பத்திரிக்கைச் செய்தி – ஓவியத்துறையில் இதுவரை பெண்கள் அதிக அளவில் வராதது ஏன்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 14 of 19 in the series 30 ஜனவரி 2022

 

 

 

ஓவியத்துறையில் இதுவரை பெண்கள் அதிக அளவில் வராத இந்த வேளையில் கருத்துப்படம் என்று சொல்லக்கூடிய கார்ட்டூன் வரையும் பெண்கள் அரிதாகவே உள்ளனர். பல்வேறு துறைகளில் பெண்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தாலும் இந்த ஓவியத்துறை ஒரு வெற்றிடமாகவே இருப்பதால் முடிந்தவரை பெண்களையும் இந்த படைப்பாற்றல் விழிப்புணர்வு ஏற்படுத்தி பயிற்சி அளிக்க வேண்டும் . ஓவியத்துறையிலும் பெண்கள் சிறந்து விளங்க வேண்டும்.

என்று ஓவியரும் கல்வியாளருமான தூரிகை சின்னராஜ் புதன் அன்று திருப்பூர் மக்கள் மாமன்றத்தில் நடைபெற்ற மாதக்கூட்ட்த்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போது குறிப்பிட்டார்.

சி. சுப்ரமணியம் தலைமை தாங்கினார்.

ஓவியரும் கல்வியாளருமான தூரிகை சின்னராஜ் மேலும் பேசுகையில் இப்படிக்குறிப்பிட்டார்:

ஓவியம் என்பது காட்சிப்படுத்துதல் குறிப்பாக ஒரு வாக்கியத்தை அல்லது ஒரு வார்த்தையை நாம் எழுத்தாகவும் அல்லது ஒலி வடிவிலும் கேட்பது அதை நம்மால் காட்சியாக சிந்திக்க முடியாது. ஆனால் ஆயிரம் வார்த்தைகளை எழுதி ஏற்படுத்தக்கூடிய அதிர்வுகளை ஐந்தே கோடுகளில் வெளிப்படுத்தி விட முடியும். குறிப்பாக அதிக மதிப்பெண்கள் பெறும் அனைவரும் வலது முளையை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. அவர்கள் மதிப்பெண்களில் சிறந்து விளங்குகிறார்கள் தவிர படைப்பாற்றலையும் ஒளிர்வதில்லை. அதே சமயத்தில் வலது மூளையை பயன்படுத்தி அதிக அளவில் சிந்திப்பவர்கள் ஓவியம் இசை சிற்பம் போன்றவற்றில் சிறந்து விளங்குகின்றனர். உதாரணமாக நமக்கு ஒரு வார்த்தையை அல்லது ஒரு வாக்கியத்தை புரிந்துகொள்வதற்கு அந்த வாக்கியத்தோடு இணைந்த படங்கள் உதவி செய்வது போல் வலது மூளை பயன்படுத்துபவர்கள் ஒவ்வொரு வார்த்தைகளையும் காட்சிப் படுத்திக் கொள்கிறார்கள் அந்த காட்சிப்படுத்துதல் என்பது அவர்கள் மூளைக்குள் ஒரு திரைப்படம் ஓடுவது போல பதிந்து விடுவதால் அதை வெளிப்படுத்துவதிலும் அவர்கள் ஒரு படைப்பாற்றல் மிக்க வெளிப்பாடாக வெளிப்படுத்துகிறார்கள்.உதாரணமாக வளது முளையை கண்டறிய எளிமையான ஒரு பயிற்சியை ஒரு வாரத்திற்கு ஏழு நாள் இரண்டு வாரத்திற்கு எத்தனை நாள் என்றால் அதற்கான விடையை 2 என்கிற என்னை 7 என்கிற என்னை பெருக்கி விடை காண்பவர்கள் பொதுவாக வழக்கமான இடது மூளையைப் பயன்படுத்துங்கள் என்று கொள்ளலாம். ஆனால் ஏழு கூட்டல் 7 என்கிற வகையில் பதில் சொல்லக் கூடிய மனிதர்கள் படைப்பாற்றல் மிக்க வலது மூளை பயன்படுத்தும் மேதைகள். இவர்கள்தான் ஓவியம் சிற்பம் இசை விஞ்ஞானம் போன்றவற்றில் சிறந்து விளங்குபவர்கள் ஆகவும் மாற்றி யோசிக்கும் திறன் மிக்கவர்களாகவும் எதிர்காலத்தில் வாழ்க்கையில் முன்னேறி வருகிறார்கள். ஆனால் வகுப்பறையில் இவர்கள் குறைந்த மதிப்பெண்களே பெறுபவர்களாக இருப்பதால் இவர்கள் பள்ளி அளவில் புறக்கணிக்கப்பட்டு நல்ல கலைஞர்களாக வரவேண்டிய ஆற்றல் வராமல் தடுக்கப்படுகிறது. படைப்பாற்றல் மிக்க இந்த வகை மனிதர்கள் 70 சதவீத மதிப்பெண்களை தாண்டுவதில்லை. ஆனால் இடது மூளையை பயன்படுத்தும் மனிதர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றாலும்கூட வாழ்க்கையில் சிறு தோல்வியைக் கூட தாங்கிக்கொள்ள முடியாத மனிதர்களாக இருக்கிறார்கள்.

ஆனால் படைப்பாற்றல் மிக்கவர்கள் படிப்பில் தடுமாறுகிறாற மனிதர்கள் மிகச்சிறந்த ஆளுமைகளாக கலைஞர்களாக விஞ்ஞானிகளாக இன்றளவும் வாழும் பல மனிதர்களை பல ஆளுமைகளை நம்மால் பட்டியலிட முடியும்

 இன்று பத்மபூஷண் விருது பெறுகிறார் சுந்தர் பிச்சை முதல் ஆகச் சிறந்த எழுத்தாளராக அறியப்பட்ட காலம் சென்ற கி ராஜநாராயணன் போன்றவர்களெல்லாம் எட்டாம் வகுப்பை கூட தாண்டுவதற்கு சிரமப்பட்டு இருந்தாலும்கூட படைப்பாற்றலில் உலகமே வியக்கும் அளவிற்கு எழுத்துத் துறையிலும் விஞ்ஞானத் துறையிலும் சாதித்த வரலாறு இதற்கு சான்றாகும் எனவே கண்களால் படிப்பது காதுகளால் படிப்பது போன்ற படைப்பாற்றலை நமது ஐம்புலன்களையும் சமநிலையில் பயன்படுத்தி பத்திரிக்கை மற்றும் ஊடகம் புகைப்படம் என எல்லாத் துறையிலும் இந்த பயிற்சியை தொடர்ச்சியாக மேற்கொண்டால் இப்பொழுது கூட நம்மால் மிகப்பெரிய அளவில் கதை கவிதை கட்டுரைகளை உலக அளவில் எழுதி புகழ் பெற முடியும். அதற்கு வயதும் ஒரு தடை அல்ல.

 

சார்ஜா புத்தக கண்காட்சியின் புக்கிஷ் விருது பெற்றவரும் அந்நியர்கள் என்ற நாவலை படைத்ததற்காக ரூபாய் ஒரு லட்சம் பரிசு பெற்ற நாவலாசிரியர் திரு சுப்ரபாரதிமணியன் அவர்களை பாராட்டும் இந்த நிகழ்வில் எனக்கும் ஓவியம் குறித்து எனது பகிர்வை இங்கே பதிவு செய்ய வாய்ப்பு அளித்தமைக்கு அனைத்து இலக்கிய உள்ளங்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்”

நிகழ்ச்சியில் மக்கள் மாமன்றத்தைச்சார்ந்த நிர்வாகிகள் சத்ருக்கன், சிவகுமார்பிரபு  மற்றும் பலர் பங்கு பெற்றனர் . கவிதை வாசிப்பில் து சோ பிரபாகர், அருணாசலம், நாதன் ரகுநாதன், ஒற்றைக்கை மாயாவி மனோகர் உட்பட பலர் பங்குபெற்றனர்.

சென்றாண்டுசிறந்த நாவலுக்கான “ அந்நியர்கள் “ நாவலுக்க்காக  சென்னை எழுத்து அறக்கட்டளை வழங்கிய ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெற்ற சுப்ரபாரதிமணீயன் அவர்களுக்குப் பாராட்டுதெரிவிக்கப்பட்டது. அந்நியர்கள் நாவலை பள்ளி ஆசிரியரும் கவிஞருமான பொன் சண்முகசுந்தரம் அறிமுகப்படுத்திப் பேசினார். சமீபத்தில் சார்ஜா புத்தக்க் க்ண்காட்சியில் புக்கிஷ் விருது பெற்ற சுப்ரபாரதிமணியனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.சத்ருக்கன் நன்றி கூறினார்

 

Series Navigationயாரே  பெரியோர்  ? மகாத்மா காந்தியின் மரணம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *