60 ஆண்டுகால “வடக்கன்” அரிப்பு

This entry is part 13 of 13 in the series 12 மார்ச் 2023

திராவிடப்புண்ணாக்கன் வடக்கத்தியானை விரட்டப் புறப்பட்டிருப்பது ஏறக்குறைய அண்டர்வேருக்குள் நெருப்பை அள்ளிக் கொட்டிக்கொள்வதற்குச் சமமானது. இங்கே வடக்கத்தியானை விரட்டியடித்தால், வடக்கே தமிழனை விரட்டியடிப்பார்கள். அதன் மூலமாக அரசியல் லாபம் பார்க்கலாம் என்று நினைப்பது பேராபத்தில் முடியும் என்பதினை திராவிடப்புண்ணாக்கன் உணருவது நல்லது. இல்லாவிட்டால் சிக்கல்தான்.

தமிழகத்திற்கு வெளியே, இந்தியாவெங்கும் ஏறக்குறைய இரண்டு கோடித் தமிழர்கள் வசிக்கிறார்கள். தோராயமாக பெங்களூரில் பத்து இலட்சம், மும்பையில் முப்பது இலட்சம், தில்லியில் பதினைந்து, பீகாரில் ஐந்து எனப் பரவலாக தமிழர்கள் வசிக்காத இடமே இந்தியாவில் இல்லை. தமிழகத்தில் வைக்கும் நெருப்பு நேரடியாக அவர்களைத்தான் சுட்டுப் பொசுக்கும் என்பதனை ஆளும் கட்சி மூடர்கள் அறிந்து வைத்துக் கொள்வது நல்லது.

இன்றைய தமிழ் இளைஞன் எவனும் உடல் வளைத்து வேலை செய்வதாக இல்லை. சும்மாவேனும் உட்கார்ந்து, சினிமாக் கதைகள் பேசி வெட்டியாக வாழ்வது மட்டுமே வாழ்க்கை என்பது அவன் எண்ணம். பெரும்பாலோர் குடிக்கு அடிமையானவர்கள். மத்திய வயதினர்களில் ஏராளமானவர்கள் மதுவுக்கு அடிமையாகி நடைபிணமாக வாழ்கிறார்கள் அல்லது செத்துப் போய்விட்டார்கள். இருக்கும் வேலைக்கு ஆள் கிடைக்காமல் தமிழக தொழிலதிபர்கள் தவிக்கிறார்கள். சந்தேகமிருப்பவர்கள் திருப்பூர் தொழிலதிபர்களைக் கேட்டுப் பாருங்கள். கண்ணீர் விடுவார்கள்.

விவசாயத்திற்கு ஆட்களே கிடைப்பதில்லை. வருகிற உள்ளூர்க்காரனை அதட்டி வேலைவாங்க முடிவதில்லை. எனவே வடக்கத்தியான்களைத்தான் வேலைக்கு எடுத்தாகவேண்டிய நிலைமை இன்றைக்கு இருக்கிறது. வடக்கத்தியான்களை விரட்டியடித்தால் தமிழகத்தின் எல்லாத் தொழில்களும் முடங்கிப் போய்விடும்.

ஏற்கனவே சொன்னபடி, ஹோட்டலில் வேலை செய்வது கேவலம். விவசாயம் செய்வது கேவலம். உடல் உழைப்பு செய்வது மகா கேவலம் என்கிற எண்ணம் வந்தபிறகு தமிழ் இளைஞர்கள் எந்தவேலையையும் செய்வதில்லை. ஆனால் அப்பனின் சொத்தை விற்று, அம்மாவின் தாலியை அடமானம் வைத்து துபாய் விசா வாங்கிப் போய் அங்கே அதே “கேவலமான” வேலையைச் செய்கிறார்கள். ஒட்டகம், ஆடு மேய்ப்பதில் துவங்கி, அரபிக்காரனுக்கு அடிமை வேலை செய்வது வரையில் செய்கிற தமிழ் இளைஞனுக்கு, தன் தாய்நாட்டில் அதேவேலையைச் செய்ய எதற்குத் தயக்கம் என்று எனக்குப் புரியவில்லை.

பிஹாரியை விரட்டினால் பிஹாரி சும்மா இருக்கமாட்டான். அதையெல்லாம் விட நிதிஷ்குமார் போன்ற சுயநலவாதிகள் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள எதையும் செய்யத் தயங்காதவர்கள். தேவைப்பட்டால் தமிழர்களை அங்கிருந்து அடித்துத் துரத்தத் தயங்கமாட்டார்கள். பிஹார் மட்டுமில்லை வேறு எங்கு தமிழர்கள் இருந்தாலும் அவர்கள் வாழ்வில் மண்ணை அள்ளிப்போடுவது மட்டுமே திராவிடப்புண்ணாக்கனால் முடியும்.

இலங்கையில் சிங்கள்ன் தமிழனை அடித்துவிரட்டினால் அது இனவெறி. அதேசமயம் திராவிடப் புண்ணாக்கன் பாப்பானையும், வடக்கத்தியானையும் அடித்து விரட்டினால் அது இனப்பற்று! என்ன மாதிரியான மூடர்கள் இவர்கள் என்பதே எனக்குப் புரிவதில்லை.

ஆனால் ஒன்று, வடக்கத்தியானை இவர்கள் விரட்டியடித்தால் இந்தியாவெங்கும் மு.க. குடும்பம் வாங்கிக் குவித்து வைத்திருக்கிற சொத்துக்களெல்லாம் அம்போவாகப் போய்விடும். தேடித்தேடி அடித்து நொறுக்குவார்கள் என எச்சரிக்கிறேன்.

Series Navigationசிலிக்கான்வேலி வங்கி திவால்
narendran

பி எஸ் நரேந்திரன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    R. Sathyanat says:

    திரு. நரேந்திரன் அவர்களின் 60 ஆண்டு கால வடக்கன் அரிப்பு கட்டுரையில் கூறப்பட்டிருக்கும்
    கருத்துக்கள் சரியானதே.. முற்றிலும் எதிர்மறையான அரசியல்தான் தமிழ்நாட்டில் நிலவுகிறது.
    லாவண்யா சத்யநாதன்

  2. Avatar
    லதா ராமகிருஷ்ணன் says:

    வணக்கம். வட இந்தியர்கள் குறித்த வெறுப்புணர்வை எதிர்க்கும், அத்தகைய வெறுப்புணர்வுக்கு எதிர்வினையாற்றும் எழுத்தாக்கமாக எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரை அதேயளவு தமிழர்கள் மீது வெறுப்பைக் கக்கியிருப்பது அவலமானது. தமிழர்களெல்லாம் சோம்பேறிகள் என்பதாய் எத்தனையெத்தனை பொத்தாம்பொதுவான வெறுப்பைக் கக்கும் கருத்துகள் இக்கட்டுரையில். மறைமுகமாய் வட இந்தியர்கள் குறித்த எதிர்ப்புணர்வை, வெறுப்புணர்வைத் தூண்டும் விதத்தில் தமிழகத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள். எம்.பிக்கள் மற்றும் பிறவேறு கட்சிகள், இயக்கங்கள் என பலரும் தொடர்ந்து பேசிவருவது கண்டனத்திற்குரியது. நிலைமை கைமீறிப் போகும் முன்பாகவே இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்து (கொண்டுவரப்பட்டு) இந்திய மக்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வாழ, வேலை பார்க்க அரசியலமைப்புச் சட்டத்தின்படி உரிமை பெற்றவர்கள் என்ற விவரம் பரவலாக்கப்பட்டு, அவ்வகையில் பிற மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பேற்புடையன மா நில அரசுகள் என்ற உண்மையும் பரவலாகத் தெரியவந்துள்ளது வரவேற்கத்தக்கது. இதில், பிற மாநிலங்களில் இருக்கும் தமிழர்கள் தாக்கப்படுவார்கள் (தாக்கப்படவேண்டும் என்பது உட்குறிப்போ என்று ஐயுறும் அளவுக்கு) என்று திரும்பத் திரும்பக் கட்டுரையாளர் அச்சுறுத்துவது தேவையற்றது. முறையற்றது. இப்படி அவரவர் தங்கள் பாதுகாப்பான இடங்களிலிருந்து எதையாவது எழுதிவிடுவதால் எளிய உழைக்கும் மக்களுக்குத்தான் பாதிப்பு. வார்த்தைகள் பெரிய ஆயுதங்கள் என்பார்கள். Sensitive Subjects குறித்து எழுதுபவர்கள் தங்கள் எழுத்தில் நிதானமாக இயங்கவேண்டியது அவசியம்.

  3. Avatar
    லதா ராமகிருஷ்ணன் says:

    ஒரு தவறை இன்னொரு தவறு நேர்செய்துவிடாது. வட இந்தியர்களை மதிப்பழிப்பது, அவர்களைப் பற்றிய வெறுப்புணர்வைப் பரவலாக்குவது எவ்வளவு தவறோ தேவையற்றதோ அதற்கு எதிர்வினையாற்றுவதாய் தமிழர்களை ஒட்டுமொத்தமாய், பொத்தாம்பொதுவாய் மதிப்பழிப்பதும் எள்ளிநகையாடுவதும் அதேயளவு தவறான அணுகுமுறை. இந்தக் கட்டுரையில் அத்தகைய தேவையற்ற அணுகுமுறை வெளிப்படுகிறது. இது வருந்தத்தக்கது; கண்டிக்கத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *