கம்பன் எழுதாத சீதாஞ்சலி
சி. ஜெயபாரதன், கனடா
******************************
பத்தாயிரம் பைந்தமிழ்ப் பாக்களில்
வில்லாதி வீரன் ராமனை,,
உத்தம ராமனாய்,
உன்னத ராமனாய் உயர்த்திய
கம்பன் கை தளர்ந்து,
எழுத்தாணி ,
ஓலையில்
எழுத மறுத்து அழுதது !
உச்சத் துயர் நிகழ்ச்சி
சீதைக்கு
இரண்டாம் வனவாசம் !
எதிர்பாரா
இறுதிப் பயணம் !
கம்பன் எழுதாமல்
கை விட்ட ராம கதை
உத்திர காண்டம்,
சீதாஞ்சலி !
சிங்காதனம் ஏறிய ராமன்
ஜெகம் புகழும்
கம்ப ராமன்
சீதா ராமன் அல்லன் !
தீக்குளித்த தூயவளை
நம்பாதவன்,
மாற்றான்
மடியில் வைக்கப் பட்டு
வேற்றான்
மனையில் சிறைப் பட்டவள்.
கறை பட்ட சீதா
பொது மக்கள் புகார் !
பாஞ்சாலி சபதத் துக்கு
கண்ணனால்
கீதை சொல்லப் பட்டது.
ஆனால், அபலை
சீதாவுக்கு,
கர்ப்பிணி மாதுக்கு,
தீர்ப்பில்லா
ஆயுள் தண்டனை !
இரண்டாம் வனவாசம் !
சீதாஞ்சலி !
******************************
******************************
- கொலுசு இதழ்
- விழிப்பு
- மாமல்லன்
- காற்றுவெளி(கவிதைச் சிறப்பிதழ்)ஆனி 2022
- கம்பன் எழுதாத சீதாஞ்சலி
- தொட்டனைத்து ஊறும்…
- இளமை வெயில்
- மோ
- வாழ்விற்கு நெருக்கமான கதைகள்
- எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ?
- நாசாவின் விண்வெளித் தேடல் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன்
- அடம் பிடிக்கிறது அடர்ஒளி
- வடகிழக்கு இந்தியப் பயணம் : 12
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- திரும்பத்திரும்பத் துகிலுரியப்படும் திரௌபதி
- பேராசிரியர் மௌனகுருவின் இரண்டு நூல்கள் !
- பயணம் – 6