This entry is part 9 of 14 in the series 19 மார்ச் 2023

லாவண்யா சத்யநாதன்


பம்பரமாய் சுழலும்
தலையுடனிருந்த ஒருவன்
உதார்கள் கப்சாக்கள் சவடால்கள்
மற்றும் மாயங்களை
நாற்சந்திக் கூட்டத்தில்
எருமைக்குரலில் பரப்பிக் கொண்டிருந்தான்.
பாதி உண்மைகளை, மெய்போலும் பொய்களை
வரலாறாக்கும் ஒருவன்
பிரசங்கியின் கப்சாக்களில் ஒன்றின் மீதான
புகாரை நிரப்பினான் தினசரியில்.
காகிதம் தினம் தின்று கழிசடையான ஒருவன்
ஊர்தின்னி மாசிலாமணியை உசுப்பிவிட்டான்.
கடலின் உப்புக்கும் காற்றின் நச்சுக்கும்
ஆண்மலடுக்கும் ஆன்லைன் ரம்மியாடிகளின் தற்கொலைக்கும்
எருமைக்குரல் காரணமென்று தீக்குச்சியைக் கொளுத்தி
வேலாயுதம் தண்டாயுதம் இருவரிடம் தந்தான் ஊர்தின்னி.
நகர்நடுவில் தடியர் கூட்டம் கூடலாச்சு.
போக்குவரத்து நின்னு போச்சு
கடைகள் சேதமாச்சு. கார்கள் எரிஞ்சு போச்சு.
அப்பிராணிகள் இரண்டு சவமாச்சு
உடலில் பாதி தெரியும் உடையில்
கடைவீதிக்குச் சென்ற ஆண்டிக்கு சேலை பறிபோச்சு.
பேச்சாளன் அப்படி என்ன பேசினான்?
ஊர்தின்னியிடம் கேட்டால்
லொள்ளுபண்ண நாயைக் கேளென்றான்.
நாய் மப்பிலிருந்தது.
—லாவண்யா சத்யநாதன்.

Series Navigationஉறவுஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 11