பெ.விண்ணக வேளாங்கன்னி வின்சி
வின்சியோட நாட்டுப்புறப்பாடல்!
(2020 ஆண்டு எழுதியது.)
தலைப்பு:- விடமாட்டேன் மாமா!
மல்லியத்தான் நாங்கேட்டே
கொத்தமல்லி வாங்கிவந்த
கொட்டிவச்சறிவே எம்மாமா
கொழந்தபுள்ளயா எனபாக்குறமாமா
கட்டிக்கத்தான் நாஞ்சொன்னே
கட்டிடந்தான் கட்டிப்புட்டமாமா
ஒட்டிக்கிடத்தான் நீகூப்பிட்டே
ஒட்டாமல் ஓடிட்டேனேமாமா
உம்மாவொன்னுதான் வேணுன்னே
உப்புமாகிண்டிவந்தேனே நாமாமா
கோட்டிபுல்லுதா விளையாடுவேன்மாமா
இரட்டபுள்ள நீகேட்குறியேமாமா
அடபுரியாத புள்ளயென்னவச்சி
அன்னாடம் எப்படிதான்
காலத்த கடக்கறீயோமாமா
கண்டபடி சமாளிக்கறீயேமாமா
கோலம்போட நாஞ்சொன்னா
கோலாகலமாக்கிடுவியே எம்மாமா
சுட்டிபுள்ள நானாகயிருந்தாலும்
எட்டிப்போக விரும்பலமாமா
அச்சந்தான் தடுக்குதுமாமா
கூச்சந்தான் விடலமாமா
என்னென்னவோ பேசுறீகளேமாமா
எக்குத்தான்புரியல ஆமாராமா!
கணவனா தாலிக்கட்டினாலும்
தொப்புள்கொடி பிள்ளையா
கண்ணுங்கருத்துமா பாக்கும்
தாயாத்தாநீயும் கவனிச்சமாமா
அத்தானு ஒன்னக்கூப்பிட்ட
அம்மாவாத்தான் மாறிப்புட்டே
யாருகண்ணு பட்டுச்சோ
ஊரார்க்கண்ணு சுட்டுச்சோ
கேப்பார்பேச்சி கேக்குறமாமா
கேவலமானவங்கக்கூட கூடுறமாமா
மொதபோலயிப்போ நீயில்லமாமா
மொத்தமாவே விடமாட்டேன்மாமா
_பெ.விண்ணக வேளாங்கன்னி வின்சி.