ஆர். வத்ஸலா
முறுக்கு சாப்பிட்டால்
கோபித்துக் கொள்கிறது
பல்
இனிப்பு சாப்பிட்டால்
நாக்கு ருசிப்பதற்கு முன்
ஏறிவிடுகிறது
சர்க்கரையின் அளவு
ரத்தத்தில்
கனவில் வந்து பயமுறுத்தக் கூடிய அளவில்
பட்டாசு வெடிக்கும் சப்தம் கேட்டாலே
காது பிராது கொடுக்கிறது
மூச்சுத் திணறலுக்கு பயந்து
மூடிய ஜன்னல் வழியே
ஒளி பட்டாசை பார்த்தால்
கழுத்து வலிக்கிறது
பேரப் பிள்ளைகள் வாங்கிக் கொடுத்த
புதுப் புடவை உடுத்தினால்
நடமாட்ட சுதந்திரம் குறைகிறது
தினம் தினம் செய்வது போல்
சௌகரியமான பழைய நைட்டி உடுத்தி
சட்னியற்ற இட்லி
சர்க்கரையில்லா காபி
ராகி ரொட்டி
கீரை
மோர்
சாப்பிட்டு
வீட்டினுள் நடைப் பயிற்சி செய்து
இணைதிரை பார்த்து
புலனம் மூழ்கி…
வெறும் எண்ணைக் குளி
தீபாவளியாகுமா?
- அவரவர் நிழல்
- பனிபொழியும் தேசத்தில் பத்து நாட்கள் – நூல் வெளியீட்டு விழா
- அழைப்பு
- நம்பிக்கை நட்சத்திரம்
- காலம் மாறலாம்..
- பத்தினி மாதா
- கவிதைத் தொகுப்பு நூல்கள்
- அந்திம காலத்தின் இறுதி நேசம்’ சிறுகதைத் தொகுப்புக்காக, எம்.ரிஷான் ஷெரீபுக்கு ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’
- விடியலா ? விரிசலா ?
- தீபாவளி
- வெற்றிலைத்தட்டில் ஒரு பாக்குவெட்டி
- வியட்நாமிய நீர்ப்பாவைக் கூத்து
- குழு பாலியல் உறவும் சமூகக் கேடுகளும்