எஸ். சாமிநாதன் விருது

author
0 minutes, 2 seconds Read
This entry is part 9 of 15 in the series 17 அக்டோபர் 2021

தளம் ✍️ஒருங்கிணைப்பில்,  ******************************
🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅

🎇எஸ். சாமிநாதன் விருது 🎆

🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅
*******************************
தேர்ந்த படிப்பாளி எழுத்தாளர் இதழ் ஆசிரியர் நவீன தமிழ் நாடகங்கள்  திரைப்படங்கள் இயக்கக்காரர் போராட்டக்காரர் என,

வாழ்வின் இறுதிவரையும் களைத்துப்போகாத  தனியொரு மனிதராக தம்மை நிறுத்திக்கொண்டவர் திருச்சி எஸ். சாமிநாதன்.

அவர் மறைந்து ஓராண்டாகும் நவம்பர் 4ஐ யொட்டி, அவர் நினைவாக இரு பிரிவுகளில்  விருதுகள் வழங்க அவரது அன்பு குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
*******************************************
1. நவீன தமிழ் நாடகம் (Tamizh Theatre ) –
   (  விருது மற்றும்
விருதுத் தொகை ரூ. 25, 000/  )

2. கலை இலக்கிய விமர்சனம் –  (திறனாய்வு )
(விருது மற்றும்
விருதுத் தொகை ரூ. 25, 000/)
*******************************************

இத் தளங்களில் தங்களைப் பதித்து  முனைப்பாக இயங்கும் குறிப்பிடத்தக்க படைப்பாளிகள் (பிரிவுக்கு ஒருவர் என )இருவருக்கு “எஸ். சாமிநாதன் விருது” வழங்கப்பட உள்ளன.

தளம் ✍️ ஒருங்கிணைப்பில், நவம்பர் 2021ல் விருதுகள் வழங்குதல் நிகழும்.

இப்பொருள்களில் தனித்துவமிக்க செயற்பாட்டாளர்கள் பெயர்களை, அவர்களின் விவரங்களோடு, வரும்  அக்டோபர் 20,  2021க்குள் தளம் இதழுக்கு அனுப்ப தகைமை மிக்க நண்பர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

படைப்பாளிகள், செயற்பாட்டாளர்கள் தனிப்பட்டமுறையில் விருது பற்றி  விண்ணப்பிக்க வேண்டாம்.,  தொடர்பு கொள்வதும் வேண்டாமெனவும் அன்புடன்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பரிந்துரைப்போர் கருத்துக்களின் அடிப்படையிலும், தளம் தேர்வுக்குழுவின் ஆய்வின் அடிப்படையிலும் விருதுக்குரியோர் தெரிவு செய்யப்பட்டு, அவர்களின் ஒப்புதல் பெற்றபின் பெயர்கள் வெளியிடப்படும்.
******************************************
பரிந்துரைகள்,  தளம் ✍️முகவரி மற்றும்  மின்னஞ்சல்  (thalam.base@gmail.com )முகவரிக்கு அனுப்ப தகைமைமிகு  பரிந்துரைப்போர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 👍✍️

Series Navigationகவிஞர் வைதீஸ்வரனின் புதிய நூல் குறித்து……பூகம்பத்தால் பூகோளச் சுற்று அச்சின் சாய்வு மாறி பூமியின் சூடேற்ற நிலை பேரளவு பாதிப்பாகிறது
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *