Where is Green Energy ?
சி. ஜெயபாரதன், கனடா
வருது வருது,
புது சக்தி வருகுது !
கிரீன் சக்தி
வருகுது !
ஹைபிரிட் கார்கள்
செல்வக்
கோமான் களுக்கு !
கிரீன் ஹவுஸ் வாயுக்கள்
வெளி ஏறா
எலக்டிரிக் கார்கள்,
உச்ச விலைக் கார்கள் !
பச்சை எரிசக்தி
வாகனங்கள் அல்ல !
அனுதினம்
அமெரிக்க வீதிகளில்,
இருநூறு பில்லியன்
எண்ணிக்கை
மிஞ்சிய
காஸ்லின் கார்கள்
காலையில்
ஓடா விட்டால்
பிரளயம் விளையும் !
கரி வாயு
பாரெங்கும் பரப்பும்
கார்கள்
ஓடித்தான்
கிரீன் எரிசக்தி
வாகனம்
வடிவாகப் போகுது !
பருவ காலங் களில்
உழுது பயிரிட்டு
அறுவடை செய்யும்
விவசாய யந்திரங்கள்
மின்சா ரத்தால்
இயங்கா !
விண்ணில் பறக்கும்
737 ஜெட்
விமானங்கள்
மேலே மேலே ஏறவும்
இறங்கவும்
தூய காஸ்லின் தேவை.
சூரிய ஒளிச்சக்தி
காற்றாடி மின்சக்தி
இராப் பகலாய்த் தொடர்ந்து
காரோட்டுமா ?
பாரில் விமானங்கள்
பறக்குமா ?
அறுவடை நிகழுமா ?
கிரீன் சக்தி தேடி
நூறாண்டு
ஆராச்சி செய்யினும்
கரி வாயு உமிழும்
காஸ்லின்
கார்கள் ஓடும், ஓடும்,
ஓடும்,
பாரெங்கும் பயணம்
நீடிக்கும்.
================
- இனிய நந்தவனம் – கனடா சிறப்பிதழ் வெளியீடு
- ஊரடங்குப் பூங்கா
- சீதைகளைக் காதலியுங்கள்
- எங்கே பச்சை எரிசக்தி ?
- பகல் கனவு
- விடியாதா
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 255 ஆம் இதழ்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- புரிதல்
- கனேரித் தீவில் திடீரென எழுந்த தீக்குழம்பு எரிமலைக் காட்சி
- தமிழ்க் கவிதைகள் தரமான ஆங்கிலத்தில்! – மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீவத்ஸாவின் ஆரவாரமில்லாத அரும்பணி!
- எழுத மறந்த குறிப்புகள்: “ மாலன் “ என்னும் பன்முக ஆளுமை !
- குருட்ஷேத்திரம் 20 (சத்தியர்களை கருவருத்த ரெளத்ர ரிஷி)
- குருட்ஷேத்திரம் 19 (பாஞ்சாலியின் பிறவிக்கு மூலகாரணமான துரோணர்)
- என்ன தர?
- ஒலிம்பிக் வளையங்களுக்குள் ஒளிந்திருக்கும் வளையங்கள்
- என்னவோ நடக்குது
- கனடா தேர்தல் முடிவுகள் – 2021 – லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது
- கோதையர் ஆடிய குளங்கள்