புத்தகக் காட்சி சிந்தனைகள்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 8 of 11 in the series 27 பெப்ருவரி 2022

 

அழகியசிங்கர் 

புத்தகக் காட்சி சிந்தனைகள் 1
 
 
புத்தகக் காட்சியில் அமர்ந்து இருக்கிறேன்
என் முன்னால்
கூட்டம்
போய்க் கொண்டிருக்கிறது
யாரும் என்னுடன் பேசவில்லை
 
************
 
புத்தகக் காட்சி சிந்தனைகள் 2
 
 
புத்தகக் காட்சியில்
எப்போதும்
நான் சிங்கிள் 
ஸ்டால்தான்
ஒவ்வொரு முறையும்
என் ஸ்டாலில்
ஸ்டால் கிடைக்காதவர்கள்
புத்தகத்தை அச்சடித்தவர்
மூட்டை நிறையப் 
புத்தகங்களை 
வைத்து விட்டுப் போகிறார்கள்
 
பின் யாரும் 
என்னிடம் 
வருவதில்லையே..
 
************
 
புத்தகக் காட்சி சிந்தனைகள் 3
 
 
புத்தகக் காட்சி
தொடங்குவதற்கு முன்
கொரோனா கொரோனா 
என்றார்கள்
 
இன்றைய கூட்டம்
பார்த்தால்
உள்ளுக்குள் பயம்
எட்டிப்பார்க்காமலில்லை
இன்றா நாளையா
எப்போது 
வரப் போகிறது
 
*******************
 
புத்தகக் காட்சி சிந்தனைகள் – 4
 
 
இந்தப் 
புத்தகக் காட்சியில்
ஸ்டாலில்
யாருக்கும்
தெரியாமல்
தூங்குவது எப்படி
என்று 
கற்றுக் கொடுக்கிறது
 
****************
 
புத்தகக் காட்சி சிந்தனைகள் – 5
 
 
காலையில்
தினம்தோறும்
தயிர்ச் சாதம் கட்டித்தருவாள்
 
புத்தகக் காட்சி
பரபரப்பை 
அவளும் சுமப்பாள்
தேவையில்லாமல்
பொதி சுமக்கும்
புத்தகப் பையை  நான்
சுமந்து செல்வதைப் 
பார்த்துப் பதற்றமடைவாள்
 
ஒருபோதும்
கேட்கமாட்டாள்
எவ்வளவு விற்றது
என்று. அவளுக்கும்
தெரியும் எனக்கும்
தெரியும்
 
***********
Series Navigationமெய்ப்பாடு  காலமுரணில் முகிழ்த்த கதைகள் (நூல்மதிப்புரை)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *