி,மறுபடி பாட புத்தங்களை படிப்பதுபோல் படித்து அவரைப் போல் எழுத்து துறையில் முன்னேற வேண்டும்
என்றே நினைத்திருந்த வேளையில், ஒருநாள் அந்த நூலகத்தில் என் பக்கத்தில் அமர்ந்து இலக்கிய விமர்சனம் பண்ணிக்கொன்டிருந்த இரு முதியவர்கள்
என்னை பார்த்து “தம்பி, நீ என்ன படிக்கிறே இங்கே?” என்ற போது, நான் “மிஸ்டர் வேதாந்தம்” படிப்பதாக சொன்னதும், அவர்கள் என்னை வியப்புடன்
பார்த்து, “இந்த தேவன் இந்த ஊர்காரர்தான்..மெட்ராசில் “ஆனந்த விகடனில்” எடிட்டர் ..நீயும் இவரைப் போல் ஒரு சிறந்த எழுத்தாளராக  வேண்டும்”
என்றபோது எனக்கு எழுத்துதுறையில் ஒரு ஆர்வம் வந்தபோதும், நான் பள்ளி இறுதி வகுப்பை 1957ல் முடிக்கவும், 1958ல் என் அப்பா அகால
மரணமடையவும் வேலை தேடிக்கொள்வதே ஒரு பிரும்ம பிரயத்தினமாய் இருந்தது..பல இடங்களில்பணியாற்றி 1970ல் தான் BISல் பணிக்கு
சேர்ந்தேன்..எப்போதுமே எனக்கு இலக்கிய ஆர்வம் இருந்தாலும், எப்படி ஒரு சிறுகதையாவது எழுதி அச்சில் பார்ப்பது என்ற குழப்பம் இருந்தபோது,
மறுபடி “மிஸ்டர் வேதாந்தம்” படிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது..அதில் திரு. தேவன் சொல்லியிருப்பார் அந்த கதையின் கதாநாயகனிடம்..  “சிறுகதை
எழுதுவது ஒன்றும் சிரமமானதில்லை..அதற்காக கருவை தேடி மண்டையை குழப்பிக் கொள்ள வேண்டாம்..நாம் அன்றாடம் காலையில் படுக்கையை
விட்டு எழுந்ததிலிருந்து, நம் வீட்டில், பக்கத்து,பக்கத்து வீடுகளில், தெருவில் போவோர், வருவோர், பேருந்துகளில், ரயில்களில், பயணிக்கும்போதும்,
அலுவலகத்திலும், செய்திதாள்களிருந்தும், பல சுவாரசியமான நிகழ்வுகளை அப்படியே உள் வாங்கிக்கொண்டு சிறுகதைகளாக்கலாம் என்று.. இந்த
உத்தியைக் கையாண்டுதான் என் அலுவலக சகா ஒருவருக்கு நேர்ந்த ஒரு நிகழ்வை சிறுகதையாக்கி அப்போது “தினமணி” வாரம்தோறும் வெளியிட்ட
“ஞாயிறு மலர்” பகுதிக்கு அனுப்பி வைத்தேன்..அடுத்த மாதம் அது பிரசுரமாகி எனக்கு Rs.25/- சன்மானத்தையும் பெற்று தந்தது..கதையின் தலைப்பு
“பீதி”, வெளியான நாள் 24.6.1976.. அன்று முதல் இந்த “தோற்றம்” சிறுகதைவரை 75, 80  சதம் உண்மை சம்பவங்களை அடிப்டையாய்க் கொண்டே
எழுதி வருகிறேன்..”தோற்றம்” கதையில் சொல்லபட்டிருக்கும் விஷயங்கள் அத்தனையும் எனக்கு நேர்ந்த சம்பவமே..சில சமயங்களில் உண்மை
சம்பவங்கள் கற்பனை கதையை மிஞ்சியதாகவும் இருப்பதுண்டு என்று கேள்விப் படிருக்கிறேன்.. இத்துடன் ஒரு சிறு குறிப்பு “என்னை பற்றி” என்ற
தலைப்பில் இத்துடன் இணைத்துள்ளேன்..தொடர்ந்து எனக்கு ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்.. கடிதம் நீண்டு விட்டது,,மன்னிக்க…

