ஆர். வத்ஸலா
மொழி1
நீயும் நானும்
தொடர் பேச்சில்
தொலைத்த
மௌனத்திற்காக
ஏங்கியபடி
—-
மொழி 2
முன்பொரு காலத்தில்
நாமிருவரும்
ஒரே மொழியில்
பேசியதாக
நினைவு
அப்போது நாம்
மௌன மொழியிலும்
பேசுவதுண்டு
பின்பெப்போதோ
நமது மொழிகள்
பிரிந்தன
பிரிந்தது தெரியாமல்
திடீரென
உன் மொழி எனக்கும்
என் மொழி உனக்கும்
புரியாமல் போயிற்று
பின் வந்த மௌனம்
மொழி தொலைத்து
நின்றது
சுமக்கிறோம்
அவரவரே
இன்று
அவரவர்
மொழிகளையும்
அவரவர்
மௌனங்களையும்