ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
தன் முதுகை(த்)தான் பார்த்துக்கொள்ள முடியாதா என்ன?
சிறிய ஆடியொன்றைக் கையில் பிடித்து வாகாய்
முதுகுக்குப்பின் கொண்டுபோகலாம்.
அல்லது பெரிய ஆடியொன்றின் முன்
முதுகைக் காட்டிக்கொண்டு நின்று
கழுத்தை வளைத்துப் பார்க்கலாம்.
இப்போதெல்லாம் நம் அலைபேசியைக் கொண்டு
புகைப்படம் கூட எடுத்துவிட முடியும்.
சின்னத்திரையில் வரும் பெண்கள் அணியும் சட்டைகளில்
என்னமாய்த் தெரிகிறது முக்காலுக்கும் மேலான வெற்று முதுகு!
வீட்டிற்குச் சென்று
மெகாத் தொடரில் தான் நடித்த காட்சியை
மீண்டும் ஓட விட்டு
தன் முதுகை நன்றாகவே பார்த்துக்கொள்ளலாம்.
கைகளுக்கும் கழுத்துக்கும் போடுமளவு
நேர்த்தியாய் மேக்கப்
முதுகுப் பகுதிக்குப் போடப்படுவதேயில்லை.
எப்படியிருந்தாலும், நம் முதுகைப் பார்ப்பதற்கு
கொஞ்சம் பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது.
அடுத்தவர் முதுகைப் பார்ப்பதற்கு
அது தேவையில்லை…….
ஆனால் _
முதுகுகள் பெரும்பாலும் மேலாடையால்
மறைக்கப்பட்டிருக்கின்றன.
அம்மணமாயிருந்தாலும் அதன் தோலுமொரு
ஆடையாய்….
இன்னும்
எலும்புக்கூடு, முதுகுத்தண்டு, எத்தனையெத்தனையோ
நரம்பிழைகள்,
ரத்தநாளங்கள், பிசகிய வட்டுகள் ஒன்றிரண்டு.
எண்ண எல்லாருடைய முதுகுகளும் என்னுடையதாய்
என்னுடைய முதுகு எல்லோருடையதுமாய்…
எந்த முதுகைத்தான் முழுமையாகப் பார்க்கமுடிகிறது….
அப்படியே பார்க்கக் கிடைத்தாலும்
அழுக்கு ஒட்டிக்கொண்டிருக்கிறதே என்று தட்டிவிட்டால்
அது என் முதுகும் என் கையுமெனில்
சுளுக்கிக்கொள்ளும் சாத்தியமுண்டு.
என் கையும் இன்னொருவருடைய முதுகுமெனில்
எனக்கு அடிவிழக் கூடும்
என் முதுகும் இன்னொருவருடைய கையுமெனில்
அதுவே இன்னும் பலமாக விழும்…..
எந்தவொரு முதுகிலும் கட்டாயமாய் பதிந்திருக்கும் _
பேயறை அறைந்த பாறாங்கல் கைகள் ஏற்படுத்திய
வலிகள் மட்டுமல்ல
ஏதோவொரு நாளில் வருடிய விரல்களும்,
ஏகாந்தத்தில் பரிவோடு சாய்ந்துகொண்ட தலையின்
சுருள்முடிப்பிரிகளும்கூட.
அடிதாங்கி போலும் தற்காப்புக்கவசம் போலவும்
பிடிமானமாயிருக்கும் திரு முதுகைக் காணக்
கண்கோடி வேண்டுமென்று
இருந்தாற்போலிருந்தொரு பாடல்
உள்ளுக்குள்ளிசைக்க _
அதைக் கேட்டுக் குலுங்கிச் சிரிக்கிறது
அவரவர் அடியாழத்திருக்குமொரு
அடி முடி காணா திரு முதுகு.
- அவரவர் முதுகு
- மகத்தான மாண்டிசோரி கல்விமுறை
- ஒருமையைத் தேடி சூஃபி பார்வையின் வழியே பகவத் கீதையும்-குரானும் மூஸா ராஜாவின் IN SEARCH OF ONENESS என்ற நூலின் தமிழாக்கம்
- சப்தஜாலம்
- தந்தையின் இருத்தலும் மகளின் கட்டுடைப்பும் ‘பெத்தவன்’ நெடுங் கதையை முன்வைத்து.
- ‘இவன் வேற மாதிரி அல்ல.’ – புத்தகத்தைத் தெரிந்து கொள்வோம்
- எங்க வானத்தில் மீண்டும் ஒரு வால்நட்சத்திரம்
- அழகிய சிங்கர் 3 கவிதைகள்
- ஸஹாரா பாலைவனச் சூரியக்கதிர் நிலையங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு தொடர்ந்து மீள்புதிப்பு மின்சக்தி பரிமாறத் திட்டம்.
- மெல்பனில் மல்லிகை ஜீவா நினைவரங்கில் முருகபூபதியின் மூன்று நூல்களின் வெளியீடு
- பெரியப்பாவின் உயில்
- பாரதி தரிசனம் பிறமொழிகளில் பாரதியை அறிமுகப்படுத்துவதில் எதிர்நோக்கப்படும் சவால்கள் !
- தொடுவானுக்கு அப்பால்
- எனது ஆகாயம்
- இலக்கியப்பூக்கள் 224
- எழுத்தாளர் குரு அரவிந்தனிடமிருந்து “சிறுகதை எழுதுவது எப்படி?” பயிற்சிப்பட்டறை.
- ஏக்கங்கள்