அழாத கவிதை

This entry is part 8 of 8 in the series 5 பெப்ருவரி 2023

ஆர். வத்ஸலா “நீங்க இருந்தா நிறுத்த மாட்டா” வெளியில் தள்ளி கதவை சாத்தினாள் இரக்கமற்ற ஆசிரியை தெருக்கோடி போகும் வரை    கதறல் அம்மா… தாத்தா…   எங்கள் வயிறு கலங்க திரும்பியதும்  அம்மா கேட்டாள்  “அழுதெயா?” “கொஞ்சூண்டுதான்” என்றது என் குஞ்சு  கன்னத்தில் காய்ந்துபோன கண்ணீர் கோட்டுடன்.

உயிரின மூலவிகள் பூமி தோன்றிய உடனே உருவாகி இருக்கலாம்

This entry is part 6 of 8 in the series 5 பெப்ருவரி 2023

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 3.8 பில்லியன் ஆண்டுகட்கு முன் உயிரின மூலவிகள் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளதை இப்போது காண்பது அதிர்ச்சியாக இருக்கிறது.  ஏறக் குறைய பூமி தோன்றிய உடனே உயிரன மூலங்கள் உருவாகி விட்டன. பிறகு ஏதுவான ஆக்கக் கூறுகள் இணைந்த பின், உயிரினங்கள் உடனே உண்டாயின. பிரபஞ்சத்தில் உயிரினப் பெருக்கம் மிகுதியாக இருக்கலாம்.  எளிய உயிர் மூலவிகள் உடனே தோன்றி, அவை தானாய் இயங்கி, சூரிய  ஒளிச்சேர்க்கைத் [Photosynthesis] தகுதி பெற பல மில்லியன் ஆண்டுகள் எடுத்தன. மார்க் ஹாரிஸன் [பேராசிரியர், பூதள இரசாயனம், காலிஃபோர்னியா […]

தினை – நாவல் ( பூர்வாங்கம் )

This entry is part 5 of 8 in the series 5 பெப்ருவரி 2023

இரா முருகன் சில குறிப்புகள்  1) தினை என்பது சிறு தானியம் -foxtail millet. இந்த 2023-ஆம் ஆண்டு உலகச் சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. தினை நாவல் அந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெறும் 2) தினை நாவல் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்போதே திண்ணையில் பிரசுரமாக இருக்கிறது.  நாவல் ஆசிரியர் என்ற முறையில் எனக்கும் வாசகர்களுக்கும் புது அனுபவமாக இது இருக்கலாம் 3)நாவலின் மொழிநடை பண்டிதத் தமிழிலிருந்து பாமர மொழிப் பயன்பாடு வரை பரவியிருக்கும் 4)தினை ஃபாண்டஸி, மாய யதார்த்தம், சர்ரியலிசம், அறிவியல் […]

ஓ மனிதா!

This entry is part 3 of 8 in the series 5 பெப்ருவரி 2023

ருத்ரா சாட்ஜிபிடி எனும் செயற்கை மூளை பல்கலைக்கழகம் எனும் அடிப்படைக்கட்டுமானத்தையே  அடித்து நொறுக்கி விட்டது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் இந்த செல்லமான பூனைக்குட்டியை வைத்துக்கொண்டு புயல் கிளப்புகிறார்கள். உண்மை அறிவு காணாமல் போய்விட்டது. செயற்கை அறிவின் இந்த‌ கருவி வெறும் மண்ணாங்கட்டியைக்கூட‌ நோபல் பரிசு  வாங்க வைத்து விடும். மனிதர்களின் மூளையின் நிழலே இனி ஆட்சி செய்யும். அமெரிக்க பள்ளிக்கூடங்கள் மாணவர்கள் இந்த‌ சேட்ஜிபிடியை பயன்படுத்த தடை  விதித்துக்கொண்டிருக்கிறது. கணினியுகம் க‌ண்மூடித்தன்மான‌ ஒரு யுகத்துள் விழுந்து […]

இரு கவிதைகள்- கு.அழகர்சாமி

This entry is part 2 of 8 in the series 5 பெப்ருவரி 2023

கு.அழகர்சாமி (1) பாழ் ஒன்றும் இல்லாதிருத்தலே இருத்தலாகிய இருத்தல் பிடிபடாது போய்க் கொண்டே இருத்தலின் வியாபகமா? ஒன்றும் விளையாதவைகள் வேர் விட்டு கிளைத்து விளைந்த வெற்றின் வெறுங்காடா- விதானமில்லாதலிருந்து தனக்குத் தானே தூக்கிலிட்டுக் கொண்ட சூன்யம் எதுவோ அதுவா- பாழ்? (2) பொட்டல் ஊரில் தெருத் தெருவாய் சைக்கிள் விட்டுத் தேடினாலும் தேட முடியுமா, இப்போது ஊராகிப் போன, சிறு வயதில் நான் வியர்க்க வியர்க்க சைக்கிள் ஓட்டிப் பழகிய தெருக்களென்று இல்லாத பொட்டலின் ஒரே தெருவில்லாத […]

மொழி

This entry is part 1 of 8 in the series 5 பெப்ருவரி 2023

ஆர். வத்ஸலா மொழி1 நீயும் நானும் தொடர் பேச்சில் தொலைத்த மௌனத்திற்காக ஏங்கியபடி —- மொழி 2 முன்பொரு காலத்தில் நாமிருவரும் ஒரே மொழியில் பேசியதாக நினைவு  அப்போது நாம் மௌன மொழியிலும் பேசுவதுண்டு பின்பெப்போதோ நமது மொழிகள்  பிரிந்தன பிரிந்தது தெரியாமல் திடீரென உன்  மொழி எனக்கும் என் மொழி உனக்கும் புரியாமல் போயிற்று பின் வந்த மௌனம் மொழி தொலைத்து நின்றது சுமக்கிறோம் அவரவரே இன்று அவரவர் மொழிகளையும் அவரவர்   மௌனங்களையும்

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் 

This entry is part 4 of 8 in the series 5 பெப்ருவரி 2023

அங்கம் –1 காட்சி –2 பாகம் : 5 [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ [ வெனிஸ் கருமூர்க்கன் ] ++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது] மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது] காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது] ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன் […]

மாடிப்படிமேல்

This entry is part 7 of 8 in the series 5 பெப்ருவரி 2023

பன்னிரு படி ஏறியே மாடியேறும்போழ்துஉன்னிப்பாய் பார்க்கும் அப்பொருள் ஜாக்கிரதைநீ பார்க்காவிடினும் அது அங்கே இருக்கும்ஊசியாய் பற்களுடனும் பால் முழியுடனும்உன்னுடைய சதைகளை பிய்த்துத்தின்ன ஆவலாய்எதற்காக மேலே போகிறாய்?