                                                                                                                    அன்புடன்,

                                                                                                                     கௌசல்யா ரங்கநாதன்
                                                                                                                     (ஏ. ரங்கநாதன்)

 

என்னைப் பற்றி

 1. இயர் பெயர் :           A. ரங்கநாதன்
 2. புனைப்பெயர் :           கௌசல்யா ரங்கநாதன் (மைய அரசுப் பணியில்                                                                     இருந்ததால், மேலதிகாரிகளின்                                                                                                                ஆலோசனைப்படி, எழுதுவதற்கு மட்டும்)
 3. வயது, பிறந்த தேதி : 78….9.12.1940…                                                                                                                                
 4. கல்வி பயின்ற ஊர் :              திருவிடைமருதூர் (தஞ்சை மாவட்டம்)
 5. பணி                        :              1958 முதல் பல இடங்களில், பல ஊர்களில், பணி                                                                புரிந்து கடைசியாய்1970 களில், “இந்திய தர                                                                                           நிர்ணய அமைவனம்” எனும் BUREAU OF INDIAN                                                                                       STANDARDS,  தென் பிராந்திய அலுவலகத்தில்                                  (தரமணி,  சென்னை)” இள நிலை                                                                                                 சுருக்கெழுத்தாளராய்” பணியில் சேர்ந்து,                                                                                 “முதுநிலை  சுருக்கெழுத்தாளர்” “நேர்முக                                                                                       உதவியாளர்”, பிறகு தலைமை       அதிகாரி                                   எனும் Deputy Director General (South)  அவர்களின்                                               தனி செயலராய்”  பதவி உயர்வு பெற்று,                                                                                2000ம் ஆண்டு, டிசம்பரில் (60 வயதில் ஓய்வு).
 6. எழுத ஆரம்பித்தது : முதல் சிறுகதையே, அப்போதைய தினமணி                                                                                           நாளிதழின், ஞாயிறு மலர் இணைப்பு பகுதியில்                                                                    வெளியானது.. பிறகு இன்றுவரை பிரசுரமான                                                                                படைப்புகளின் விபரம் கீழே..
 7. a) சிறுகதைகள் 1041
 8. b) தொடர்கள்/மாத நாவல்கள்/குறுநாவல்கள் 80
 9. c) சிறுகதை தொகுப்புகள் 20
 10. d) வானொலி நாடகங்கள் (15/30 நிமிடங்கள்) சாந்தோம் கலைத்தொடர்பு மூலம் (மைலாப்பூர், 34 சென்னை) “வெரிதாஸ் வானொலி நாடகங்கள் (15 நிமிடம்) மற்றும், சென்னை பொதிகை தொலைக்காட்சியில் ஒரு 25 நிமிட நாடகம்) 1

பேட்டிகள் எடுத்தது    17

(“வளர்தொழில்” “தொழில் உலகம்” “NTH” எனும் “தேசிய பரிசோதனைக் கூடம்”, தரமணியில் அதன் தலைமை அதிகாரியிடம்)

 1. a) புதுக்கவிதைகள்/தமாஷ்கள் 57
 2. b) கட்டுரைகள் 53  

 

சிறுகதை போட்டிகளில் பரிசு பெற்றவைகள்

1) சுமங்கலி (குங்குமம் குழுமம்)                                      :            ஆறுதல் பரிசு          1987

2) தினமணி கதிர் (ஒரு பக்க கதைப்போட்டி)        :    முதல் பரிசு            1987

3) வாசுகி (குங்குமம் குழுமம்)                                           :               முதல் பரிசு            1993

4) புதிய பார்வை இதழில் வெளியான சிறுகதை  அந்த மாத சிறந்த சிறுகதையாய், “புதுகை இலக்கிய தென்றல்” என்ற அமைப்பால் பாராட்டும், சான்றிதழும், புதுச்சேரியில், ஒரு அரங்கில், March 1995.

5) “கலைமகள்” கா,ஸ்ரீ.ஸ்ரீ. நினைவு போட்டி  முதல் பரிசு, மைலாப்பூரில்  ஒரு கலை அரங்கில், 2004ல்.

6) தாகூர் கல்வி செய்தி (மாத இதழ்) ஒரு பக்க சிறுகதை போட்டியில், 4 ஒரு பக்க  கதைகள், March 2007,April 2007, Dec 2008,and Dec 2009ல்.

7)தினமணி கதிர் (ஜோதிடர் வரதன் சிறுகதை போட்டி) :   முதல் பரிசு.. ஏப்ரல் 2007

8)அமுதசுரபி                                                                                                                                                                                                                             ( அமரர் வசுமதி ராமசாமி நினைவு                                                                   சிறுகதை போட்டி)                                                  :                ஆறுதல் பரிசு 2007

9) “சிகரம்”, ஈரோடு                                                  :              ஆறுதல் பரிசு 2010

10) பொதிகை மின்னல், சென்னை   :              இரண்டாம் பரிசு ஏப்ரல் 2010

11) புதுகை தென்றல், வடபழனி                       :                இரண்டாம் பரிசு 2011

12) கவிதை உறவு                                                    :              ஆறுதல் பரிசு 2012

13) போடி மாலன் சிறுகதை போட்டி              :              ஆறுதல் பரிசு 2016

14) குமுதம் சிறுகதை போட்டி                          :              முதல் பரிசு 2016

15) உரத்தசிந்தனை சிறுகதைப்போட்டி முதல் பரிசு ஜனவரி 2021

குறு நாவல் போட்டி

1) சாவி (வார இதழ்)                                 :              1993ல் முதல் பரிசு

2) கலைமகள் (மாத இதழ்)                                   :              2007ல் .. முதல் பரிசு..                                                                                                                                                                     அமரர் ராமரத்தினம்                                                                                                                          நினைவு குறு நாவல் போட்டி.

 

பரிசு பெற்ற கட்டுரைகள்

1) “ராஜம்” (மாத இதழ்)                                           :                ஆகஸ்ட்  1995

2)”கிளப்ஸ் டுடே *மாத இதழ்)                           :              செப்டம்பர் 2014

                                                                                                         March  2015 மற்றும்,

                                          மே 2015 இதழ்களில்.

 

மறு பிரசுரம் கண்ட படைப்புகள்

கதையின் பெயர், வெளி வந்த பத்திரிகை,தேதி                                                                                              மறுபடி பிரசுரித்த பத்திரிகை  –  தேதி, வருடம்

 

“குப்பை”…தினமணி கதிர்…2.9.1990                     

 1. a) அமரர் திரு சுஜாதாவின் “மின்னம்பலம்” – 28.11.1999 ( 3 முறைகள்)                                                      b)    அமுதசுரபி – ஜனவரி 2007

“கடு,கடு,சிடு,சிடுவென” கலைமகள் – ஜூலை 2004        

பெண்மணி மாத நாவல் (மாலைமுரசு) – டிசம்பர் 2005

“சுழல்”, அமுதசுரபி – 2007                                             

பெண்மணி மாத நாவல் – நவம்பர் 2009

“எதிர்பாராதது”, தினமணி கதிர் – 22.4.2007                   

பெண்மணி மாத நாவல் –  ஆகஸ்ட் 2012

“உள் மன விகாரங்கள்”, பொதிகை மின்னல் – ஏப்ரல் 2011                                                        

பெண்மணி மாத நாவல் – மே 2015

“பிரமுகர்கள் வருகை”, புதுகை தென்றல் –  ஜூன் 2011       

பெண்மணி மாத நாவல் –  நவம்பர் 2017

 

விருதுகள்

1) சென்னை,சைதாப்பேட்டை, “மஹாத்மா காந்தி                                                நூல் நிலையத்தார் வருடம்தோறும் வழங்கிடும்                                                       “சக்தி கிருஷ்ணசாமி” விருது                                              2014ல்.. விருது பெற்ற தேதி… 12.10.2014

2) “கதை சொல்லி” மாத இதழின்,                                                                                                                                  “வானதி” விருது 2016                                                                 விருது பெற்ற தேதி.. 4.1.2017

மற்றும்

“ஆனந்த விகடன்”, மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழா சிறப்பு இதழில் “எங்கள் பாரத தேசமென்று” என்ற தலைப்பில்  சிறப்பு சிறுகதை.

வெளிவந்த தேதி …. 12.12.1982.                                                                         

 

———

 

 


   

Series Navigationதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]7.ஔவையாரும் சிலம்பியும்
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *