என்ன தர?

author
0 minutes, 5 seconds Read
This entry is part 15 of 19 in the series 3 அக்டோபர் 2021
 
ஆர் வத்ஸலா
 
பழைய கண்ணாடி
பழைய செருப்பு
சாபர்மதியில்
கண்காட்சியாக
 
இலவச விநியோகத்தில் கிடைத்த
உண்மையை  தோய்த்தெழுதிய 
சத்திய சோதனை    
கண்ணாடி அலமாரியில்
 
ஒற்றை ஆடை
கோல்
கண்ணாடி
செருப்பு
இவற்றுடன்
அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்ட    பழைய அரசாங்க செய்திப்  படங்களின் 
வயது காரணமாக 
அவற்றில்
கோமாளித்தனமாக  
ஓடும் மனிதர் 
 
 
நடிக்க மறந்த
பென் கிங்க்ஸ்லீ 
சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும்  காட்சி
 
இதைத் தவிர 
வேறு என்ன  
தர இயலும்
நம்மால்
அவரைப் பற்றி
அடுத்த தலைமுறைக்கு?
 
(2/10/21  மதியம் 1 மணி)
 
(78 வயதான ஆர் வத்ஸலா எனும் பெயரில் கவிதை, கதை, புதினம் மற்றும் கட்டுரை எழுதும் வத்ஸலா ஐஐடியில் ஸிஸ்டம்ஸ் இஞ்சினீயராக பணி புரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். தனது 48 ஆவது வயதில் எழுதத் தொடங்கிய இவரது இலக்கியப் பயணம் பின் வருமாறு:

       2000 சுயம் கவிதை தொகுப்பு
ஸ்நேகா பதிப்பகம்
ஞானக் கூத்தன் முன்னுரையுடன்
 
 
     2006 “வட்டத்துள்” நாவல்
உயிர்மை பதிப்பகம்
அசோகமித்திரன் முன்னுரையுடன்
இதற்கு
திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது வழங்கப்பட்டது
 
 
       2012 இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 
“Once There Was a Girl”
Writer’s Workshop, Calcutta 
 
 
     2016 “கண்ணுக்குள் சற்று பயணித்து” நாவல் 
பாரதி புத்தகாலயம்
அருள்மொழி அண்ணாமலை
முன்னுரையுடன்
 
 
       2017 வத்ஸலாவின் படைப்புலகம்
கலைஞர் பதிப்பகம்
நேர்காணல் தொகுப்பாசிரியர்
முபின் சாதிகா
 
 
      Jan 2018 “நான் ஏன் கவிஞராகவில்லை “
கவிதை தொகுப்பு
ஆகுதி- பனிக்குடம் பதிப்பகம்
இரா. மீனாட்சி
 முன்னுரையுடன்
இது கவிதை உறவு முதல் பரிசு பெற்றது
 
 
    Dec 2018 “சின்னச் சின்ன இழை” சிறுகதை தொகுப்பு
பாரதி புத்தகாலயம்
இந்திரா பார்த்தசாரதி, ஐஸ்டிஸ் பிரபா‌ ஸ்ரீ தேவன் முன்னுரையுடன்
 
 
    2021 “கண்ணுக்குள் சற்று பயணித்து” நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு “The Scent of Happiness” Rathna Books Delhi பதிப்பகம்
 
 
       இவருடைய சிறுகதைகள் அக்னி சுபமங்களா, இலக்கிய சிந்தனை மற்றும் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் பரிசு/ விருது பெற்றுள்ளன.)
 
Series Navigationகுருட்ஷேத்திரம் 19 (பாஞ்சாலியின் பிறவிக்கு மூலகாரணமான துரோணர்)ஒலிம்பிக் வளையங்களுக்குள் ஒளிந்திருக்கும் வளையங்கள் 
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *