முகங்கள்… (இரயில் பயணங்களில்)

author
3
0 minutes, 4 seconds Read
This entry is part 8 of 11 in the series 21 நவம்பர் 2021

ச. சிவபிரகாஷ்

வாழ்க்கையிலும்,

வழிப்போக்கிலும்,

அறிந்தவர்,

அறியாதவர், – என

எத்தனை?

முகங்கள்.,

என் பயணத்தில்.

 

பயணம்!

பழி சொல்லுமா?

 

முகங்கள் – பற்றிய

தேடல்  இதுவல்ல,

கண்ணில்பட்டதை,

காட்சியாய்,

சாட்சியாய்.

 

பயணமே!

கதை சொல்லுமா?

 

Online – ல்

முன்பதிவு  செய்து,

முந்நூறு  மைல்களுக்கான,

பயணம்.,

புகைவண்டியில்.

 

புகைவண்டியா?

இது…

பயணம்  முடித்து,

பல வருடங்கள்,

கடந்து தானே,

போனது.

 

உருமாறிய…

ரயிலே,

ரயிலே,

உதவிக்கு  வாயேன்.

 

நிலையங்களில்,

நிறுத்தத்தில்,

நிறைய  முகத்தை,

பார்த்தறிய வேண்டுமே,

இப்பயணத்தில்.

 

பயணமே!

வழிக்காட்டுமா?

 

இரண்டாம்  வகுப்பில்,

இருக்கை  எனக்கு.

 

முகமறியாத  பலர்,

மூன்று,

மூன்று இருக்கைக்குள்.

 

 

காத்திருப்பு பட்டியலிலுள்ளோர்,

கதவுக்கருகே,

கால்வலிக்க  நின்றனர்.

 

Black coat  அணிந்திருந்தவர்,

Bunch of காகித்தோடேறி,

பட்டியலிலுள்ள   பெயர்களை,

பார்த்து,

பலரது…

பயணத்தை  உறுதி செய்தார்.

 

சன்னல்  இருக்கைக்காகவே,

சண்டித்தனம்  செய்ததாம் – ஒர்

பாலர்.

பார்த்தவர் விட்டுக்கொடுத்தார்.

பாராமுகமாதிருந்தவர்…

பண்பில்லாதே போனார்.

 

கையோடு…

கைபேசியில்   பலர்.

 

கண்டதை,

கண்டு,

காசு  செலவழித்து,

புசித்துக்கொண்டேயிருந்தோரும்,

புகைக்க  முடியாமற் நெளிந்தாராம்,

சிலர்.

 

 

திருட்டு,

பயணத்தில்…

பலரை,

தீர்க்கமாக  ஆசிர்வதித்து,

பணத்தை,

திரட்டி தான், கடக்கிறார்கள்

திருநங்கைகள்.

 

நாட்டு நடப்புகளை,

நாவினால்,

கதைத்தவரை,

கண்டும்,

காணாதும்,

திகைப்பிலும்,

திசைமாறி அமர்ந்தும் சிலர்.

 

தினசரி நாளிதழை,

திருப்பி,

திருப்பி,

படித்தவர்,

பலர்.

 

அமர்ந்திருந்தவரும்,

புத்துணர்ச்சிக்கு, தான்

டீ – அருந்துவர்.

 

எப்படி?…

 

டீ  – விற்பவர்

அலுப்பில்லாமல்,

அவ்வப்போது,

வந்து,

வந்து,

 நடந்து

கடக்கிறார்,

புத்துணர்வோடு.

 

கண்ணில்லாதோர்.,

Baby toys – விற்க,

கண்ணும்,

Baby யும், – உடையவர்,

இதை,

காணாது,

குருடாகிறார்,

ஏனோ?.

 

பணமும்,

பயணச்சீட்டுமின்றி,

இரயிலேறி,

Money பர்ஸ் விற்று,

Money ஐ சேர்க்கிறார்,

யாரோ?

 

சில்லரை  காசுக்காக,

சிந்நியிருந்த,

குப்பையை அகற்றி,

சுத்தமாக்கினார்.,

பலரது…

காலுக்கடியை,

காலில்லா

மாற்றுத்திறனாளி.

 

இடமும் சுத்தமாச்சு,

இருப்பவர்…

மனங்கள்  ஏனோ?

குப்பையாச்சு.

 

இப்படியே…

 

ஒரு

முகமாக வந்தவர், – பல,

முகங்களாயினர்.

பகுப்பாய்வுமின்றி.

பயணம் – எனது,

எப்போதோ,

முடிவாகியது.

 

முகங்கள்…

முடிவாக போவதுமில்லை,

பயணமே!

பதில் சொல்லுமா?

 

முகங்கள்..

எத்தனை முகங்கள்,

எத்தனை  முகங்கள்?

எங்கே

போவதும்,

வருவதும், – ஆன

முகங்கள்.

 

இத்தனை…

முகங்களில்

முத்திரை பதிப்பதும்,

முகமுடி தரித்துவதும்,

எந்த…

முகமென,

என்பதையறிய

ஏங்கி தவித்தேன் – யான்.

 

அவ்வகையில்

 

எந்தன்…

முகத்தையும்,

முழுமையாக

அறிந்தவர்

அறிபவர்

எவரோ?

 

 

 

                                                                                                                  ச. சிவபிரகாஷ்

Series Navigation40 வது சார்ஜா புத்தகக்கண்காட்சிசிறை கழட்டல்..
author

Similar Posts

3 Comments

  1. Avatar
    K Balakumar says:

    அருமையான கவிதை. நிலம் சற்று குறைத்திருக்கலாம் என்பது என் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *