மகத்தான மாண்டிசோரி கல்விமுறை

This entry is part 2 of 17 in the series 12 டிசம்பர் 2021

(சீரிய முறையில் அறிமுகம் செய்யும் ஓர் எளிய கையேடு)

“குழந்தை வளர்ப்பில் சமுதாயத்திற்குப் பெரும்பங்கு உள்ளது. சமுதாயமாகிய நாம் குழந்தைகளின் நலவாழ்வில் எத்தகைய பங்காற்றி வருகிறோம்? குழந்தைகளின் சீரிய வளர்ப்பிற்கு உகந்த சூழல், வழிவகைகள் இல்லாத நிலை ஒரு பக்கம். அதே சமயம், எத்தனையோ வழிவகைகள் இருந்தாலும் செய்து தரப்பட்டாலும் குழந்தைகள் சரிவர மதிக்கப்படவில்லையானால், அதனால் அவர்களுடைய அக,புற வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டு விடும், மேற்கண்ட வழிவகைகள், வசதி வாய்ப்புகள் நேரிய பயனளிக்காது போய்விடும் என்பதே உண்மை.

 

21/2 வயது முதல் 7 வயது வரையான காலகட்டத்தில் ஒரு குழந்தை கற்றுக் கொள்வது காலத்திற்கும் அதன் ஆளுமையில் தாக்கம் செலுத் துவதாக அமைகிறது என்னும்போது மழலையர் கல்வி, குழந்தைகளுக்கான கற்பித்தல் முறை எத்தனை கவனமாகக் கட்டமைக்கப்படவேண்டும்! அப்படி குழந்தைகளை, அவர்களுடைய இயல்புகளை, நடவடிக்கைகளை, அறிதிறனை, ஆர்வங்களை பார்த்துப்பார்த்து மரியா மாண்டிசோரி அம்மையார் உருவாக்கிய மகத்தான கல்வித்திட்டமே மாண்டிசோரி முறை.”

 

மாண்டிசோரி கல்வித்திட்டத்தின் நன்மை குறித்து எளிய முறையில் விளக்கும் சிறிய கையேடு ஒன்று மாண்டிசோரி ஆசிரியை அஸ்வினியின் முயற்சியால் வெளியாகியுள்ளது. (ஒரு சில வாரங்களுக்கு முன்னால் ஆசிரியை அஸ்வினி தன் வீட்டுக்கு அருகிலுள்ள குழந்தைகளுக்கு மாண்டி சோரி வகுப்புகள் எடுக்க முயற்சி மேற்கொண்டு வருவது குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்னும் போதுமான நிதியுதவி கிடைக்க வில்லையென்றாலும் அவர் தன் வீட்டின் மாடியில் வகுப்புகளை ஆரம்பித்து முனைப்பாக நடத்திவருகிறார்.

(இந்தக் கல்விமுறையின் மதிப்பு அறிந்தவர்கள் அவருக்கு உதவ முன்வருகிறார்கள். அப்படி வந்தவர்க:ளில் திண்ணை ஆசிரியரும் ஒருவர். அவருக்கு ஆசிரியை சார்பில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.)

அரசுப் பள்ளிகளில் கற்பவர்கள், தனியார் பள்ளிகளில் கற்பவர்கள் என இரு தரப்பிலுமே தமிழ்மொழியைக் கற்பதில், கற்பிப்பதில் நிறைய போதாமை இருப்பது குறித்து அக்கறையுடைய பல கல்வியாளர்களும் அமைப்புகளும் தொடர்ந்த ரீதியில் ஆய்வுகள் மேற்கொண்டு ஆய்வுமுடிவுகளையும் வெளியிட்டுவருகிறார்கள். 

மாண்டிசோரி கல்விமுறையில் தமிழ் வாசிக்கவும் எழுதவும் நன்றாகக் கற்றுத்தரவும், கற்கவும் முடியும் என்று மாண்டிசோரி ஆசிரியை அஸ்வினி அழுத்தமாக எடுத்துரைக்கிறார்.

அவர் முயற்சியில் உருவாகியுள்ள இந்தக் கையேடு புதுப்புனல் பதிப்பகத்தில் விற்பனைக்கு உள்ளது.

Series Navigationஅவரவர் முதுகுஒருமையைத் தேடி சூஃபி பார்வையின் வழியே பகவத் கீதையும்-குரானும்  மூஸா ராஜாவின் IN SEARCH OF ONENESS என்ற நூலின் தமிழாக்கம்
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *