ஞாயிற்றுக்கிழமைகள்

This entry is part 3 of 13 in the series 24 ஏப்ரல் 2022
 
ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
 
அவன் பணிநிறைவு பெற்றுச்
சில மாதங்கள் ஓடிவிட்டன
 
ஒவ்வொரு நாளும்
கனக்கின்றன அவனுக்கு …
 
இருளில் நீந்தி நீந்தி
மனக்கரங்கள் சோர்ந்தன 
எல்லா நாட்களும்
ஞாயிற்றுக்கிழமைகள் ஆயின
 
நட்பின் திசையில்
ஒரே மயான அமைதி 
 
ஒளி மலையாய்
எதிர் நிற்கும் பகலை
எவ்வளவு நேரந்தான்
மென்று கொண்டிருப்பது ? 
 
புத்தக வாசிப்பில் மட்டும்
மங்கலான ஒளி
அவனுக்கு வழி காட்டுகிறது.
 
                     +++++
Series Navigationநூலகம்சொல்வனம் இணையப் பத்திரிகையின் 268 ஆம் இதழ்
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *