திருப்பூரியம் கருத்தரங்கம்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 10 of 12 in the series 15 மே 2022

 

 

 

திரைப்பட இயக்குனர் புகழ் சிறப்புரை ஆற்றினார் . அப்போது அவர்            “ இலக்கியமும் ,திரைப்படமும் இன்றைய கலாச்சாரத்தின் இரு கண்கள். இலக்கிய வாசிப்பு மனிதர்களை மேம்படுத்தும். சிந்தனத் தளத்தை விரிவாக்கும். வாசிப்பதும் எழுதுவதும் மனிதனை மேம்படுத்தும் முயற்சிகள் “ என்று குறிப்பிட்டார்.  

 

திருப்பூரியம் என்றத் தலைப்பிலான திருப்பூர் வாழ் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் திருப்பூர் மையப்படைப்புகள் பற்றியக் கருத்தரங்கம் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி திருப்பூர், தமிழ் உயராய்வுத்துறை நடத்தியது 11/5/222 அன்று சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி திருப்பூரில் நடைபெற்றது 

 

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் 20, நாவல்கள், 16 சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 80 நூல்களை எழுதி  வெளியிட்டுள்ளார். அதில் 10க்கும் மேற்பட்ட நாவல்களும் சுமார் 90 சிறுகதைகளும் 100க்கும் மேற்பட்டக்கட்டுரைகளும் திருப்பூரை மையமாகக் கொண்ட்தில் அடங்கும். அந்த திருப்பூர் மையப்படைப்புகள் பற்றிய கருத்தரங்கம்  சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி திருப்பூரில் நடைபெற்றது 

கல்லூரியின் முதல்வர் வ.கிருஷ்ணன் தலைமை தாங்கி சுப்ரபாரதிமணியன் எழுதிய திருப்பூர் மையமான சில சிறுகதைகள் பற்றி விரிவாகப் பேசினார். பேரா.மணிவண்ணன், பேரா. ஜெய்சிங்க், பேரா.. நா.பாலசுப்ரமணியம் , பேரா. இரா செங்கமுத்து

 தீபன், சாமக்கோடாங்கி ரவி, சி.சுப்ரமணியம், அழகுபாண்டி அரசப்பன், நாதன் ரகுநாதன், கல்வியாளர் முத்துச்சாமி உட்பட பலர் அவரின் வெவ்வேறு திருப்பூர் மையப் படைப்புகள் பற்றி விரிவாக எழுத்துரைத்தனர்.தமிழிலக்கிய மாணவர்கள் சுப்ரபாரதிமணீயன் படைப்புகள் பற்றியக் கருத்துக்களை வழங்கினர்

சுப்ரபாரதிமணியன் ஏற்புரை நிகழ்த்தினார்.

திரைப்பட இயக்குனர் புகழ் சிறப்புரை ஆற்றினார் . அப்போது அவர்            “ இலக்கியமும் ,திரைப்படமும் இன்றைய கலாச்சாரத்தின் இரு கண்கள். இலக்கிய வாசிப்பு மனிதர்களை மேம்படுத்தும். சிந்தனத் தளத்தை விரிவாக்கும். வாசிப்பதும் எழுதுவதும் மனிதனை மேம்படுத்தும் முயற்சிகள் “ என்று குறிப்பிட்டார்.  

குறும்பட இயக்குனரும் தமிழிலக்கிய மாணவருமான சின்ராஜ் நன்றியுரை வழங்கினார்

 

சுப்ரபாரதிமணியனின் திருப்பூர் மையப்படைப்புகள் பற்றியக்கட்டுரைகள் அடங்கிய “ திருப்பூரியம் “ மின் நூல் வெளியிடப்பட்டது

 

செய்தி: வழக்கறிஞர் ரவி, திருப்பூர்

 

Series Navigationஎச்சில் சீட்டுகள்திருப்பூரியம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *