அகழ்நானூறு 17

This entry is part 2 of 18 in the series 5 மார்ச் 2023

சொற்கீரன்

வெண்குடைத் திங்கள் பசலை பூத்து

பகலழித் தோற்றம் நோன்ற தகைமையில்

வட்டில் சோறு பாலொடு வழிய‌

விரல் அளைக்கோடுகள் வரிய வரிய‌

சிதர்சிதர்ந்து பசி இறந்து கண்கள் என்னும்

மைஆர் வெஞ்சுரம் அத்தம் நீள் அழுவத்து

கசிநீர் விசும்பில் கனவின் எரிந்தாள்.

கடையல குரலம் கழையூடு கஞல‌

அடர்வெங்கானம் நடைபயில் உழுவை

பைந்நிணம் கிழிக்க பாய்தந்தன்ன‌

பிரிதுயர் பிய்த்த உயிர்நைந்தாள் என்னே.

யா மரத்துச் சாமரத்தன்ன அணிநிரல் பூக்களின்

படுநிழல் ஆங்கு வேழம் கிடந்த உருசெத்து

வெரூஉம் அழல் அகைந்த அடல் ஆற்றின் கவலை

கடாத்து நீத்தவன் முள்வழி படர்ந்து

உள் உள் உருகுவள் அளியள் தானே.

Series Navigationபடபடக்கிறதுநினைவில் படபடத்த தட்டான் பூச்சி
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *