ஒருமையைத் தேடி சூஃபி பார்வையின் வழியே பகவத் கீதையும்-குரானும்  மூஸா ராஜாவின் IN SEARCH OF ONENESS என்ற நூலின் தமிழாக்கம்

This entry is part 3 of 17 in the series 12 டிசம்பர் 2021

 

 

நூல் அறிமுகம்

லதா ராமகிருஷ்ணன்

 

மத நல்லிணக்கம், மனிதநேயம் மானுட மேம்பாட்டிற்கு மிக முக்கியம். இதை திரு. மூஸா ராஜாவின் இந்த நூல் அழுத்தமாக எடுத்துரைக்கிறது. அனுபவ ரீதியாக அவர் கண்டவற்றின் அடிப்படையில், அவருடைய ஆழ்ந்த வாசிப்பை ஆதாரமாகக் கொண்டு சக மனிதர்கள் பால் மிகுந்த அன்பும் அக்கறையுமாக எழுதப்பட்ட நூல் இது.

 

 

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குப் பல நூல்களை, நவீன தமிழ்க்கவிதைகள் பலவற்றை மொழிபெயர்த்துள்ள டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் நெருங்கிய நண்பரான திரு. மூஸா ராஜா மிர்ஸா காலிபின் கவிதைகளை பாரசீக மொழியிலிருந்தும் உருது மொழியிலிருந்தும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அந்த ஆங்கில நூலை தன் நண்பர் மொழிபெயர்க்க வேண்டுமென்று விரும்பினார் திரு. மூஸா ராஜா.

Dr. K.S. சுப்பிரமணியனின் வேலைப்பளு காரணமாக அந்த மொழிபெயர்ப்புப் பணியை என்னிடம் தந்தார் அவர். என் மொழிபெயர்ப்பு களை மேற்பார்வையிட்டார். சில திருத்தங்களைப் பரிந்துரை செய்தார். (பொதுவாக என் மொழிபெயர்ப்பில் யாரும் தலையிடுவதை நான் ஒப்பமாட்டேன் என்றாலும் டாக்டர் கே.எஸ்ஸிடம் அப்படி கறாராகச் சொல்லமுடியவில்லை!) இந்த மிர்ஸா காலிபின் கவிதை மொழியாக்க நூல் கவிதா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

 

அதேபோல், IN SEARCH OF ONENESS என்ற தலைப்பில் குரானையும் பகவத் கீதையையும் அவற்றிலுள்ள ஒற்றுமைகளையும்அகல்விரிவாக அலசியாராய்ந்து அவற்றைத் தனது வாழ்வனுபவங்களின் பின்னணியில் எடுத்துரைத்துள்ள இந்த நூலையும் தனது நண்பர் டாக்டர் கே.எஸ். மொழிபெயர்க்கவேண்டுமென்று விரும்பிக் கேட்டுக்கொண்ட போது டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் கண்பார்வை சற்று பிரச்சனை கொடுத்துக் கொண்டி ருந்ததால் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் மொழிபெயர்ப்புப் பணியில் இறங்கியிருந்த என் தோழி தேவிகாவிடம் இந்த நூலை மொழிபெயர்க்கும் பணியைத் தந்தார்.

 

தேவிகா, பெயர்பெற்ற தெலுங்கு எழுத்தாளரான டாக்டர் வி.வி.பி.ராமராவின் சிறுகதைத் தொகுப்பையும் வேறு சில சிறுவர் நூல்களையும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.

தேவிகாவின் மொழிபெயர்ப்பை அத்தியாயம் அத்தியா யமாக நான் டாக்டர் கே.எஸ்.சுப்பிர மணியனுக்கு வாசித்துக் காட்டுவேன். தேவையெனத் தோன்றும் சில திருத்தங்களைச் செய்வார் டாக்டர் கே.எஸ். பகவத் கீதைக்கு பாரதியார் எழுதிய தமிழ் விளக்கவுரைகளே இடம்பெறச் செய்தார் டாக்டர் கே.எஸ்.

 

ஒரு நூலாசிரியரின் எழுத்துநடை, வார்த்தைப்பிரயோகங்கள் முதலியன அவருடைய படைப்பின் நோக்கத்தை வெளிப்படுத்திவிடும்.

 

உதாரணமாக, மத நல்லிணக்கம் பேசுவதாகப் பறையறி விக்கப்படும் ஒரு நூலில் ஒரு மதத்தைப் பற்றி தடித்த வார்த்தைப் பிரயோகங்கள் இருந்தால் அல்லது சில வரலாற்றுண் மைகள் போகிற போக்கில் திரித்துக் கூறப்பட்டிருந்தால் – அந்த நூலின் நோக்கம் அம்பலமாகிவிடும்.

 

டாக்டர் மூஸா ராஜாவின் இந்த நூலைப் படிப்போருக்கு மானுடத்தின் பால் ஆசிரியருக்கு உள்ள உண்மையான அன்பும் அக்கறையும் கட்டாயம் புரியும்.

இந்த நூலைப் படிப்பது நம்மை மேம்படுத்திக் கொள்ள உதவும் என்றால் மிகையாகாது.

 

இந்த நூல் புதுப்புனல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

 

பக்கங்கள்: 320  – விலை: ரூ 350

மின்னஞ்சல்: pudhupunal@gmail.com

 

Series Navigationமகத்தான மாண்டிசோரி கல்விமுறைசப்தஜாலம்
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *